Home /News /lifestyle /

சர்க்கரை நோயாளிகளுக்கு இன்டெர்மிட்டென்ட் டயட் பலன் தருமா..? நிபுணர் தரும் விளக்கம்

சர்க்கரை நோயாளிகளுக்கு இன்டெர்மிட்டென்ட் டயட் பலன் தருமா..? நிபுணர் தரும் விளக்கம்

சர்க்கரை நோயாளிகளுக்கு இன்டெர்மிட்டென்ட்  டயட்

சர்க்கரை நோயாளிகளுக்கு இன்டெர்மிட்டென்ட்  டயட்

உடல் எடையைக் குறைப்பதற்கு ஒரு வகையில் உதவினாலும் தசைகள் வலுவிழந்து தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் சோனியா பஷி..

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
இன்றைக்கு உடல் எடையைக் குறைக்க முயற்சிக்கும் பெரும்பாலோனார் பின்பற்றும் டயட் தான் இடைப்பட்ட உண்ணாவிரதம் அதவாது இன்டெர்மிட்டென்ட் பாஸ்டிங் (intermittent Fasting). குறிப்பிட்ட நேரத்திற்கு உணவை முழுமையாக அல்லது பகுதியாக தவிர்ப்பது போன்றவை இந்த முறையில் பின்பற்றுப்படுகிறது. 10 மணி நேரம், 16 மணி நேரம் அல்லது ஒரு நாளாகக்கூட டயட் பிளாண் ஃபாலோ செய்யும் நேரங்களில் ஜூஸ், தண்ணீர் போன்றவற்றை எடுத்துக்கொள்ள நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

பொதுவாக எவ்வித இந்த டயட் பிளாணில் எவ்வித கட்டுப்பாட்டு முறைகளும் பின்பற்ற வேண்டிய அவசியம் இல்லை. அதே சமயம் எவ்வித உணவும் உட்கொள்ளக்கூடாது என்பதில் மிகவும் உறுதியாக இருக்க வேண்டும். இதன் காரணமாகத் தான் இன்றைக்கு இளைஞர்கள் பலரிடம் டிரெண்டாகியுள்ள டயட் லிஸ்டில் உள்ளது.
இருந்தப்போதும் சர்க்கரை நோயாளிகள் இன்டெர்மிட்டென்ட் பாஸ்டிங் முறையை கடைப்பிடிக்கக் கூடாது எனவும்,குறைவான அளவில் சாப்பிடுவதோடு, நேரம் தவறி சாப்பிடுவது அவர்களின் இன்சுலின் அளவைக் குறைப்பதோடு ஊட்டச்சத்து குறைபாடுகளையும் ஏற்படுத்துகிறது என்கின்றனர் நிபுணர்கள்.

மேலும் உடல் எடையைக் குறைப்பதற்கு ஒரு வகையில் உதவினாலும் தசைகள் வலுவிழந்து தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படும் என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் சோனியா பஷி.. ஏன் சர்க்கரை நோயாளிகள் இந்த டயட் முறையை புறக்கணிக்க வேண்டும் என்பது குறித்தும் விளக்கம் அளித்துள்ளார் ஊட்டச்சத்து நிபுணர்..



சர்க்கரை நோயாளிகளுக்கு இன்டெர்மிட்டென்ட் டயட்டை புறக்கணிப்பதற்கான காரணங்கள் :

நீரழிவு நோயினால் பாதிக்கப்பட்டவரக்ள் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்த மருந்துகள் அல்லது இன்சுலின் எடுத்துக் கொள்வார்கள். மேலும் சர்க்கரையின் அளவை சமநிலையில் வைத்துக் கொள்ள சீரான இடைவெளியில் கண்டிப்பாக சாப்பிட வேண்டியிருக்கும். இந்த சூழலில் நாள் முழுவதும் அல்லது குறிப்பிட்ட மணி நேரத்திற்கு உணவை உட்கொள்ளாமல் இன்டெர்மிட்டென்ட் பாஸ்டிங் மேற்கொள்ளவது பிரச்சனையை ஏற்படுத்தும். குறிப்பாக இரத்தத்தில் சர்க்கரை அளவை இயல்பை விட குறைத்து சோர்வு, பதட்டம், பட்டினி மற்றும் எரிச்சலை ஏற்படுத்தக்கூடும்.

சாப்பிடும் உணவு செரிமானிப்பதில்லையா..? தினசரி உணவில் இந்த காய்கறிகளை சேத்துக்கோங்க...

நீங்கள் ஒரு வேளை இன்டெர்மிட்டென்ட் பாஸ்டிங்கைப் பின்பற்ற வேண்டிய சூழலில் மணிக்கணக்கில் சாப்பிடாமல் இருக்கும் சமயத்தில், கார்போஹெட்ரேட் அதிகம் நிறைந்த பாஸ்தா, பிரெட்,சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பீட்ரூட், ஓட்ஸ் போன்ற உணவுப்பொருள்களை உட்கொள்ளலாம் என பரிந்துரைக்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.



இன்டெர்மிட்டென்ட் பாஸ்டிங் அதாவது இடைப்பட்ட உண்ணாவிரதத்தை டைப் 2 நீரிழிவு நோயாளிகள் பின்பற்றும் போது இரத்தச் சர்க்கரை அளவு வெகுவாகக் குறைகிறது. சில நேரங்களில் உயிரைப் பறிக்கும் நிலைக் கூட ஏற்படுகிறது என்பதால் தான் நீரழிவு நோயாளிகள் இந்த டயட் முறையை பின்பற்ற வேண்டாம் என கூறப்படுகிறது.

தண்ணீர் குடிப்பதற்கு கூட இத்தனை ரூல்ஸ் இருக்கா..? நீங்க இதையெல்லாம் ஃபாலோ பண்றீங்களா..?

ஒருவேளை டைப் 2 நீரிழிவு நோயாளிகள் இந்த டயட் முறையைப் பின்பற்ற விரும்பினால், உங்களுடைய மருத்துவர்களின் முதலில் ஆலோசித்துக்கொள்ள வேண்டும். மேலும் உங்களது உடலில் இரத்த சர்க்கரை அளவை குளுக்கோமீட்டர் உதவியுடன் அவ்வப்போது பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும். ஒருவேளை உங்களது சர்க்கரை அளவு குறைவாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் பின்பற்றும் டயட்டை நிறுத்திக் கொள்வதோடு மருத்துவர்களின் அறிவுரைகளை கட்டாயம் பின்பற்ற வேண்டும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Diabetes, Intermittent Fasting

அடுத்த செய்தி