ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியால் மரணம் கூட ஏற்படுமாம்... எச்சரிக்கும் மருத்துவ ஆய்வு..!

ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியால் மரணம் கூட ஏற்படுமாம்... எச்சரிக்கும் மருத்துவ ஆய்வு..!

மாதவிடாய் சுழற்சி

மாதவிடாய் சுழற்சி

ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைகள் இனப்பெருக்க வயதுடைய பெண்களிடையே நடைபெறும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது என தெரியவந்துள்ளது. மேலும் இதய நோய், டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் மன நல பிரச்சனைகள் போன்றவை இதனால் ஏற்படக்கூடும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பெண்களுக்கு ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சியால் இதய நோய், புற்றுநோய், மனநல நோய் ஏற்படுத்துவதோடு சில சமயங்களில் மரணம் கூட ஏற்படும் என எச்சரிக்கின்றனர் மருத்துவ ஆராய்ச்சியாளர்கள்.

பெண்கள் 10 முதல் 16 வயதுக்குள் நிகழும் பருவமாறுதலில் தொடங்குகிறது மாதவிடாய் சுழற்சி. ஒரு பெண் வயதிற்கு வந்த பிறகு அவர்களது உடலில் ஈஸ்ட்ரோஜன் சுரப்பி 14 நாள்களும், புரோஜெஸ்ட்ரான் சுரப்பி 14 நாள்களும் சுரக்கும். இந்த சுரப்பிகள் முடிந்த 28 வது நாள்களில் மாதவிடாய் சுழற்சி உண்டாகும். ஆனால் இந்த நடைமுறை அனைத்து பெண்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்காது. சிலருக்கு 20 நாளில் பீரியட்ஸ் ஆகிவிடும். சிலருக்கு 2 மாதங்கள் ஆனாலும் பீரியட்ஸ் வராது. இன்னும் ஒரு சிலருக்கோ சரியான சுழற்சியில் பீரியட்ஸ் வந்தாலும் தொடர்ந்து 5 முதல் 10 நாள்களுக்காவது நீடிக்கும். இதனால் மிகுந்த பிரச்சனையை அவர்கள் சந்திக்க நேரிடும். எனவே இதுக்குறித்த பொதுவான மருத்துவ பிரச்சனைகளை தெரிந்து கொள்வது அவசியமான ஒன்றாகிவிட்டது.

இந்த சூழலில் தான், ஒழுங்கற்ற மாதவிடாய் மற்றும் நீண்ட கால மாதவிடாய் பிரச்சனைகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின் முடிவில், ஒழுங்கற்ற மாதவிடாய் பிரச்சனைகள் இனப்பெருக்க வயதுடைய பெண்களிடையே நடைபெறும் பொதுவான பிரச்சனைகளில் ஒன்றாக உள்ளது என தெரியவந்துள்ளது. மேலும் இதய நோய், டைப் 2 நீரிழிவு நோய் மற்றும் மன நல பிரச்சனைகள் போன்றவை இதனால் ஏற்படக்கூடும் என எச்சரிக்கின்றனர் மருத்துவர்கள். ஆனால் ஒழுங்கற்ற அல்லது நீண்ட மாதவிடாய் சுழற்சியை இறப்புடன் இணைக்கும் சான்றுகள் மிகக்குறைவாக உள்ளது என்று தெரிவிக்கின்றது ஆய்வுகள்.

இந்த 7 அறிகுறிகளை வைத்து உங்கள் கல்லீரலில் பாதிப்பு இருப்பதை கண்டறியலாம்..!

இருந்தப் போதும் 14-17 வயது, 18-22 வயது மற்றும் 29-46 வயதுடைய பெண்கள் தங்கள் மாதவிடாய் சுழற்சியின் வழக்கமான காலம் மற்றும் சீரான தன்மைக்குறித்த புகாரளித்தனர். இதில் 894 வயதில் புற்றுநோய் மற்றும் 172 பேர் இருதய நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே வயதில் ஒழுங்கற்ற மாதவிடாய் சுழற்சிகள் இருப்பதாகப் புகாரளிக்கும் பெண்கள் அதிக இறப்பு விகிதங்களை அனுபவித்ததாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எனவே ஒழுங்கற்ற மற்றும் நீண்ட கால மாதவிடாய் சுழற்சியை அனுபவிக்கும் நபர்களாக இருப்பவர்கள் எச்சரிக்கையுடன் இருப்பதோடு மகப்பேறு மருத்துவர்களிடம் முறையாக சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.

பெண்கள் இதுப்போன்ற பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் போது மருத்துவர்களிடம் நேரடியாக மருத்துவ அறிவுரைகளைப் பெறுவது அவசியமான ஒன்று தான். அதே வேளையில் நல்ல உணவு பழக்கங்களையும் பின்பற்ற வேண்டும். குறிப்பாக டீயில் இஞ்சியைக் கலந்துக் குடிக்கலாம். பப்பாளி சாப்பிடுவது, வெதுவெதுப்பான நீரில் சீரகம் சேர்த்துப் பருகுவது, ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்வது போன்றவற்றை முறையாகப் பின்பற்றி வந்தாலே சீரான மாதவிடாய் சுழற்சி ஏற்படக்கூடும்.

எனவே பெண்கள் ஒழுங்கற்ற மற்றும் நீண்ட கால மாதவிடாய் பிரச்சனைகளை நீண்ட அனுபவிக்க நேரிட்டால் உடனடியாக மருத்துவரை அணுகி பிரச்சனைக்குத் தீர்வு காணுங்கள்.

Published by:Sivaranjani E
First published:

Tags: Irregular periods