ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையா? இந்த ஆரோக்கிய உணவுகளை சாப்பிடுங்கள்

ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையா? இந்த ஆரோக்கிய உணவுகளை சாப்பிடுங்கள்

ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையா?

ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையா?

மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்களால் எடை அதிகரிப்பது, முகத்தில் முடி வளர்வது, மனநிலை மாற்றங்கள், வீக்கம், மார்பக மென்மை மற்றும் வீக்கம் ஆகியவை ஏற்படும். வயதுக்கு வந்த பிறகு உடலில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பி 14 நாட்களும், புரோஜெஸ்ட்ரான் சுரப்பி அடுத்த 14 நாட்களும் உடலில் சுரக்கும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :

ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, அதிக எடை அல்லது எடை குறைவாக இருப்பது மற்றும் உடல் உழைப்பு தேவைப்படாத வாழ்க்கை முறை ஆகியவை பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் காலங்களைக் கொண்டிருப்பதற்கான முக்கிய காரணங்களாக அமைகின்றன. வயதுக்கு வந்த இளம்பெண்கள் சமீப காலங்களாக மாதவிடாய் சுழற்சியில் அதிகப்படியான மாற்றங்களை சந்தித்து வருகிறார்கள் என்று தான் கூறவேண்டும். 15 நாட்களுக்கு ஒரு முறை மாதவிடாய், அதிக இரத்த போக்கு, விட்டு விட்டு வரும் மாதவிடாய் என்று ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை அதிகளவில் சந்தித்து வருகிறார்கள்.

மாதவிடாய் சுழற்சியில் ஏற்படும் மாற்றங்களால் எடை அதிகரிப்பது, முகத்தில் முடி வளர்வது, மனநிலை மாற்றங்கள், வீக்கம், மார்பக மென்மை மற்றும் வீக்கம் ஆகியவற்றை ஏற்படுத்தும். வயதுக்கு வந்த பிறகு உடலில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பி 14 நாட்களும், புரோஜெஸ்ட்ரான் சுரப்பி அடுத்த 14 நாட்களும் உடலில் சுரக்கும். ஆக 28 நாட்கள் முடிவில் மாதவிடாய் சுழற்சி உண்டாகும். இந்த நாட்களின் எண்ணிக்கையானது அனைவருக்கும் ஒரே மாதிரி இருக்காது.

சிலருக்கு 21 நாட்கள் முதல் 35 நாட்கள் இடைவெளியில் உண்டாகக்கூடும். ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனையை சமாளிக்க மிகவும் பயனுள்ள வழி என்னவென்றால், உங்கள் வாழ்க்கை முறையை மேம்படுத்துதல், எடை குறைத்தல், ஆரோக்கியமான உணவை உட்கொள்வது மற்றும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது ஆகியவை தான். அந்த வகையில், மாதவிடாய் அல்லது அதன் சுழற்சி காலங்களை சரியான முறையில் தூண்டும் சில சூப்பர் உணவுகளை பற்றி காண்போம்.

1. வைட்டமின் சி நிறைந்த பழங்கள்

வைட்டமின்-சி நிறைந்த உணவுகள் மாதவிடாயை தூண்டுவதற்கு நன்மை பயக்கும். உதாரணமாக, பப்பாளி என்பது ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனைத் தூண்டும் கரோட்டின் கொண்ட ஒரு பழமாகும். இது முன்கூட்டியே மாதவிடாயை தூண்டலாம். அன்னாசிப்பழம் மற்றொரு வைட்டமின்-சி நிறைந்த பழமாகும்.

வைட்டமின் சி நிறைந்த பழங்கள்

இது ஒழுங்கற்ற காலங்களை ஏற்படுத்துவதற்கும் காரணமாக உள்ள வீக்கத்தைக் குறைக்கும். மற்ற வைட்டமின்-சி நிறைந்த பழங்களில் ஆரஞ்சு, எலுமிச்சை, கிவி மற்றும் மாம்பழம் ஆகியவை அடங்கும். அவற்றை தவறாமல் சாப்பிடுவது மாதவிடாய் சுழற்சி காலங்களில் ஏற்படும் மாற்றங்களை குறைத்து அவற்றை முன்கூட்டியே தயாரிக்கும் திறனை கொண்டுள்ளது. மாதுளைப்பழமே நம் கர்ப்பப்பை வடிவத்தில்தான் இருக்கும். அது, பீரியட்ஸை ரெகுலரைஸ் செய்ய பெரிய அளவில் உதவும்.

2. இஞ்சி

இஞ்சி ஒரு எம்மேனகோக் ஆகும். எனவே, உணவில் இஞ்சியை தவறாமல் சேர்ப்பது மாதவிடாய் ஒழுங்கற்ற தன்மையைக் குறைக்கும்.

