• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • மாதவிடாய் சமயத்தில் உடற்பயிற்சி செய்வது பாதுகாப்பானதா..? அவ்வாறு செய்தால் என்ன ஆகும்..? வல்லுநர்களின் விளக்கம்..

மாதவிடாய் சமயத்தில் உடற்பயிற்சி செய்வது பாதுகாப்பானதா..? அவ்வாறு செய்தால் என்ன ஆகும்..? வல்லுநர்களின் விளக்கம்..

மாதவிடாய்

மாதவிடாய்

மாதவிடாய் சுழற்சியின் போது உடற்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால், உடற்பயிற்சி தீவிரமாக அல்லாமல் மிதமாக இருக்க வேண்டும்.

  • Share this:
    மாதவிடாய் என்னும் சிரமமான சமயத்தில் உடற்பயிற்சி என்பது கடினமான விஷயம்தான். இருப்பினும் முயற்சி செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என வல்லுநர்கள் கூறுகின்றனர். அதாவது வயிற்று வலி, வயிற்று மந்தம், சோர்வு, தலைவலி போன்ற பிரச்னைகளை தவிர்க்கலாம் என்கின்றனர். ஆனால் பெரும்பாலான பெண்கள் மாதவிடாய் சமயத்தில் உடற்பயிற்சியை தவிர்த்துவிடுவார்கள். மேலும் அதன் நன்மைகளை விரிவாக பார்க்கலாம்.

    மாதவிடாய் சமயத்தில் உடற்பயிற்சி செய்வது ஏன் முக்கியம்?

    உடற்பயிற்சி நிறைய உடல் மற்றும் மனநல நன்மைகளை அளிக்கிறது. மாதவிடாய் சமயத்தில் உங்கள் உடல் ஏற்கனவே நிறைய ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளை சந்திப்பதால் , வொர்க்அவுட் உங்களுக்கு ஆறுதல் அளிக்கலாம் மற்றும் உங்கள் ஆற்றலை அதிகரிக்கும். அந்த சமயத்தில் புரோஜெஸ்ட்டிரோன் மற்றும் ஈஸ்ட்ரோஜனின் சமநிலையின்மை காரணமாகவே இதுபோன்ற உபாதைகளை அனுபவிக்கிறோம். எனவே இந்த நேரத்தில், உங்கள் அனைத்து செயல்பாடுகளையும் நிறுத்துவதற்குப் பதிலாக, சில மிதமான உடற்பயிற்சிகளை செய்ய முயற்சிக்கலாம்.

    மாதவிடாய் நாட்களில் செய்ய சிறந்த உடற்பயிற்சிகள் :

    ஆரம்ப நாட்களில் இரத்தப்போக்கு அதிகமாக இருக்கும் என்பதால், அந்த சமயத்தில் பயிற்சிகள் அசௌகரியத்தை உண்டாக்கலாம். அதனால்தான் இந்த நாட்களில், நீங்கள் மிதமான பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. உங்கள் மாதவிடாய் சுழற்சியின் போது உடற்பயிற்சி மேற்கொள்வது சிறந்தது என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆனால், உடற்பயிற்சி தீவிரமாக அல்லாமல் மிதமாக இருக்க வேண்டும். அதாவது அந்த சமயத்தில், லேசான நடைப்பயிற்சி, மிதமான கார்டியோ, யோகா மற்றும் பைலேட்ஸ் போன்றவை முயற்சிக்கலாம்.



    நீங்கள் ஆரம்ப நாட்களில் அசௌகரியத்தை உணரவில்லை எனில் யோகா,பைலேட்ஸ் போன்ற பயிற்சிகளை செய்யலாம். ஆனால் சிரமமாக உணர்ந்தால் மிதமான பயிற்சிகளை செய்யுங்கள். நடைபயிற்சி மட்டும் செய்தால் கூட போதுமானதுதான்.

    எதுவாயினும் இந்த சமயத்தில் உங்கள் நீரிழப்பை கவனிப்பது அவசியம். அதிகமாக தண்ணீர் குடியுங்கள். நீரேற்றமாக இருப்பது அவசியம். ஏனெனில் மாதவிடாய் சமயத்தில் விரைவில் நீரிழப்பு உண்டாகும். அதுவும் உடற்பயிற்சிகள் செய்யும்போது கூடுதலாக நீரிழப்பு ஏற்படும். எனவே தண்ணீர் நிறைய குடியுங்கள்.

    மாதவிடாய் சமயத்தில் உடற்பயிற்சி செய்யும்போது உதிரப்போக்கு கூடுதலாக இருக்கலாம். எனவே அதைக் கண்டு பயப்படாமல் எதிர்கொள்ள துணிவோடு இருங்கள். சானிடரி பேட், டாம்போன்களை அவசரத் தேவைக்கு கையில் வைத்திருப்பது அவசியம்.

    ஒர்க்அவுட் முடித்த பின் ஒரு போதும் இந்த விஷயங்களை செய்யாதீர்கள் : விளைவுகள் மோசமாகலாம்..!

    மாதவிடாய் காலத்தில் உடற்பயிற்சி செய்வதால் கிடைக்கும் நன்மைகள் : 

    உங்கள் எண்டோர்பின் அளவை உயர்த்துகிறது : உடற்பயிற்சி உங்கள் உடலில் எண்டோர்பின் அளவை மேம்படுத்துவதால், அது உங்களை நன்றாக உணரவைக்கும் மற்றும் உங்கள் மனநிலையையும் சாந்தப்படுத்தும். எண்டோர்பின்கள் இயற்கையான வலி நிவாரணியாக இருப்பதால், உடற்பயிற்சியின் போது அவை வெளியாவதால், நீங்கள் அனுபவிக்கும் மாதவிடாய் வலியிலிருந்து நிவாரணம் பெறலாம்.



    அதிக வலிமையையும் சக்தியையும் அனுபவிப்பீர்கள் : உங்கள் மாதவிடாய் சுழற்சியின் முதல் இரண்டு வாரங்களிலிருந்தே நீங்கள் தொடர்ந்து உடற்பயிற்சி செய்தால் ( மாதவிடாயின் முதல் நாள்), அதன் பலனாக உடல் வலிமை மற்றும் ஆற்றலை அதிகரிக்க உதவுகிறது என ஆய்வு கூறுகிறது.

    வலிமிகுந்த நாட்களை எதிர்த்துப் போராட உதவும் : லேசான நடைபயிற்சி கூட வலியைக் குறைக்கவும் உடனடியாக உங்களுக்கு ஆறுதல் அளிக்கவும் உதவும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

    மனநிலையை மேம்படுத்தும் : மாதவிடாயின் போது உடற்பயிற்சி செய்வது மகிழ்ச்சியான ஹார்மோன்களான எண்டோர்பின்களை வெளியிட உதவுகிறது. எனவே, நீங்கள் சோகமாகவும், சோர்வாகவும் உணரும் இந்த நேரத்தில், பயிற்சி உங்கள் மனநிலையை மேம்படுத்தி இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும். உங்கள் மாதவிடாயுடன் தொடர்புடைய பிடிப்புகள், தலைவலி அல்லது முதுகு வலியையும் உடற்பயிற்சி குறைக்கிறது.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: