நமது உடலின் வளர்சிதை மாற்றத்தை சீராக்கும் உறுப்பு கல்லீரல், மது, தவறான உணவு, தூக்க மாற்றங்கள் மற்றும் பலவற்றால் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை தேர்வுகளால் பாதிக்கப்படுகிறது. அதிகமாக மது குடிப்பவர்களுக்கு எளிதில் கல்லீரல் பாதிப்படையும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மது அருந்துவதால் உடலில் உள்ள பல உறுப்புகள் ஒவ்வொன்றாக பாதிக்கப்படும். இதில் கல்லீரல் தான் முதலில் பாதிக்கப்பட்டு, ஒரு கட்டத்தில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். உலகம் முழுவதும் மது அருந்துவோரின் எண்ணிக்கை ஒரு பக்கம் கிடுகிடுவென அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மது அருந்துவதால் கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் கல்லீரலை பாதிக்காமல் மது அருந்த ஏதேனும் அளவீடுகள் உள்ளதா? என பிரபல மருத்துவர் தெரிவித்துள்ள கருத்துக்களை பார்க்கலாம்..
குருகிராம், மேதாந்தா மருத்துவமனையில் உள்ள கல்லீரல் மாற்று மற்றும் மறுஉற்பத்தி மருத்துவ நிறுவனத்தின் தலைவர் டாக்டர். அரவிந்தர் சிங் சோயினி அளித்துள்ள பேட்டி ஒன்றில், மதுவின் தாக்கம் கல்லீரலுக்கு பாதுகாப்பான அளவில் உள்ளதா? என்பது குறித்த விஷயங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.
also read : மல்டி வைட்டமின்கள் என்றால் என்ன..? அதில் கட்டாயம் இருக்க வேண்டிய ஊட்டச்சத்துகள்..!
மது அருந்துபவர்களுக்கும், கல்லீரல் ஆரோக்கியத்திற்கும் இடையிலான உறவு மிகவும் சிக்கலானது. ஒருவர் அதிக ஆல்கஹால் உட்கொண்டால் அது நிச்சயம் கல்லீரலை பாதிக்கும். மிதமான அளவு மது அருந்துபவர்களும் கூட பாதிக்கப்படலாம். ஹெபடைடிஸ் வைரஸ் தொற்று போன்ற ஆபத்துக் காரணிகளைக் கொண்டவர்கள் அல்லது நீரிழிவு நோய் அல்லது கட்டுப்பாடற்ற டிஸ்லிபிடெமியா காரணமாக கொழுப்பு கல்லீரல் நோய் உள்ளவர்கள் மிதமான அளவில் மது உட்கொள்வது கூட ஆபத்தானதாக முடியலாம் என மருத்துவர் அரவிந்தர் சிங் எச்சரிக்கிறார்.
also read : கருப்பு கவுனி அரிசியில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?
ஆண்களைப் பொறுத்தவரை ஆல்கஹால் உட்கொள்வதற்கான பாதுகாப்பான வரம்பு என்பது, வாரத்திற்கு 10 யூனிட்கள் ஆகும். அதுவே பெண்களுக்கு வாரத்திற்கு 8 யூனிட்கள் வரை இருக்கும். 1 யூனிட் என்பது 30 மில்லி விஸ்கி அல்லது வழக்கமான ஒரு கிளாஸ் ஒயின் அல்லது அரை பாட்டில் பீர் ஆகியவற்றைக் குறிக்கும். மது அருந்துவதை இதைவிடக் குறைவாகக் கட்டுப்படுத்தினால், கல்லீரல் சேதமடைய வாய்ப்பில்லை, ஆனால் கல்லீரல் பிரச்சினைகளுக்கு ஆளாகக்கூடிய பிற காரணிகள் உங்களிடம் இருந்தால், குறைந்த அளவு மது அருந்தினாலும், பெரிய சேதம் ஏற்படலாம்.
also read : பெரும்பாலான மனிதர்கள் ஏன் 80 வயதிற்குள் இறக்கிறார்கள் - ரகசியத்தை கண்டறிந்த நிபுணர்கள்!
பர்மிங்காமில் உள்ள அலபாமா பல்கலைக்கழகத்தை சேர்ந்த சுற்றுச்சூழல் சுகாதார அறிவியல் பேராசிரியரான ஷானன் எம். பெய்லி மேற்கொண்ட ஆய்வின்படி, எலிகளுக்கு ஆல்கஹால் கொடுத்து நடத்தப்பட்ட சோதனையில், ஒரு மாதத்திற்கு மிதமான அளவு ஆல்கஹால் கொடுக்கப்பட்ட எலிகளுக்கு கூட கடுமையான கல்லீரல் சீர்குலைவு ஏற்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. எனவே குடிப்பதை விட்டுவிட முடியாவிட்டால், அதை குறைக்க முயற்சிக்கவும், ஏனெனில் அதிகப்படியான மது அருந்துதல் உங்கள் கல்லீரல் ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் என்பதே மருத்துவர்கள் மற்றும் நிபுணர்களின் கருத்தாக உள்ளது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.