குழந்தை பருவத்தில் சர்க்கரை அதிகமாக உட்கொண்டால் ஆபத்தா ?

காட்சி படம்

குழந்தை பருவத்தில் அதிகப்படியான சர்க்கரையை சாப்பிடுவதால் ஒருவரின் வாழ்க்கைக்கு தேவையான நுண்ணுயிரியின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்படும் .

 • Share this:
  குழந்தை பருவத்தில் அதிகப்படியான கொழுப்பு மற்றும் சர்க்கரையை சாப்பிடுவதால் ஒருவரின் வாழ்க்கைக்கு தேவையான நுண்ணுயிரியின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்படும் என்றும், நாளடைவில் நீங்கள் ஆரோக்கியமாக சாப்பிட கற்றுக்கொண்டாலும் நுண்ணுயிரிகளில் ஏற்பட்ட மாற்றம் சரியாகாது என்று ஒரு புதிய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. நுண்ணுயிர் என்பது உடலில் உள்ள அனைத்து பாக்டீரியாக்கள், பூஞ்சை, ஒட்டுண்ணிகள் மற்றும் வைரஸ்கள் ஆகியவற்றை குறிக்கிறது. இந்த நுண்ணுயிரிகளில் பெரும்பாலானவை குடலில் காணப்படுகின்றன.

  அவற்றில் பெரும்பாலானவை உதவிகரமாக இருக்கின்றன. உடலில் நோயெதிர்ப்பு சக்தியைத் தூண்டுகின்றன. அவை உணவை நொதிக்கும் செயலில் ஈடுபடுவது மட்டுமல்லாமல் முக்கிய வைட்டமின்களை ஒருங்கிணைக்க உதவுகின்றன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.

  எலிகளில் நடத்திய ஆய்வு மூலம் இந்த தகவல்கள் வெளிவந்துள்ளன. இது குறித்து, அமெரிக்காவின் ரிவர்சைடு பகுதியில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் தியோடர் கார்லண்ட் கூறியதாவது, " நாங்கள் எங்கள் ஆய்வுக்காக எலிகளை பயன்படுத்தினோம். ஆனால் அதில் நாங்கள் கவனித்த விளைவு ஒரு மேற்கத்திய உணவை எடுத்துக்கொள்ளும் குழந்தைகளுக்கு சமம். அதிகபடியான கொழுப்பு மற்றும் சர்க்கரை நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளும் குழந்தைகளின் குடல் நுண்ணுயிர் இன்னும் பருவமடைந்து ஆறு ஆண்டுகள் வரை பாதிக்கப்படுகிறது" என்று கூறியுள்ளார்.

  ஜர்னல் ஆஃப் எக்ஸ்பரிமென்டல் பயாலஜியில் (Experimental Biology) வெளியிடப்பட்ட இந்த ஆய்வுக்காக, எலிகளை நான்கு குழுக்களாக பிரித்து அவற்றில் நுண்ணுயிரியலில் தாக்கத்தை ஆராய்ச்சியாளர்கள் ஏற்படுத்தினர். அதில் ஒரு குழுவுக்கு, 'ஆரோக்கியமான' உணவைக் கொடுத்துள்ளனர். மற்றொரு குழு எலிகளுக்கு குறைவான ஆரோக்கியமுள்ள 'மேற்கத்திய' உணவைக் கொடுத்துள்ளனர். 3-ஆம் குழுவுக்கு உணவுகளுடன் உடற்பயிற்சிக்காக சக்கரத்தில் ஓட வைக்கப்பட்டன. நான்காவது குழு எலிகளுக்கு எந்த ஒரு உடற்பயிற்சியும் வழங்கப்படவில்லை.

  இந்த உணவுகள் எலிகளுக்கு மூன்று வாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. பின்னர் அனைத்து எலிகளும் ஒரு நிலையான உணவுக்கு பழக்கப்படுத்தப்பட்டன. அந்த சமயம் எந்த குழுவுக்கும் எந்த உடற்பயிற்சியும் கொடுக்கப்படவில்லை. சுமார் 14 வார நடைமுறைக்கு பின்னர், ஆராய்ச்சிக்குழு விலங்குகளில் உள்ள பாக்டீரியாக்களின் பன்முகத்தன்மை மற்றும் மிகுதியை ஆய்வு செய்தனர். அதில் மேற்கத்திய உணவுக் சாப்பிட்ட எலிகள் குழுவில் முரிபாகுலம் குடல் பாக்டீரியாக்களின் அளவு கணிசமாகக் குறைந்திருப்பதை அவர்கள் கண்டறிந்தனர். இந்த வகை பாக்டீரியாக்கள் கார்போஹைட்ரேட் வளர்சிதை மாற்றத்தில் ஈடுபடுகின்றன.

  மேலும் இந்த பகுப்பாய்வில் எலிகளுக்கு கொடுக்கப்பட்ட உடற்பயிற்சி மூலம் குடல் பாக்டீரியாக்கள் அளவில் நல்ல மாற்றம் ஏற்பட்டிருப்பதையும் கண்டுபிடித்தனர். அதாவது, ஆரோக்கியமான உணவை சாப்பிட்டு, பிறகு இயங்கும் சக்கரத்தில் உடற்பயிற்சி மேற்கொண்ட எலிகளில் முரிபாகுலம் பாக்டீரியாவின் அளவு அதிகரித்திருந்தது. அதுவே, அவை உடற்பயிற்சிக்கு உட்படுத்தப்பட்டிருந்தாலும், இல்லாவிட்டாலும் அதிக கொழுப்புள்ள மேற்கத்திய உணவை சாப்பிட்ட எலிகளில் இந்த பாக்டீரியாவின் அளவு  குறைந்து காணப்பட்டதாக ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

  Also Read : உங்கள் குழந்தைக்கு வீட்டிலேயே இருப்பதால் போர் அடிக்குதா ? பிசியாக வைத்துக்கொள்ள டிப்ஸ் இதோ..

  இதன் காரணமாக இந்த வகை பாக்டீரியாக்கள் மற்றும் அவை சார்ந்த பாக்டீரியாக்களின் குடும்பம் அதன் ஹோஸ்டுக்கு கிடைக்கும் ஆற்றலின் அளவை பாதிக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர். இதேபோல மற்றொரு ஆய்வில் ஐந்து வாரங்கள் டிரெட்மில் பயிற்சிக்கு எலிகள் உட்படுத்தப்பட்ட பிறகு இந்த செறிவூட்டப்பட்ட பாக்டீரியா இனங்களின் அளவு அதிகரித்திருந்ததாக கண்டறியப்பட்டது. எனவே உடற்பயிற்சியால் மட்டுமே அதன் இருப்பை அதிகரிக்க முடியும் என குறிப்பிடப்பட்டிருந்தது. ஒட்டுமொத்தமாக, உடற்பயிற்சியை காட்டிலும் ஆரம்பகால வாழ்க்கையில் மேற்கத்திய சர்க்கரை வகை உணவு, நுண்ணுயிரியத்தில் நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Tamilmalar Natarajan
  First published: