மாதவிடாய் தள்ளிப்போக இதுதான் காரணமா..? சரி செய்யும் வழிகள்..!

மாதவிடாய் தள்ளிப்போக இதுதான் காரணமா..? சரி செய்யும் வழிகள்..!

மாதிரி படம்

ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, அதிகப்படியான உடற்பயிற்சி, மன அழுத்தம், போதைப்பொருள் பயன்பாடு, பி.சி.ஓ.எஸ், எண்டோமெட்ரியோசிஸ், ஃபைப்ராய்டுகள், தைராய்டு, முன்கூட்டிய கருப்பை செயலிழப்பு போன்ற பிற மகளிர் மருத்துவ நிலைமைகளை அடையாளம் காட்டலாம்.

  • Share this:
பல பெண்களுக்கு மிக முக்கியமான பிரச்சனையாக இருப்பது ஒழுங்கற்ற அல்லது தாமதமான மாதவிடாய் சுழற்சி. பெண்களுக்கு ஏற்படும் பல்வேறு உடல்நல கோளாறுகளுக்கு சீரற்ற மாதவிடாய் மூல காரணமாக உள்ளது. வாழ்க்கை முறை மாற்றங்கள் முதல் அடிப்படை மருத்துவ நிலைமைகள் வரை பல விஷயங்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கிறது.

ஒவ்வொரு பெண்களின் உடலும் அவர்களின் மாதவிடாய் காலமும் வேறுபட்டது. சில பெண்கள் பிரச்சனைகள் ஏதுமின்றி இயல்பான மாதவிடாய் சுழற்சிகளால் ஆசீர்வதிக்கப்படுகிறார்கள். சிலருக்கு மாதவிடாய் சுழற்சியில் சிக்கல் ஏற்படுகிறது. சீரற்ற அல்லது தாமதமான மாதவிடாய் காரணமாக குழந்தைக்கு முயற்சி செய்யும் பெண்களில் எப்போது அண்டவிடுப்பு நிகழ்கிறது என்பதை கணிப்பது கடினம்.

சராசரி:

சராசரியாக ஒரு பெண் ஒவ்வொரு 21 முதல் 35 நாட்களுக்குள் தனது மாதவிடாய் சுழற்சியை பெறுகிறார். மாதவிடாய் ஏற்பட்டால் பொதுவாக 2 முதல் 7 நாட்கள் வரை நீடிக்கும். ஆனால் கர்ப்பமாக இருப்பதை தவிர்த்து பல காரணங்களால் பெண்கள் தங்களது மாதவிடாய் காலத்தை தவற விடுகிறார்கள் அல்லது சீரற்ற மாதவிடாய் காலத்தை பெறுகிறார்கள்.



இந்த முக்கிய பிரச்னைக்கு சாதாரண உடலியல் நிலைமைகள், மன அழுத்தம், உடல் பருமன், உடலுக்குள் கவலையால் ஏற்படும் பிரச்சனைகள், வாழ்க்கை முறை மாற்றங்கள் அல்லது ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகள் உள்ளிட்டவை பொதுவான காரணங்களாக கூறப்படுகிறது. இருப்பினும், ஒவ்வொரு பெண்ணும் புரிந்து கொள்ள வேண்டும், நீங்கள் வித்தியாசமாக இருக்கலாம். தவறவிட்ட அல்லது ஒழுங்கற்ற காலத்தை இயல்பானவற்றின் அடிப்படையில் பார்க்க வேண்டும். பெண்களின் வயதுக்கு ஏற்ப காரணங்களும், சிகிச்சையும் வேறுபடுகின்றன என இது குறித்து மருத்துவர்கள் கூறுகின்றனர்.

மாதவிடாய் தாமதத்திற்கு காரணம்?

இயல்பாக சில பெண்களுக்கு ஒரு சில காரணங்களால் வழக்கமான இடைவெளி இன்றி மாதவிடாய் ஏற்படுவது தள்ளி போகும். குறித்த காலத்தில் பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படாத நிலையை அமினோரியா என்று அழைக்கின்றனர். கருப்பை போதுமான அளவு பெண் ஹார்மோனை உருவாக்குவதை நிறுத்தும் போது அமினோரியா நிகழ்கிறது. பிரைமரி அமினோரியா என்பது 16 வயதிற்குள் காலம் இல்லாத ஒருவருக்கு மாதவிடாய் இல்லாததைக் குறிக்கிறது பருவமடைதல் மற்றும் மாதவிடாய் நிறுத்தத்திற்கு இடையே மாதவிடாய் இல்லாத போது அமினோரியா ஏற்படுகிறது. பருவ வயது 15 வயதிற்குள் தங்கள் காலங்களைத் தொடங்காத பெண்கள் மற்றும் தொடர்ச்சியாக மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாதவிடாய் காலங்களைத் தவறவிட்ட பெண்களுக்கு அமினோரியா நோய் பரவலாக இருப்பது தெரியவந்துள்ளது.



