ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பிரா அணிவது அவசியமா..? தவிர்ப்பதால் மார்பக ஆரோக்கியத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்ன..?

பிரா அணிவது அவசியமா..? தவிர்ப்பதால் மார்பக ஆரோக்கியத்தில் ஏற்படும் மாற்றங்கள் என்ன..?

பிரா அணிவது அவசியமா..?

பிரா அணிவது அவசியமா..?

bra for breast health : பிரா அணிந்தாலும் அணியாவிட்டாலும் அது ஆரோக்கியத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அது வெறும் ஃபேஷன் ஸ்டேட்மெண்ட் ஆடைதான்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிரா அணிவது நல்லாதா..? கெட்டதா..? அணியலாமா..? கூடாதா..? இப்படி பிரா குறித்த பல கேள்விகள் பெண்களிடையே இன்னும் இருக்கிறது. பெரும்பாலான பெண்களுக்கு பிரா ஒரு அசௌகரியம் தரும் உள்ளாடைதான். இருப்பினும் அதை சகித்துக்கொண்டு அணிவதற்கு காரணம் ஃபேஷன் ஸ்டேட்மெண்டை தருவதற்காகத்தான். அதோடு பிரா அணியாமல் விட்டால் மார்பகங்கள் தளர்ந்துவிடுமோ, தொங்கிவிடுமோ என்ற பயமும் உண்டு. இப்படி பல கருத்துக்கள் , கட்டுக்கதைகள் பிரா அணிவது குறித்து பரவி வருகிறது. இதன் உண்மை என்ன என்பதை மருத்துவர் தனயா இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.

  அந்த வீடியோவில் “ பிரா அணிந்தாலும் அணியாவிட்டாலும் அது ஆரோக்கியத்தில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. அது வெறும் ஃபேஷன் ஸ்டேட்மெண்ட் ஆடைதான். அதேபோல் பிரா அணிவதும் அணியாமல் தவிர்ப்பதும் அவரவர் விருப்பம். பல பெண்கள் பிரா அணிவதால் மார்பகங்களை எடுப்பாக காட்ட முடியும் என்று நினைக்கின்றனர். அதோடு வெளியே தெரியும் முளைக்காம்புகளை மறைப்பதற்கும் பிரா அவசியமான ஒன்றாக இருக்கிறது.


  அதேபோல் பலர் பிரா அணிந்த பின்னரே அவர்களுடைய தோற்றத்தை விரும்புகின்றனர். சிலருக்கு பெரிய மார்பகங்கள் இருக்கும். அவர்களுக்கு பிராதான் கைக்கொடுக்கின்றன. அதேபோல் ஸ்போர்ட்ஸில் இருப்போருக்கு ஓடவும், ஆக்டிவாக இருக்கவும் பிரா தேவைப்படுகிறது. அதேசமயம் சிலருக்கு அதே பிரா அசௌகரியத்தையும் தரலாம். எனவே அது அவரவர் விருப்பம்” என்கிறார் தனயா.

  Also Read : பெண்கள் மெனோபாஸை நெருங்கும்போது என்னென்ன அறிகுறிகள் ஏற்படும்..?

  மேலும் அவர் “ நீங்கள் பிரா அணியாமல் விட்டால் மார்பகங்கள் தொங்கிவிடும், தளர்ந்துவிடும் என்பது தேவையற்ற மூடநம்பிக்கை. அதேபோல் கருப்பு பிரா, கீழே வயர் வரும் பிராக்கள் புற்றுநோயை உண்டாக்கும் என்பது தவறான கருத்து. எனவே பிரா அணுவது முற்றிலும் உங்களுடைய விருப்பம் சார்ந்ததே” என கூறியுள்ளார்.

  Published by:Sivaranjani E
  First published:

  Tags: Bra, Health issues