நம் உடல் வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு தேவைப்படும் ஒரு அத்தியாவசியமான மினரல் இரும்பு சத்து ஆகும். முக்கியமாக ரத்த உற்பத்திக்கு உடலுக்குத் தேவையான ஒரு முக்கியமான சத்து. இந்த இரும்பு சத்தை பயன்படுத்தி தான் நம் உடல் நுரையீரலில் இருந்து உடலின் அனைத்து பாகங்களுக்கும் ஆக்ஸிஜனை ஹீமோகுளோபின் எடுத்துச் செல்லும். மேலும் தசைகளுக்கு ஆக்ஸிஜனை வழங்கும் புரதமான மயோகுளோபினுக்கும் போதுமான இரும்பு சத்து தேவைப்படுகிறது. இரும்பு சத்து குறைபாடு காரணமாக நம் உடல் ஆரோக்கியமான சிவப்பு ரத்த அணுக்களின் குறைவான எண்ணிக்கையால் பாதிக்கப்படலாம்.
எனவே நம் உடலில் போதுமான அளவு ஹீமோகுளோபின் இல்லை என்றால், நம் திசுக்கள் மற்றும் தசைகள் திறம்பட வேலை செய்ய போதுமான ஆக்ஸிஜன் கிடைக்காது. இது ரத்த சோகை ஏற்பட வழிவகுக்கிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) புள்ளிவிவரப்படி, உலகளவில் 5 வயதிற்குட்பட்ட 42% குழந்தைகளும், 40% கர்ப்பிணிப் பெண்களும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
காரணங்கள் மற்றும் அறிகுறிகள்:
மற்றவர்ளுடன் ஒப்பிடும் போது பெண்கள், அடிக்கடி ரத்த தானம் செய்பவர்கள், குழந்தைகள், சைவ உணவை மட்டுமே சாப்பிடுபவர்கள் மற்றும் குழந்தைகளுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படும் அபாயம் அதிகம் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுவதற்கான காரணங்களில் முதல் 2 முக்கிய காரணங்களாக இருப்பது அன்றாட உணவில் போதுமான இரும்பு சத்து சேராதது மற்றும் இரும்பு சத்தை எடுத்து கொள்ள நம் உடல் இயலாத நிலையில் இருப்பது.
தலைசுற்றல், எப்போதுமே சோர்வாக இருப்பது, குளிர்ச்சியாக உணர்வது, தலைக்கு போதுமான ரத்தம் கிடைக்காததால் ஏற்படும் லேசான கிறுகிறுப்பு, மூச்சு திணறல், நெஞ்சு வலி , பசியின்மை, வெளிறிய தோல், சேதமடைந்த முடி, எளிதில் உடைய கூடிய நகங்கள் உள்ளிட்டவை, கால்களில் ஊர்ந்து செல்வது அல்லது அரிப்பது போன்ற விரும்பத்தகாத உணர்வுகள், அடிக்கடி தொற்று ஏற்படுவது, மனச்சோர்வு உள்ளிட்டவை உடலில் இரும்பு சத்து குறைபாடு இருப்பதற்கான அறிகுறிகள் ஆகும்.
இரும்புச்சத்து குறைபாட்டை கீழ்காணும் வழிகளில் சமாளிக்க முடியும் :
* இரும்புச்சத்து நிறைந்த தாவர அடிப்படையிலான பூசணி விதைகள், கீரை, முட்டைக்கோஸ், திராட்சை, பீன்ஸ் போன்ற உணவுகளை அதிகம் எடுத்து கொள்ள வேண்டும்.
* இரும்புச்சத்து நிறைந்து காணப்படும் கோழி, இறால், முட்டை போன்ற விலங்கு சார்ந்த உணவுகளை அதிகம் சாப்பிட்டு வரலாம்.
எலும்புகளை பாதிக்கும் விட்டமின் டி குறைபாடு : தவிர்க்க உதவும் 5 உணவுகள்
* இரும்பு சத்து நிறைந்த சப்ளிமெண்ட்ஸ்களை சரியான நிபுணரின் ஆலோசனைக்கு பிறகு எடுக்கலாம்.
* வைட்டமின் சி நிறைந்த தக்காளி, ப்ரோக்கோலி, பெர்ரி, சிட்ரஸ் மற்றும் அன்னாசிப்பழங்களை உணவில் சேர்ப்பதன் மூலம் உடலின் இரும்பு உறிஞ்சும் கெப்பாசிட்டியை அதிகரிக்க முடியும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Iron Deficiency