சமீப காலங்களில் மாரடைப்பின் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதிலும் இளம் வயதினர் கூட மாரடைப்பினால் உயிரிழக்கும் சம்பவங்கள் ஆங்காங்கே நடந்து வருகின்றன. சமீபத்தில் 24 வயது இளைஞர் ஒருவர் மாரடைப்பினால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இது போன்ற திடீர் மாரடைப்பு மரணங்களை பற்றி பலரும் பல்வேறு கருத்துக்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். அதிலும் குறிப்பாக கொரோனா தடுப்பூசியின் காரணமாகத்தான் திடீர் மாரடைப்பு மரணங்கள் அதிகரித்துள்ளன என பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வருகின்றனர்.
இதைப் பற்றிய ட்விட்டர் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்த ட்விட்டர் வாசி ஒருவர் கூறுகையில், “கொரோனா தடுப்பூசிகள் வருவதற்கு முன் வரை, ஆரோக்கியமான விளையாட்டு வீரர்கள் மைதானத்திலேயே மாரடைப்பு ஏற்பட்ட உயிரிழப்பதை நாம் பார்த்திருக்க முடியாது. ஆனால் இப்போது அதிகளவு மாரடைப்பு மரணங்கள் ஏற்படுகின்றன. கொரோனா தடுப்பூசியை பற்றி விசாரணை செய்ய வேண்டிய நேரம் இது” என்று தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
இதுபோன்று கொரோனா தடுப்பூசிக்கு எதிராக இருக்கும் பலரும் பல்வேறு சம்பவங்களை உதாரணமாக கொண்டு மாரடைப்புக்கு எதிராக கொரோனா தடுப்பூசியை குற்றம் சாட்டி தனது கருத்தை பதிவு செய்து வருகின்றனர். இதனால் ஏற்கனவே தடுப்பூசி செலுத்தியவர்களுக்கும் தனக்கு மாரடைப்பு ஏற்படும் என்ற பயம் உருவாகியுள்ளது என்பதை யாரும் மறுக்க முடியாது. முக்கியமாக உடலை கட்டு கோப்பாக வைத்துக் கொள்ளும் விளையாட்டு வீரர்களுக்கு கூட திடீரென மாரடைப்பு ஏற்படுவதினால் அவை கொரோனா ஊசியினால் தான் ஏற்படுகின்றன என பலர் நம்பர் துவங்கியுள்ளனர். இதைப் பற்றிய தகவல்கள் சமூக வலைத்தளங்கள் முழுதும் பரவி வருவதையும் நம்மால் பார்க்க முடிகிறது.
மேலும் எம் எம் ஏ வீராங்கனை விக்டோரியா லீயின் மரணமும் கொரோனா தடுப்பூசிக்கு எதிராக குற்றம் சாட்டுபவர்களின் வாதத்தை நிரூபிக்கும் வகையில் அமைந்துள்ளது. அவருக்கு 18 வயது தான் ஆகும் நிலையில் மரணம் அடைந்திருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவ்வாறு அதிகரித்து வரும் குற்றச்சாட்டுகளால் மருத்துவர்கள் இதைப் பற்றிய கருத்தை தெரிவித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
கொரோனா தடுப்பூசியினால் மாரடைப்புகள் ஏற்படுகின்றன?
அதிகரித்து வரும் மாரடைப்புகளை பற்றி பேசிய ஃபரிதாபாத்தை சேர்ந்த மருத்துவர் ஒருவர் கூறுகையில் “கொரோனா தடுப்பூசியினால் தான் திடீர் மாரடைப்புகள் ஏற்படுகின்றன என்ற வாதத்தை நிரூபிக்கும் வகையில் இதுவரை எந்தவித ஆதாரங்களும் நமக்கு கிடைக்கவில்லை. ஆனால் கிடைத்துள்ள சில தரவுகளின் படி mRNA முறையில் தயாரிக்கப்பட்ட தடுப்பூசியை செலுத்தியவர்களுக்கு மையோகார்டிடீஸ் மற்றும் பெரி கார்டிடிஸ் என்ற நோய் தாக்கும் வாய்ப்புகள் உள்ளன.” என்று கூறியுள்ளார்.
இது பற்றி பேசிய மற்றொரு மருத்துவர் கூறுகையில் "கொரோனா தடுப்பூசிக்கும், இளம் வயதினரிடையே அதிகரித்து வரும் மாரடைப்பிற்கும் எந்தவித சம்பந்தமும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. கொரோனா தொடரின் போது பெரும்பாலான மக்கள் லாக்டவுன் காரணமாக வீட்டிலேயே முடங்கி இருந்தார்கள். அந்த சமயங்களில் அவர்களின் வாழ்க்கை முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவ்வாறு வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்களும் திடீரென ஏற்படும் மாரடைப்புகளுக்கு காரணமாக இருக்கலாம். இரண்டாவதாக கொரோனா வைரஸ் ஒருவரை தாக்கும் பட்சத்தில் அந்த வைரஸின் தாக்கத்தால் உடலில் ரத்தம் உறைதல் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உண்டு.
