பெண்களுக்கு இந்த இடத்தில் அதிக கொழுப்பு இருந்தால் ஆபத்தா..?

முப்பது வயதைக் கடந்த பெண்களுக்கே அதிகமாக இந்தப் பிரச்னை தாக்குவதால் அவர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் அவசியம் என்கிறது ஆய்வு.

news18
Updated: July 18, 2019, 10:31 PM IST
பெண்களுக்கு இந்த இடத்தில் அதிக கொழுப்பு இருந்தால் ஆபத்தா..?
உடல் பருமன்
news18
Updated: July 18, 2019, 10:31 PM IST
பெண்களுக்கு உடலில் கொழுப்பு எளிதில் சேர்ந்துவிடும். அதனால்தான் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் விரைவில் வயதிற்குப் பொருந்தாத உடல் பருமனை அடைந்து விடுவார்கள். இதற்கு உணவு மட்டுமல்ல. உடல் சார்ந்தும், மனம் சார்ந்து பல பிரச்னைகளை முன் வைக்கின்றனர்.

அப்படி பெண்களுக்கு உடலில் சில இடங்களில் கொழுப்பு சேர்ந்தால் அவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று ஆய்வுக் கட்டுரைகள் கூறுகின்றன. சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வில் மாதவிடாய் சுழற்சி நின்ற பெண்களுக்கு அதிகமாக தொடையில் கொழுப்பு சேர்வதாகவும், அவர்களுக்கு இதய நோய் அதிகமாக தாக்குவதில்லை என்றும் கூறியுள்ளனர்.

அதேசமயம் இதய நோயால் பாதிக்கப்பட்ட பெண்கள் பெரும்பாலானோருக்கு கால்களைக் காட்டிலும் வயிற்றில் அதிக கொழுப்பு கொண்டவர்களாக இருந்துள்ளனர். இதை யூரோபியன் ஹார்ட் ஜர்னல் வெளியிட்டுள்ள ஆய்வில் குறிப்பிட்டுள்ளது.இந்த இடத்தில் மற்றொரு எச்சரிக்கையையும் ஆய்வாளர்கள் முன் வைக்கின்றனர். அதாவது ஆப்பிள் உடல் அமைப்புக் கொண்ட பெண்கள் உடனடியாக தொப்பையைக் குறைக்க வேண்டும் என்று கூறுகின்றனர்.

ஆனால் இதயப் பிரச்னை, பக்கவாதம் போன்றவற்றால் அதிகம் பாதிக்கப்படுவதற்கான காரணம் என்ன என்பது குறித்து இன்னும் ஆழமான ஆய்வு தேவைப்படுவதாகவும் கூறியுள்ளனர்.

இந்த ஆய்வில் 18 முதல் 25 வயதிற்கு உட்பட்ட 2,600 பெண்களை ஈடுபடுத்தியுள்ளனர். அதில் இடுப்பு , தொடையில் அதிகக் கொழுப்புக் கொண்ட பெண்களைக் காட்டிலும் வயிற்றில் அதாவது தொப்பை அதிகமாகக் கொண்ட பெண்களுக்குத்தான் அதிக அளவிலான இதயப் பிரச்னை இருப்பது தெரியவந்துள்ளது.அதேசமயம் முப்பது வயதைக் கடந்த பெண்களுக்கே அதிகமாக இந்தப் பிரச்னை தாக்குவதால் அவர்கள் தங்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருத்தல் அவசியம் என்கிறது ஆய்வு.

"பெண்ணின் உடல் அமைப்பு என்பது அவர்களுக்கு அதிகமாக கொழுப்பு எங்கு சேர்கிறதோ அதைப் பொருத்தே அமைகிறது. இவற்றைக் கரைக்க எந்த மாதிரியான உணவுப் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும் என்ற ஆலோசனைக்கான ஆய்வு இன்னும் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. இருப்பினும் மருத்துவரின் ஆலோசனைப் படி உங்கள் உடல் எடையைக் கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள உணவுப் பழக்கத்தை மாற்றி அமைப்பது அவசியம்" என ஆய்வின் பேராசிரியர் கூறியுள்ளார்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: July 18, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...