முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இரும்புச் சத்து குறைபாடு : கண்களில் காணப்படும் இந்த அறிகுறி பற்றித் தெரியுமா?

இரும்புச் சத்து குறைபாடு : கண்களில் காணப்படும் இந்த அறிகுறி பற்றித் தெரியுமா?

 இரும்புச் சத்து குறைபாடு இருந்தால் கண்களில் தெரியும்

இரும்புச் சத்து குறைபாடு இருந்தால் கண்களில் தெரியும்

இரும்புச் சத்துக் குறைபாடு என்பது இளைப்பு, மூச்சு விடுவதில் சிரமம், சோர்வு, முடி உதிர்வு, சருமம் வெளுத்துப் போவது, கவனக் குறைவு என்று பல விதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

இரும்புச் சத்துக் குறைபாடு என்பது குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை எல்லா வயதினரையும் பாதிக்கிறது. உடலில் உள்ள சிவப்பு ரத்த அணுக்கள், உடல் முழுவதும் ஆக்சிஜன் மற்றும் ரத்தத்தைக் கொண்டு செல்கின்றன. சிவப்பு ரத்த அணுக்களின் உற்பத்திக்கு இரும்புச் சத்து முக்கியம். எனவே, இரும்புச் சத்துக் குறைபாடு என்பது தீவிரமான பல வித பாதிப்புகளை ஏற்படுத்தும். இளைப்பு, மூச்சு விடுவதில் சிரமம், சோர்வு, முடி உதிர்வு, சருமம் வெளுத்துப் போவது, கவனக் குறைவு என்று பல விதமான பிரச்சனைகளை ஏற்படுத்தும்.

மேலே உள்ளவை தவிர்த்து, உடலுக்கு ஆக்சிஜன் கொண்டு செல்லும் சிவப்பு அணுக்கள் குறையும் போது, ஆக்சிஜன் ஓட்டமும் தடைப்படும். இதனால், உடல் உறுப்புகள் பழுதடையும் ஆபத்தும் உள்ளது. பலருக்கும் இரும்புச்சத்து குறைபாடு பற்றிய அறிகுறிகளைத் தெரிந்து வைத்திருந்தாலும், அனீமியா என்ற தீவிரமான சத்துக் குறைபாட்டு நிலை, கண்களைப் பாதிக்கும் என்பது பற்றி பலரும் அறிந்திருக்கவில்லை.

இரும்புச் சத்துக் குறைபாடு கண்களை எப்படிப் பாதிக்கும்?

உடலில் எங்கெல்லாம் ரத்த ஓட்டமும் ஆக்சிஜன் ஓட்டமும் இருக்கிறதோ இரும்புச்சத்து குறைபாடு அந்த பகுதிகள் அனைத்தையுமே பாதிக்கலாம். இதனால் கண்கள் பாதிக்கப்படுமா என்பது பற்றி இதுவரை பெரிதாகக் கவனிக்கவில்லை. ஆனால் இரும்பு சத்துக்குறைபாடு பார்வை மற்றும் கண்களின் ஆரோக்கியத்தில் தீவிரமான பாதிப்பை ஏற்படுத்தலாம்.

கண்களிலும் ரத்த ஓட்டம் ஆக்சிஜன் ஓட்டம் இருப்பதால், திசுக்களுக்குக் குறைவான ஆக்ஸிஜன் கிடைக்கும் பொழுது கண்கள் வெளிறிப்போய் காணப்படும். இதனால் தான் மருத்துவர்கள் இரும்புச் சத்துக் குறைபாடு இருக்கிறதா என்பதைப் பரிசோதிக்க எளிய முறையாகக் கண்களை முதலில் பரிசோதிக்கிறார். கண்கள் வெளிறிப்போய் அல்லது வெள்ளை நிறத்தில் காணப்படுவது இரும்புச் சத்து குறைபாட்டின் ஒரு அறிகுறியாகும்.

Also Read : ஆயில் ஸ்கின் முகத்தை எப்போதும் டல்லாவே காட்டுதா..? பிரைட்டாக்கும் 3 இயற்கை ஃபேஸ் பேக்குகள் இதோ...

கண்களின் கீழ் இமைகள் வெள்ளை நிறத்தில் இருப்பது

நீங்கள் நன்றாகத் தூங்கினாலும், மிகவும் சோர்வாகவும் கண்களில் எரிச்சலாக உணரும் பொழுது உடனடியாக மருத்துவரை அணுகுவீர்கள். தூக்கமின்மை, அதிக வேலை, ஓய்வின்மை என்பதைத் தவிர்த்து ஊட்டச்சத்துக் குறைபாடு கண்களில் ஒரு அறிகுறியாக வெளிப்படும். மருத்துவர்கள் கண்களின் கீழ் இமைகளைப் பரிசோதிக்கும் பொழுது அது சிவப்பு நிறத்தில் அல்லாமல் வெள்ளை நிறத்தில் காணப்படுவது என்பது இரும்புச் சத்துக் குறைபாடு ஆகும்.

ஆரோக்கியமான இமைகள் லேசான பிங்க் நிறத்தில் காணப்படும். இதற்குக் காரணம் சிவப்பு ரத்த அணுக்களில் ஹீமோகுளோபின் என்ற ஒரு காம்பவுண்ட். இரும்புச் சத்துக் குறைபாடு இருக்கும்போது சிவப்பு ரத்த அணுக்களில் போதிய ஹீமோகுளோபின் இருக்காது.

நீங்கள் ரத்தப் பரிசோதனை செய்யும் பொழுதும் ஹீமோகுளோபின் குறைவாக இருக்கிறது என்பதுதான் இரும்புச் சத்தின் குறி காட்டியாகும். எனவே சரியான அளவுக்கு இரும்புச் சத்து இல்லாத பொழுது அந்த சிவப்பு நிறம் குறைந்து, வெளிறிய மஞ்சள் அல்லது லேசான வெள்ளை நிறத்தில் கீழ் இமை காணப்படும்.

இரும்புச் சத்து குறைவாக உள்ளது என்பதற்கான அறிகுறிகள்

நேஷனல் ஹெல்த் கூற்றுப்படி மிகவும் மிதமான இரும்புச் சத்துக் குறைபாடு இருப்பவர்களுக்கு எந்தவிதமான அறிகுறியும் தோன்றாமலும் போகலாம். ஆனால் இரும்புச் சத்துக் குறைபாடு தீவிரமாகும் போது பின்வரும் அறிகுறிகள் காணப்படும்.

* மூச்சு விடுவதில் சிரமம்

* முடி பாதிப்பு, நகம் உடைதல்

* தீவிரமான சோர்வு

* ஆற்றல் இல்லாதது போல உணர்வு

* கவனமின்மை/கவனக் குறைவு/கவனச்சிதறல்

* நாக்கு சிவந்து போவது

* குளிர்ச்சி ஒவ்வாமை

* கைகள் மற்றும் கால்கள் சில்லிட்டு போவது

* நெஞ்சு வலி மற்றும் படபடப்பு

Also Read : குழந்தைகள் உங்கள் மேல் அதீதகோபம் காட்டுகிறார்களா? ஏன் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

ரத்தப் பரிசோதனை செய்வதன் மூலம், இரும்புச்சத்துக் குறைபாடு இருப்பதை எளிதாகக் கண்டறிய முடியும்.

இரும்புச் சத்துக் குறைபாட்டை உணவின் மூலம் எளிதாகச் சரி செய்ய முடியும். சிவப்பு இறைச்சி, பீன்ஸ், கீரைகள், பீட்ரூட், உலர் பழங்கள், இரும்புச் சத்து செறிவூட்டப்பட்ட உணவுகள் சாப்பிடுவதன் மூலம் இரும்புச் சத்தைப் பெறலாம். உடல் இரும்புச் சத்தை முழுதாக கிரகிக்க, வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளையும் சாப்பிட வேண்டும்.

First published:

Tags: Eyes, Health, Iron Deficiency