கொரோனா தொற்றுகள் அதிகம் இருந்த சமயத்தில் பலர் தங்களுக்கு கொரோனா தாக்குதல் இருந்தது தெரியாமலேயே அதிலிருந்து குணமாகி வந்தது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு அவர்கள் முழுவதுமாக நோயிலிருந்து விடுபட்டதாக நினைத்துக் கொண்டாலும், அதன் தாக்கம் உடலில் தற்போது வரை இருந்து கொண்டே இருப்பதற்கு வாய்ப்புகள் உண்டு. எனவே அதன் காரணமாக கூட மாரடைப்புகள் ஏற்பட்ட உயிரிழப்புகள் நேரலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் கொரோனா தொற்று ஒருவர் உடலில் இருந்து கொண்டு எந்த வித அறிகுறியும் வெளிப்படுத்தாமல், திடீரென மாரடைப்பை ஏற்படுத்தக் கூடும். ஏனெனில் கொரோனா தொற்றினால் மாரடைப்புகள் ஏற்படுவது என்பது மருத்துவ ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. ஆனால் கண்டிப்பாக கொரோனா தடுப்பூசியால் மாரடைப்பு ஏற்படாது.
கொரோனா பெருந்தொற்று காலகட்டத்தின் போது பலரும் மிக அதிக அளவில் மன அழுத்தத்திற்கும் அதிக கவலைக்கும் உள்ளாகி இருந்தனர். இவை நேரடியாக அவர்களின் இதயத்தில் பாதிப்பை ஏற்படுத்தி இருக்க வாய்ப்புகள் உண்டு. மேலும் பலருக்கும் மிக அதிக அளவிலான ரத்த அழுத்தம் இருந்ததையும், அவர்கள் மிக அதிக அளவு மன அழுத்தத்தில் இருந்ததையும் நாங்கள் பார்த்துள்ளோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா தடுப்பூசி பாதுகாப்பானதா?
கொரோனா தடுப்பூசி மிகவும் பாதுகாப்பானது. அதே சமயத்தில் நோய் தொற்றுடன் போராடக் கூடியது என்று இதய நல மருத்துவர் டாக்டர் எட்வின் ஜானத்தன் என்பவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது மக்களுக்கு அளிக்கப்படும் அனைத்து கொரோனா தடுப்பூசிகளும் ஆய்வகங்களில் பல்வேறு நாட்கள் சோதனை செய்யப்பட்டு, அதன் பிறகு மனித தன்னார்வலர்களால் மீண்டும் பரிசோதிக்கப்பட்டு அதற்கான சான்றிதழ் கிடைத்த பின்னரே பல்வேறு நாடுகளில் இதை பயன்படுத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதைத் தவிர கொரோனா தடுப்பூசி தயாரிப்பதற்கு என்று பிரத்தியேகமாக புதிய நவீன முறைகளை பயன்படுத்தி அவை தயாரிக்கப்படுகின்றன. எனவே கொரோனா தடுப்பூசியால் எந்தவித ஆபத்தும் ஏற்படாது.
Also Read : தொடர்ந்து இருமல் வந்துக்கிட்டே இருக்கா..? சளியா அல்லது மார்பு தொற்றா என உடனே செக் பண்ணுங்க..!
ஆனால் கொரோனா தடுப்பூசிகள் சில பக்க விளைவுகளை சிலருக்கு ஏற்படுத்தக் கூடும். சிலருக்கு எந்தவித பக்க விளைவும் இல்லாமலும் இருக்கக்கூடும். இது நபருக்கு நபர் மாறுபடலாம் என்று குறிப்பிட்டுள்ளார். மிக அரிதான சிலருக்கு மட்டுமே, கொரோனா தடுப்பூசி போட்ட பிறகு மிக பயங்கரமான உடல்நல குறைபாடுகள் ஏற்பட்டுள்ளன. தடுப்பூசி செலுத்திய பிறகு உடலில் உண்டாகும் பாதகமான விளைவுகள் கொரோனா தடுப்பூசியாலும் நிகழ்ந்திருக்கலாம் அல்லது அது ஒரு தற்செயலான நிகழ்வாகவும் இருக்கலாம். உதாரணத்திற்கு கொரோனா தடுப்பூசிக்கு பிறகு காய்ச்சல் ஏற்பட்டால் அது உடனடியாக தடுப்பூசியால் ஏற்பட்டது என்று பலர் நினைக்கலாம்.