இஞ்சி

மாதவிடாய் காலங்களைத் தூண்டுவதற்கு ஒரு தேக்கரண்டி தேனுடன் அரைத்த இஞ்சியை நீங்கள் வைத்திருக்கலாம். மேலும் ஒழுங்கு முறையற்ற மாதவிடாய் காலங்களை எதிர்கொள்ளும் போது, நீங்கள் போதுமான இஞ்சியை உட்கொள்கிறீர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.

3. மஞ்சள்

மஞ்சள் என்பது கருப்பை மற்றும் இடுப்புப் பகுதியில் இரத்த ஓட்டத்தைத் தூண்டும் ஒரு எமெங்காகோக் ஆகும். மஞ்சள் உடலில் ஆண்டிஸ்பாஸ்மோடிக் விளைவைக் கொண்டிருக்கிறது. இது கருப்பை விரிவடைந்து மாதவிடாயைத் தூண்டுகிறது.

எனவே மாதவிடாய் பிரச்சனைகளை குறைக்க, ஹால்டி தூத் அல்லது மஞ்சள் லாட்டி-யை தவறாமல் குடிக்க வேண்டும்.

4. வெல்லம்

வெல்லத்தை இஞ்சி, எள், மஞ்சள் மற்றும் கொத்தமல்லி விதைகளுடன் கலந்து ஒரு கிளாஸ் வெதுவெதுப்பான நீருடன் அதனை மென்று சம்பிட வேண்டும்.

வெல்லம்

இதை தவறாமல் குடிப்பதால் மாதவிடாய் காலங்களை தூண்டலாம்

5. பீட்ரூட்ஸ் மற்றும் கேரட்

பீட்ரூட் இரும்பு, கால்சியம் மற்றும் ஃபோலிக் அமிலத்தின் சக்தியாகும். இந்த காய்கறி, பெண்கள் பொதுவாக மாதவிடாய் காலங்களில் அனுபவிக்கும் நீர் தக்கவைப்பு மற்றும் வீக்கத்தை குறைக்கும். அதேபோல இதனுடன் கேரட் சேர்த்து சாப்பிடுவதும் நல்லது.

பீட்ரூட்

6. நெல்லிக்காய்

ஒரு நெல்லிக்காய் 10 ஆப்பிள்களுக்குச் சமம் என்று சொல்வார்கள். அதில், விட்டமின் சி இருப்பதால் இரும்பு சத்தினை உறிஞ்ச உதவும். நெல்லிக்காயை முதல் நாள் தேனில் ஊறவைத்து, மறுநாள் உண்ணலாம். மாதவிடாய் பிரச்சனைகளுக்கு நெல்லிக்காய் சாப்பிடுவது நல்லது.

நெல்லிக்காய்

7. வெந்தயம்

மாதவிடாய் பிரச்சனைக்கு வெந்தயம் சாப்பிடலாம். அதில், குளூகோஸ் மெட்டபாலிசம் தன்மை உள்ளது. நார்ச்சத்தும் அதிகமாக இருப்பதால், ஹார்மோனை ரெகுலேட் செய்ய பயன்படும்.

வெந்தயம்

8. கருஞ்சீரகம்

ஒரு ஸ்பூன் கருஞ்சீரகத்தை, ஒரு டம்ளர் நீரில் கொதிக்க வைத்து, தேன் கலந்து குடிக்கலாம். இதில் Anti-inflammatory, Anti-diabetic, ஈஸ்ட்ரோஜன் போன்றவை இருப்பதால், உடலிலும் கர்ப்பப்பையிலும் இருக்கும் அழுக்குகளை நீக்கப் பயன்படுகிறது.

கருஞ்சீரகம்

9. எள்ளுருண்டை

எள்ளுருண்டை மற்றும் கருப்பு எள்ளுருண்டை மிகவும் நல்லது. இதில் இருக்கும் நல்ல கொழுப்பு, கால்சியம், மெக்னீஷியம் போன்றவை ரத்தத்தில் இருக்கும் சர்க்கரையை குறைக்கவும், எலும்பை உறுதி செய்யவும் பயன்படும். மேலும், இது உடல் எடையையும் சரி செய்யும்.

எள்ளுருண்டை

சிலருக்கு மாதவிடாய் சரியாக வரும். ஆனால், சரியான ரத்தப்போக்கு இருக்காது. இதனைத் தவிர்க்க இரும்புச் சத்து அதிகமான உணவைச் சாப்பிட வேண்டும். பேரீச்சை, உலர்ந்த திராட்சை, அத்தி, மாதுளை, கருவேப்பிலை ஜூஸ், அகத்திக்கீரை, சுண்டக்காய் ஆகியவற்றை உண்பதன் மூலம் இதனைச் சரி செய்யலாம். இருப்பினும், இந்த உணவுகளை சாப்பிடுவது மாதவிடாய் காலங்களை தூண்டுவதற்கு மட்டுமே உதவக்கூடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். ஆனால் அவை ஒழுங்கற்ற காலங்களுக்கு ஒரு தீர்வாகவோ அல்லது சிகிச்சையாகவோ அமையாது.

First published:

Tags: Lifestyle