பெண்கள் நீண்ட நாட்களாக மாதவிடாய் வராமல் சிரமப்ப்பட்டாலோ அல்லது அடிக்கடி ஒழுங்கற்ற மாதவிடாயால் பாதிக்கப்படிருந்தாலோ அவர்கள் டைப் 2 நீரிழிவு நோய் அல்லது இதய நோயால் பாதிக்கப்படலாம் என்று ஆய்வுகள் வந்த நிலையில் இப்போது ஆபத்துக்குரிய கல்லீரல் நோயாலும் பாதிக்கப்படலாம் என்று கூறியுள்ளது.
சமீபத்தில் journal of Clinical Endocrinology and Metabolism என்னும் இதழில் இந்த ஆய்வு வெளியாகியுள்ளது. அதில் பெண்கள் ஒழுங்கற்ற மாதவிடாயால் பாதிக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு மது அல்லாத கொழுப்பு கல்லீரல் நோய் (nonalcoholic fatty liver disease) (NAFLD)(NAFLD) ஏற்பட வாய்ப்புள்ளது என்று கூறியுள்ளது.
அமெரிக்காவில் 24% பேருக்கு NAFLD இருப்பதை கண்டறிந்துள்ளனர். இது உங்கள் கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு சேரும் ஒரு நாள்பட்ட நோயாகும். அதிக அளவு மது அருந்துவதால் இந்த கொழுப்புக் கட்டி ஏற்படுவதில்லை.
NAFLD நாள்பட்ட கல்லீரல் நோய் நாளுக்கு நாள் அதிகரித்து இறக்கும் அபாயத்திற்கு கொண்டு செல்லும் கொடிய நோய் என்று கூறியுள்ளது. NAFLD நோய்க்கு சிகிச்சை அளிக்க எந்த மருந்துகளும் அனுமதிக்கப்படாததால், உணவு மற்றும் உடற்பயிற்சி மட்டுமே இதை கட்டுப்பாட்டில் வைக்க வழியாகும். இந்த நோயை வராமல் தவிர்க்கவும் இதுதான் வழி.
"எங்கள் ஆய்வு முடிவுகள் நீண்ட அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள் NAFLD வளரும் அபாயத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்று காட்டுகின்றன. மேலும் இந்த பிரச்சனை உடல் பருமனால் உருவாவதில்லை" என்று மொத்த சுகாதார மையத்தின் கோஹார்ட் ஸ்டடீஸ் மையத்தின் MD, PhD, Seungho Ryu கூறினார்.
முந்தைய ஆய்வுகள் நீண்ட அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள் டைப் 2 நீரிழிவு மற்றும் இதய நோய்களுடன் தொடர்புடையவை என்பதைக் காட்டின. ஆனால் நீண்ட அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகளுக்கும் NAFLD க்கும் இடையிலான தொடர்பை கண்டறியும் முதல் ஆய்வு எங்களுடையது".
கர்ப்பப்பை கட்டி எதனால் ஏற்படுகிறது தெரியுமா..? அறிகுறிகளும்... சிகிச்சை முறைகளும்...
ஆராய்ச்சியாளர்கள் 40 வயதுக்குட்பட்ட 72,092 பெண்களின் தரவுகளின் தொகுப்பை ஆய்வு செய்தனர். இவர்களில் 28% பெண்களுக்கு நீண்ட அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள் இருந்தன. மேலும் 7% பெண்களுக்கு NAFLD இருந்தது. ஆராய்ச்சியாளர்கள் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகும் அவர்களை பின் தொடர்ந்தனர். அவர்களில் கிட்டத்தட்ட 9% பெண்களில் NAFLD பிரச்சனையால் புதிதாக பாதிக்கப்பட்ட பெண்கள் இருந்தனர்.
இளம், மாதவிடாய் நின்ற பெண்களுக்கு நீண்ட அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள் மற்றும் NAFLD அதிக ஆபத்து ஆகியவற்றுக்கு இடையே ஒரு தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் முடிவு செய்தனர்.
"நீண்ட அல்லது ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகளைக் கொண்ட இளம் பெண்கள், NAFLD மற்றும் பிற இதய நோய்களின் அபாயத்தைக் குறைக்க வாழ்க்கை முறை மாற்றங்களால் மட்டுமே சரி செய்ய முடியும்" என்று Ryu கூறினார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Irregular periods, Liver Disease, Periods