இது ஒரு நோய் அல்ல, ஒரு நபர் மலட்டுத்தன்மையுள்ளவர் என்று அர்த்தமல்ல. ஆனால் இது ஒரு உடல்நலப் பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம். கொஞ்சம் கவனம் தேவை. அமினோரியா தாய்ப்பால் கொடுக்கும் போது ஆரோக்கியமான பெண்களுக்கு ஏற்படலாம் அல்லது இது ஹார்மோன் ஏற்றத்தாழ்வு, அதிகப்படியான உடற்பயிற்சி, மன அழுத்தம், போதைப்பொருள் பயன்பாடு, பி.சி.ஓ.எஸ், எண்டோமெட்ரியோசிஸ், ஃபைப்ராய்டுகள், தைராய்டு, முன்கூட்டிய கருப்பை செயலிழப்பு போன்ற பிற மகளிர் மருத்துவ நிலைமைகளை அடையாளம் காட்டலாம்.

சில காரணங்கள்:

அதிக மன அழுத்தத்தில் இருப்பது தற்காலிகமாக அண்டவிடுப்பதை நிறுத்த கூடும். அண்டவிடுப்பின் பற்றாக்குறை மாதவிடாய் காலத்தை தாமதப்படுத்தும். உடல் எடையில் ஏற்படும் மாற்றங்கள் (எடையை அதிகரித்தல் / குறைத்தல்) ஹார்மோன் ஏற்றத்தாழ்வுக்கு வழிவகுத்து தாமதமான மாதவிடாய் வரக்கூடும் அல்லது முற்றிலும் நின்று போகும். பொதுவாக 40 வயதுகளின் பிற்பகுதியில் உள்ள பெண்களுக்கு பெரிமெனோபாஸ் ஏற்படும்.

கர்ப்ப காலத்தில் அதிக ஓய்வு ஆபத்து - எச்சரிக்கும் மருத்துவர்கள்!

மாதவிடாய் முழுவதும் நிற்பதற்கு முன் ஏற்படும் பெரிமெனோபாஸ் பல ஆண்டுகள் நீடிக்கும். இந்த வயதிலான பெண்களுக்கு தவறவிடும் மாதவிடாய் காலங்கள் பெரிமெனோபாஸின் முதல் அறிகுறியாகும். நீரிழிவு நோய், காசநோய், கல்லீரல் கோளாறுகள் போன்ற நாட்பட்ட நோய்களும் உங்கள் மாதவிடாய் சுழற்சியை பாதிக்கும். அதிகம் செயல்படும் அல்லது செயல்படாத தைராய்டு சுரப்பி மாதவிடாய் பிரச்சனைகளுக்கு காரணமாக இருக்கலாம்.



தவறவிட்ட அல்லது தாமதமான மாதவிடாய் காலத்தை கண்டறிதல்..

விரிவான வரலாறு, குடும்ப வரலாறு, நோயாளியின் பரிசோதனைஅறிக்கை, ஃபோலிகுலர் தூண்டுதல் ஹார்மோன், லுடினைசிங் ஹார்மோன், தைராய்டு தூண்டும் ஹார்மோன், ஈஸ்ட்ரோஜன், டெஸ்டோஸ்டிரோன் புரோலாக்டின், பீட்டா எச்.சி.ஜி உள்ளிட்டவற்றின் ஆய்வக முடிவுகள், அல்ட்ராசவுண்ட் உள்ளிட்டவை இதை கண்டறிய உதவுகின்றன வழக்கமான வாழ்க்கை முறை மாற்றங்கள் முதல் அடிப்படை மருத்துவ நிலைமைகள் வரை பல விஷயங்கள் ஒழுங்கற்ற மாதவிடாய் காலங்களை ஏற்படுத்தும். மாதவிடாய் தொடர்ந்து தாமதமாக இருந்தால், காரணத்தை கண்டறிய மகளிர் மருத்துவ நிபுணரை கலந்தாலோசிக்கலாம்.

 
Published by:Sivaranjani E
First published: