ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உப்பு இல்லாத டயட் முறை பிரபலமாகிறதா..? இதனால் உடலில் என்னென்ன மாற்றங்கள் உண்டாகும்..?

உப்பு இல்லாத டயட் முறை பிரபலமாகிறதா..? இதனால் உடலில் என்னென்ன மாற்றங்கள் உண்டாகும்..?

உப்பு

உப்பு

salt-free diet : நம் உடலின் நீர்ச்சத்தை குறையாமல் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் உங்களுக்கு மலச்சிக்கல், சரும வறட்சி, முடி வறட்சி , டிஹைட்ரேஷன் போன்ற பிரச்சனைகளுக்கு சோடியம் நிறைந்த உப்புதான் முதல் மருந்தாக இருக்கிறது.

மேலும் படிக்கவும் ...
 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  உப்பு தான் உணவின் பிரதான சுவை. காரணம் என்னதான் மசாலா , காய்கறிகளை சரியான அளவி கலந்து சமைத்திருந்தாலும் அதில் உப்பு இல்லை எனில் அதை சாப்பிட முடியாது. ஆனால் உப்பு இல்லாத உணவுதான் உடலை ஃபிட்டாக வைத்துக்கொள்ள ஏற்றதாக ஒரு குழு பேசி வருகிறது. இதன் உண்மை தன்மை என்ன..?

  உப்பு ஏன் உணவில் அவசியம்..?

  உப்பு என்பது சோடியம் மற்றும் க்ளோரைடு நிறைந்த மினரல் சத்தாகும். இது பாரம்பரியமாக உணவு சுவையூட்டியாக மட்டும் பயன்படுத்தப்படவில்லை. அதன் நன்மைகள் ஏராளம் இருப்பதாலேயே அது உணவின் இன்றையமையாத ஒன்றாக உள்ளது. அதாவது உப்புதான் உடலின் எலக்ட்ரோலைட்டை சமநிலை செய்யவும், நீர்ச்சத்தின் அளவை பராமரிக்கவும் உதவுகிறது.

  அதோடு உடலை சுத்தம் செய்யவும், செரிமானத்திற்கு தேவையான எச்சிலை தூண்டுவதற்கும் உப்பு உதவியாக உள்ளது. அதுமட்டுமன்றி நாம் சாப்பிடும் உணவில் உள்ள ஊட்டச்சத்துக்களை எளிதில் உறிஞ்சி எடுப்பதற்கும் உப்பு உதவுகிறது. இப்படி உப்பு உணவுக்கு மட்டுமல்ல நம் உடலின் சீரான இயக்கத்திற்கும்  அத்தியாவசியமாக உள்ளது.

  நம் உடலின் நீர்ச்சத்தை குறையாமல் பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்த வகையில் உங்களுக்கு மலச்சிக்கல், சரும வறட்சி, முடி வறட்சி , டிஹைட்ரேஷன் போன்ற பிரச்சனைகளுக்கு சோடியம் நிறைந்த உப்புதான் முதல் மருந்தாக இருக்கிறது. இப்படி எண்ணற்ற பல நன்மைகளை கொண்ட உப்பை ஏன் டயட்டிலிருந்து நீக்க வேண்டும்..?

  ”ஆம் நிச்சயம் நீக்க வேண்டும். ஆனால் எப்போதாவது ஒரு முறை எடுத்துக்கொள்ளலாம் அதுவும் உடலை சுத்தம் செய்வதற்காக மட்டுமே” என இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்திக்கு பேட்டியளித்த அப்பலோ ஊட்டச்சத்து நிபுணர் ஜினேல் பட்டேல் கூறியுள்ளார்.

  Also Read : PCOS இருந்தா காஃபி குடிக்கக் கூடாதாம் : நிபுணர்கள் கருத்து..!

  காரணம் உப்பு பித்தம் மற்றும் கபம் உறுப்புகளின் செயல்பாட்டை சமநிலையின்மையாக மாற்றுகிறது. அப்படி அதிகமாக உப்பு பயன்படுத்தும்போது இளமையிலேயே தோல் சுருக்கம், அதிக தாகம், சருமப் பராமரிப்பு, உடல் பலவீனம் போன்ற பிரச்சனைகளை சந்திக்கக் கூடும். அதோடு உடலின் நீர்ச்சத்தை அதிகமாக உறிஞ்சிவிடுகிறது. அதுமட்டுமன்றி இன்று பலருக்கும் உயர் இரத்த அழுத்தத்திற்கு காரணம் உப்புதான். பின் அசிடிடி, ஆசிட் ரிஃப்ளக்ஸ் போன்ற பிரச்சனைகளையும் உண்டாக்குகிறது என கூறியுள்ளார்.

  ஆனால் எப்படி இருந்தாலும் ஒரு சில கண்டிஷன்களை தவிர்த்து அனைவருக்கும் உப்பு இல்லா உணவு முறையை பரிந்துரைப்பதில்லை என்று கூறியுள்ளார். கல்லீரல் பாதிப்பு உள்ளவர்களுக்கு உப்பு பரிந்துரைப்பதில்லை. அதுவும் முழுமையாக இல்லாமல் ஒரு நாளைக்கு 2 கிராமுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது.

  Also Read :  பேக்கிங் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவதால் இத்தனை பாதிப்புகளா? ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்!

  ஏனெனில் 1 கிராம் உப்பில் 10 கிராம் தண்ணீர் இருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா..? எனவே நாம் சரியான அளவில் உப்பை பயன்படுத்தால் உடலின் ஈரப்பதத்தை சமநிலையாக வைத்துக்கொள்ள முடியும். இதனால் தசை, எலும்புகள், திசுக்கள் நீர்ச்சத்துடன் ஆரோக்கியமாக இருக்கும்.

  உப்பு பயன்படுத்துவதாக இருந்தால் சுத்தீகரிக்கப்பட்ட உப்பை தவிர்த்துவிட்டு ஹிமாலயன் சால்ட் , கல் உப்பு, கடல் உப்பு , பிளாக் சால்ட் போன்றவற்றை பயன்படுத்தலாம்.

  இஞ்சி, பூண்டு, எலுமிச்சை ஜூஸ் மற்றும் இந்திய மூலிகைகளை பயன்படுத்தும்போது அதன் சுவையை கூட்ட உப்பு சேர்ப்பது ஆரோக்கியமானதும்கூட. அவ்வாறு சேர்க்கும்போது அவை ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி இன்ஃப்ளமேஷன் ஆகியவற்றை தருகிறது என்கிறார் ஜினேல்

  உலக சுகாதார அமைப்பு ஒரு நாளைக்கு 5 கிராமுக்கும் குறைவான உப்பு பயன்படுத்துவது நல்லது என பரிந்துரைக்கிறது. அவ்வாறு கடைப்பிடித்தால் இதய நோய் போன்ற நாள்பட்ட நோய்களிலிருந்து தப்பிக்கலாம் என்கிறது.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Diet Plan, Salt