உயிருக்கு ஆபத்தான பக்க விளைவுகள் மிக அரிதாகவே ஏற்படும்:
கொரோனா தடுப்பூசிக்கு பிறகு உயிருக்கே ஆபத்தான பக்க விளைவுகள் அனைவருக்கும் ஏற்பட்டு விடாது. ஏனெனில் இதற்கான அனைத்து பரிசோதனைகளையும் செய்து திருப்தி அடைந்த பின்னரே அவை மக்களுக்கு போடப்பட்டுள்ளன. மேலும் கொரோனா தடுப்பூசியினால் உண்டாகும் பக்க விளைவுகளையும் மருத்துவர்கள் மிக நெருக்கமாக கண்காணித்து வருகின்றனர். அதற்காகவே வேக்சின் அட்வான்ஸ் ரிபோட்டிங் சிஸ்டம் என்பதை உருவாக்கி அதன் மூலம் கொரோனா தடுப்பூசிக்கு பிறகு உண்டாகும் பக்க விளைவுகளை பற்றி அறிந்து வருகின்றனர்.
எனது ஒருவர் தனக்கு தடுப்பூசி போட்டதற்கு பின் உடல் நலனில் பாதிப்பு உண்டாகி உள்ளது என எண்ணினால் அவர் மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்படுவார். ஆனால் தற்போது வரை உலகம் முழுவதும் பலருக்கும் செய்த பரிசோதனையில் கொரோனா தடுப்பூசிக்கு எதிரான எந்தவித நம்பத் தகுந்த ஆதாரங்களும் கிடைக்கவில்லை. கொரோனா தடுப்பூசியால் தான் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்படுகின்றன என எந்தவித பரிசோதனையிலும் நிரூபிக்கப்படவில்லை என்று அந்த மருத்துவர் தெரிவித்துள்ளார்.
கொரோனா தடுப்பூசியினால் தான் இளம் வயது மாரடைப்பு மரணங்கள் உண்டாகின்றன?
சமீப காலமாக இளம் வயதினர் மாரடைப்பு ஏற்பட்டு உயிர்ழப்புகள் அதிகரித்து வருவதை குறித்து டாக்டர் ஜானத்தின் தனது கருத்தை பதிவு செய்துள்ளார். அவருடைய கூற்றின்படி திடீர் மாரடைப்பு மரணங்கள் பொதுவாக முப்பதிலிருந்து நாற்பது வயதுக்குட்பட்டோருக்கு அதிக அளவில் ஏற்படுகின்றன. மேலும் திடீர் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்பானது பெண்களை விட ஆண்களுக்கு இரு மடங்கு அதிகம் உள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதைவிட வயது குறைந்தவர்கள் கூட திடீர் மாரடைப்பால் பாதிக்கப்படலாம். முக்கியமாக சமீபத்தில் அதிகமாக விளையாட்டுகளில் ஈடுபடும் டீன் ஏஜ் வயதினருக்கு இந்த ஆபத்து உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
Also Read : 30 வயதை நெருங்கிட்டீங்களா..? உங்கள் உடலில் நடக்கப்போகும் இந்த மாற்றங்களை தெரிஞ்சுக்கோங்க..!
SADS எனப்படும் இளம் வயது மாரடைப்பானது கொரோனா தடுப்பூசிகள் வருவதற்கு முன்னர் இருந்தே இருக்கும் சாதாரணமான ஒரு நிகழ்வு தான். கார்டியோ மையோபதி என்னும் இதய தசைகளில் பாதிப்புகளை உண்டாக்கி திடீர் மரணங்களை உண்டாக்க கூடும். இதய தசைகளில் மிக அதிக அளவில் அழுத்தம் அல்லது வேலைபளூ சுமத்தப்படும் போது அவை இதயம் அல்லது அதில் உள்ள திசுக்களை பாதித்து திடீர் மரணத்திற்கு வழி வகுக்கிறது.
இளம் வயதினருடைய மாரடைப்பு அதிகரிப்பதற்கான காரணங்கள்:
ஆகியவை மாரடைப்பிற்கு காரணமாக இருக்கும் என மருத்துவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இது போன்ற விஷயங்களை சந்தேகிக்கும் முன்னர் நோயாளியின் மருத்துவ பின்னணியை முதலில் சோதிக்க வேண்டும். முக்கியமாக கரோனரி ஆர்டரி டிசிஸ் அல்லது குடும்பத்தில் யாருக்கும் அல்லது அவர்களது பரம்பரையில் யாரேனும் இதய நோயாளிகள் உள்ளனரா என்பதை பரிசோதித்து பார்க்க வேண்டும். ஏனெனில் இந்த நோயானது மரபு வழியாக ஏற்படக்கூடும். கொரோனா தடுப்பூசிக்கும் திடீர் மாரடைப்பிற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Corona Vaccine, Covid-19, Heart attack