பொதுவாக குறிப்பிட்ட வயதிற்குப் பிறகு ஆண்களுக்கு பாலியல் செயல்பாடுகள் வெகுவாக குறைகின்றன. குறிப்பாக வயதான ஆண்களுக்கு விறைப்புத்தன்மையில் குறைபாடு ஏற்படுகிறது. துணையுடன் உடலுறவு கொள்ள விரும்பும் போது ஒரு ஆண் தனது பிறப்புறுப்பில் போதுமான விறைப்பை பெற முடியாத நிலை தான் முடியாமல் விறைப்புத்தன்மை குறைபாடு.
ஆண்களின் ஆண்மை குறைவுக்கு முக்கிய காரணியாக இருக்கும் இந்த விறைப்புத்தன்மை பிரச்சனை என்பது பொதுவாக வயதான ஆண்களுக்கு ஏற்பட கூடிய ஒன்று என்றாலும் அவர்களுக்கு மட்டுமே ஏற்பட கூடிய பிரச்சனை மட்டுமல்ல. இது 20 மற்றும் 30 வயதுடைய இளைஞர்களுக்கும் ஏற்படலாம். இதய நோய்க்கான ஆபத்துக் காரணியை கொண்ட அடிப்படை மருத்துவ நிலை இளம் மற்றும் நடுத்தர வயது ஆண்களுக்கு கூட விறைப்புத்தன்மையை பெறுவதில் அல்லது நீடிக்க வைப்பதில் சிக்கல் ஏற்படலாம்.
விறைப்புத்தன்மை என்பது ரிஃப்ளெக்சோஜெனிக், சைக்கோஜெனிக், நாக்டர்னல் என்ற 3 வகைகள் ஆகும். இதில் ரிஃப்ளெக்ஸிவ் உடல் தூண்டுதலால் ஏற்பட கூடிய விறைப்புத்தன்மை, நாக்டர்னல் தூக்கத்தின் போது உற்பட கூடியது. சைக்கோஜெனிக் என்பது மைன்ட் அல்லது விஷன் தொடர்புகளால் ஏற்படுகிறது. இந்த 3 வகை விறைப்புத்தன்மைகளும் முக்கிய உடல் செயல்பாடுகள் மற்றும் அமைப்புகளை உள்ளடக்கியது.
நரம்பு மண்டலம், ரத்த குழாய்கள், தசைகள், ஹார்மோன்கள், உணர்ச்சிகள் உள்ளிட்டவற்றில் ஏதேனும் சிக்கல் ஏற்படுவது விறைப்புத்தன்மை குறைபாட்டை ஏற்படுத்துகிறது. மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவை விறைப்புத்தன்மையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய மனநலப் பிரச்சினைகளுக்கு எடுத்துக்காட்டுகள் ஆகும்.
இவை உடல்ரீதியான பதிலைத் தூண்டுவதற்கு மூளை உடலுடன் தொடர்பு கொள்வதை பாதிக்க கூடிய விஷயங்கள் ஆகும். மன அழுத்தம் மற்றும் பதட்டம் ஆகியவை துணையுடன் உறவில் ஈடுபட முயற்சிக்கும் போது விறைப்புத்தன்மையை பராமரிக்க அல்லது நீட்டிக்க விரும்பும் நேரத்தில் கூடுதல் ரத்த ஓட்டத்தை அனுமதிக்க ஒரு ஆணின் ஆணுறுப்புடன் அவரது மூளை தொடர்பு கொள்வதை தடுக்கலாம். விறைப்புத்தன்மைக்கு தேவையான ரத்த ஓட்டத்தை தடை செய்வதன் மூலம் மன அழுத்தம் மற்றும் பதட்டம் உள்ளிட்டவை இளம் மற்றும் நடுத்தர வயதினருக்கும் கூட விறைப்புத்தன்மை குறைபாடு ஏற்பட காரணமாக இருக்கின்றன.
Also Read : சுய இன்பம் உடல்நல பாதிப்பை ஏற்படுத்துமா..? முதலில் பெண்கள் இதை கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!
வயாகரா பலனளிக்குமா?
Mayo Clinic-ன் கூற்றுப்படி விறைப்புத்தன்மை குறைபாட்டை சரி செய்வதற்கான ஆரம்ப சிகிச்சை பொதுவாக வாய்வழி மருந்து. பெரும்பாலும் இந்த மருந்துகள் சிறப்பாகச் செயல்பட்டாலும், உடலுறவுக்கு போதுமான விறைப்புத்தன்மையை பராமரிக்க போராடும் பெரும்பான்மையான ஆண்களுக்கு சில பக்கவிளைவுகளை ஏற்படுத்த கூடும்.
நைட்ரிக் ஆக்சைட் விறைப்பு செயல்பாட்டில் முக்கிய பங்கு வகிக்கிறது. உடல் இயற்கையாக உருவாக்கும் கெமிக்கலான இது ஆண்குறி தசைகளை தளர்த்த உதவுகிறது. சில்டெனாஃபில் (வயாகரா), வர்டனாபில் (லெவிட்ரா, ஸ்டாக்சின்), தடாலாஃபில் (சியாலிஸ்) மற்றும் அவனாஃபில் (ஸ்டெண்ட்ரா) உள்ளிட்ட வாய்வழி மருந்துகள் உடலில் நைட்ரிக் ஆக்சைடின் விளைவுகளை மேம்படுத்தி அதிகரிக்க செய்வதன் மூலம் விறைப்புதன்மை குறைபாட்டை குணப்படுத்த உதவுவதாக கூறப்படுகிறது. இந்த வாய்வழி மருந்துகள் விறைப்புத்தன்மை குறைபாட்டிற்கு அவ்வப்போது உதவ கூடும் என்றாலும் இந்த சிக்கலின் மூலகாரணத்தை சரி செய்யாது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள், உயர் ரத்த அழுத்தம் போன்ற சில சில உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக விறைப்பு தன்மையில் குறைபாடு ஏற்படலாம். குறிப்பாக இளம் ஆண்களில் இந்த சிக்கல்கள் ஏற்பட கவலை மிகவும் பொதுவான காரணங்களில் ஒன்றாக இருக்கிறது. எனவே விறைப்புத்தன்மை குறைபாட்டால் நீங்கள் சிரமத்தை எதிர்கொண்டால் தொழில்முறை மருத்துவ உதவியை தயங்காமல் நாட வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Erectile Dysfunction, Sex doubts