Home /News /lifestyle /

உஷார்... இரும்புச்சத்து அதிகமானால் என்ன ஆகும் தெரியுமா..? உயிருக்கே ஆபத்தாகலாம்

உஷார்... இரும்புச்சத்து அதிகமானால் என்ன ஆகும் தெரியுமா..? உயிருக்கே ஆபத்தாகலாம்

இரும்பு சத்து பக்கவிளைவுகள்

இரும்பு சத்து பக்கவிளைவுகள்

இரும்பு சத்து அதிகரிக்கும் போது இதயத்துடிப்பை அளவுக்கு அதிகமாக துடிக்கச் செய்கிறது. கல்லீரல் வீக்கம், கல்லீரல் அலர்ச்சி, இதயம் செயலிழத்தல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. மேலும் ஆண்மை குறைவு, பக்கவாதம், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனை, நீரிழிவு நோய் ஆகியவற்றையும் ஏற்படுத்தக் கூடும்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
ரத்தத்தில் இரும்புச்சத்து அளவிற்கு அதிகமாக இருப்பதால் ஏற்படும் “ஹீமோகுரேமெட்டோசிஸ்” என்னும் நோயானது உடலின் இதயம், கல்லீரல் போன்ற பல பாகங்களை தாக்கி உயிருக்கே ஆபத்தாக கூடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இரும்புச்சத்து உடலுக்கு தேவையான தாதுக்களில் முக்கியமான ஒன்றாகும். ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினை உற்பத்தி செய்வதற்கு மிக முக்கியமான ஒன்றாக உள்ளது. இந்த ஹீமோகுளோபின் தான் ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை உடல் முழுவதும் எடுத்துச் செல்வதற்கும் ஆக்சிஜனை உடல் முழுவதும் கடத்திச் செல்வதற்கும் முக்கியமான காரணியாக செயல்படுகிறது. மேலும் இன்று இரும்புச் சத்தானது உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கும் வளர்ச்சிதை மாற்றத்திற்கும் மிக முக்கிய காரணியாக கருதப்படுகிறது.

இதுபோன்று மிக மிக முக்கியமான நன்மைகளை உடலுக்கு செய்யும் இந்த இரும்பு சத்தானது சில நேரங்களில் உயிருக்கே உலை வைக்கவும் கூடும். “அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு” என்பதற்கேற்ப ரத்தத்தில் இந்த இரும்பு சத்தின் அளவு கூடும் பொழுது அது “ஹீமோகுரேமெட்டோசிஸ்” என்னும் நோயை ஏற்படுத்துகிறது. இதை முதலிலேயே கண்டறிந்து சிகிச்சை அளிக்காவிட்டால் உடலின் பல உறுப்புகளை தாக்கி அவற்றை சரி செய்யவே முடியாதபடி செய்து உயிருக்கே ஆபத்தான நிலையை ஏற்படுத்தி விடும்.



“ஹீமோகுரேமெட்டோசிஸ்” என்றால் என்ன?

இரத்தத்தில் உடலுக்குத் தேவையான அளவிற்கு அதிகமான அளவில் இரும்புச்சத்து சேர்வதே “ஹீமோகுரேமெட்டோசிஸ்” என அழைக்கப்படுகிறது. இந்தப் பிரச்சனையானது பொதுவாக மரபணு வழியாக கடத்தப்பட்டு ஏற்படுகிறது என ஆய்வில் தெரியவந்துள்ளது இந்த இரும்புச்சத்து அதிகமாகும் போது உடலின் முக்கிய உறுப்புகளான இதயம், கல்லீரல், கணையம் ஆகிய உறுப்புகளை செயலிழக்க செய்து விடும்.

வெந்நீரை குடிப்பது உடல் எடையை குறைக்க உதவாதா..? ஊட்டச்சத்து நிபுணரின் அதிர்ச்சியூட்டும் தகவல்

இரும்பு சத்து அதிகரிக்கும் போது இதயத்துடிப்பை அளவுக்கு அதிகமாக துடிக்கச் செய்கிறது. கல்லீரல் வீக்கம், கல்லீரல் அலர்ச்சி, இதயம் செயலிழத்தல் ஆகியவற்றை ஏற்படுத்துகிறது. மேலும் ஆண்மை குறைவு, பக்கவாதம், பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனை, நீரிழிவு நோய் ஆகியவற்றையும் ஏற்படுத்தக் கூடும். இதை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சரியான சிகிச்சை அளிக்காவிட்டால் உயிருக்கே ஆபத்தாக மாறிவிடும்.



நோய்க்கான காரணங்கள் மற்றும் அறிகுறிகள்:

மரபணு மூலம் கடத்தப்படும் இந்நோயானது மிகப் பொதுவான உள்ளது. சரியான முறையில் சரியான நேரத்தில் சிகிச்சை அளிப்பதன் மூலம் இதனை குணப்படுத்தி விடலாம். வடக்கு ஐரோப்பாவில் வாழும் மக்களுக்கு இந்த நோயின் தாக்கம் அதிகமாக உள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

இரும்புச் சத்து குறைபாடு : கண்களில் காணப்படும் இந்த அறிகுறி பற்றித் தெரியுமா?

இந்த இந்த நோயானது பெண்களை விட ஆண்களையே அதிகமாக தாக்குகிறது. ஏனெனில் மாதவிடாயின் போதும் குழந்தைபேறின் போதும் இரத்தத்தின் வாயிலாக பெண்கள் அதிகமான இரும்புச்சத்தை இழக்கின்றனர். மேலும் பொதுவாகவே பெண்களின் உடலானது குறைந்த அளவிலான இரும்புச்சத்தையே சேர்த்துவைக்கிறது. இந்த நோயினால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இதன் அறிகுறிகள் வெளிப்படையாக தென்படுவதில்லை எனவே இந்த நோயை கண்டறிவது சவாலான விஷயமாக உள்ளது.

அறிகுறிகள் :

1. எப்போதுமே ஒருவித உடல் சோர்வுடனும் அல்லது களைப்புடன் காணப்படுவது
2. உடல் பலவீனமாக உணர்வது
3. சீரற்ற இதயத்துடிப்பு
4. மூட்டுகளில் ஏற்படும் வலி
5. அடிக்கடி ஏற்படும் வயிற்று வலி
6. திடீரென காரணம் இன்றி உடல் எடை குறைதல்



நோய் வராமல் காக்கும் வழிமுறைகள்:

சரியான உணவு பழக்கம்: இரும்புச்சத்து அதிகம் கொண்டுள்ள ஆரஞ்சு பழம், அண்ணாச்சி பழம், எலுமிச்சை பழம் மற்றும் கீரை வகைகள் ஆகியவற்றை உணவில் சேர்ப்பதை குறைத்துக் கொள்ள வேண்டும். மது அருந்துவதையும் புகைப்பிடிப்பதையும் முற்றிலும் கைவிட வேண்டும்.

எலும்புகளைப் பாதுகாக்கும் ஆரோக்கிய உணவுகளின் லிஸ்ட் - மறக்காமல் ஃபாலோ பண்ணுங்கள்!

சிகிச்சை முறைகள்:

Iron chelation therapy:

உடலில் உள்ள அதிகப்படியான இரும்புச்சத்தை நீக்குவதற்கு செய்யப்படும் சிகிச்சை முறையாகும்.

Phlebotomy:

இது ரத்தத்தை உறிஞ்சி அதிலிருந்து அதிகமான இரும்புச்சத்தை பிரித்தெடுக்கும் ஒரு முறையாகும்.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Erectile Dysfunction, Iron Deficiency, Iron Rich Foods

அடுத்த செய்தி