ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

உடலுறவுக்குப் பின் இரத்தக்கசிவு ஏற்படுவது ஆபத்தா..? எப்போது மருத்துவரை அணுக வேண்டும்..?

உடலுறவுக்குப் பின் இரத்தக்கசிவு ஏற்படுவது ஆபத்தா..? எப்போது மருத்துவரை அணுக வேண்டும்..?

திருமண வாழ்க்கை என்பது வெறுமனே சொத்து, பணம் போன்றவற்றை ஆணும், பெண்ணும் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தமாக இருக்க முடியாது. அதேபோல சந்ததியை விரிவாக்கம் செய்வதற்கான ஒன்றிரண்டு குழந்தைகளை பெற்றுக் கொள்வதோடு திருமண வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தம் கிடைத்துவிடுவதில்லை.

திருமண வாழ்க்கை என்பது வெறுமனே சொத்து, பணம் போன்றவற்றை ஆணும், பெண்ணும் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்பந்தமாக இருக்க முடியாது. அதேபோல சந்ததியை விரிவாக்கம் செய்வதற்கான ஒன்றிரண்டு குழந்தைகளை பெற்றுக் கொள்வதோடு திருமண வாழ்க்கைக்கு முழுமையான அர்த்தம் கிடைத்துவிடுவதில்லை.

பெண்குயின் கார்னர் : உடலுறவுக்கு ‌முன் கன்னித்திரை அல்லது ஹைமன் எனப்படும் மெல்லிய சவ்வு, பிறப்புப் பாதையை (vaginal opening) மூடி இருக்கும். முதல் முறை தாம்பத்திய உறவுக்கு பிறகு இது கிழிபடுவதால் ,ஒரு சிலருக்கு ரத்தக்கசிவு உண்டாகும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஜாஸ்மின் தன் கணவருடன் மருத்துவமனைக்கு வந்திருந்தார். திங்கட்கிழமை ஆதலால் கூட்டம் சிறிது அதிகமாகவே இருந்தது.

அவர்களின் முறை வந்தபோது ஆலோசனை அறைக்குள் வந்தார்கள்.

ஜாஸ்மின், என்ன நினைத்தாரோ, தன் கணவரை வெளியே செல்லும்படி கூறினார். "நான் டாக்டருடன் தனியாக பேச வேண்டும்" என்றார்.

ஜாஸ்மினுக்கு திருமணம் ஆகி ஒரு வாரம் தான் ஆகியிருந்தது.

திருமணத்திற்கு பிறகு கணவருடன் உடலுறவு கொண்டதும் , பிறப்புறுப்பில் வலியும் ரத்தக்கசிவும் ஏற்பட்டுள்ளது.

இரத்தக்கசிவு தொடர்ந்து ஒரு வாரமாக இருப்பதாகவும், மீண்டும் உறவு கொண்ட போது வலி அதிகமாக உள்ளதாகவும் கூறினார்.

" முதல் முறை உறவுக்கு பிறகு ரத்த கசிவு ஏற்படலாம் என்று தான் தோழிகளிடமிருந்து அறிந்து கொண்டதாகவும் , அதனால் ஒரு வாரம் வரை காத்திருந்திருந்ததாகவும் , பிறகும் இரத்தக்கசிவும், வலியும் தொடர்ந்ததால் , சந்திக்க வந்ததாகவும் கூறினார்.

ஜாஸ்மினை பரிசோதித்த போது பிறப்பு ப்பாதையின் தொடக்கத்தில் ஒரு சிறிய காயமும், அதிலிருந்து ரத்த கசிவும் இருந்தது. சுற்றிலும் லேசான வீக்கம் இருந்தது.

காயம் ஆறுவதற்கான மருந்துகளைக் கொடுத்தேன். தேவைப்பட்டால் தையல் போட வேண்டிய சூழ்நிலை வரலாம் என்று கூறினேன்.இரண்டு நாட்கள் கழித்து மீண்டும் பார்ப்பதாக கூறி அனுப்பி வைத்தேன்.

பொதுவாக... உடலுறவுக்கு ‌முன் கன்னித்திரை அல்லது ஹைமன் எனப்படும் மெல்லிய சவ்வு, பிறப்புப் பாதையை (vaginal opening) மூடி இருக்கும்.

பெண்குயின் கார்னர் : ப்ரக்னன்சி டெஸ்ட் எப்போது செய்ய வேண்டும்..? எத்தனை நாட்களில் எடுக்கலாம்..?

முதல் முறை தாம்பத்திய உறவுக்கு பிறகு இது கிழிபடுவதால் ,ஒரு சிலருக்கு ரத்தக்கசிவு உண்டாகும். . " "அவ்வாறு ரத்தக்கசிவு ஆனால் தான் சரி' என்று நிறையபேர் நினைக்கிறார்கள். அது தவறு. அனைவருக்கும் ப்ளீடிங் ஆக வேண்டும் என்ற கட்டாயமில்லை.

குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால் ஒரு 20%- பேருக்கு மட்டுமே ப்ளீடிங் ஏற்படும். அவ்வாறு இரத்தக் கசிவு ஏற்பட்டாலும் அது தொடர்ந்து இருக்காது. அன்று மட்டும் ஒரு சில துளிகள் இருக்கலாம். தொடர்ந்து ரத்தக்கசிவு உள்ளது அல்லது வலி இருக்கிறது என்றால் கட்டாயம் மருத்துவரை அணுக வேண்டும்.

யோனி பாதையில் ஏதேனும் காயங்கள் இருந்தால் அதிலிருந்து கூட இதுபோல ரத்த கசிவு ஏற்படலாம்.

இது போலவே வேறு ஒரு பெண்மணிக்கும் , புதிதாக திருமணமானவர், உடலுறவுக்கு பிறகு யோனி பாதையின் உள்புறத்தில் காயம் உண்டாகி அதிலிருந்து ரத்தப்போக்கு இருந்தது. ஆனால் அவர் அதை தவறுதலாக மாதவிடாய் என்று நினைத்துக்கொண்டு இருந்தார். 4-5 நாட்கள் கழித்து மருத்துவமனைக்கு வந்தார். பரிசோதித்த போது, இரத்தப் போக்கிற்கான காரணத்தை கண்டுபிடித்து பிறகு தையல் போட்டோம்.

பெண்குயின் கார்னர் : மாதவிடாய் தள்ளிப் போனாலும் கர்ப்பப் பரிசோதனையில் நெகட்டிவ் வர என்ன காரணம்..?

இரண்டு தினங்கள் கழித்து ஜாஸ்மின் வந்தபோது காயம் நன்றாக ஆறி இருந்தது. குறைந்தது ஒரு வாரம் வரை உறவு கொள்ள வேண்டாம் என்று கூறி அனுப்பினேன்.

இரண்டு மாதங்கள் இருக்கும். தான் கர்ப்பமாக இருப்பதை மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார் ஜாஸ்மின்.

மருத்துவர் ஜெயஸ்ரீ ஷர்மாவை தொடர்பு கொள்ள : doctorjsharma@gmail.com

Published by:Sivaranjani E
First published:

Tags: Pregnancy, Sex doubts, பெண்குயின் கார்னர்