பெண்கள் தங்களுடைய அந்தரங்க பகுதியில் எந்தவித கிருமித் தொற்றும் ஏற்பட்டு விடாமல் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கின்றனர். அந்தரங்க பகுதியை சுத்தம் செய்வதற்காக ஏராளமான பொருட்கள் சந்தையில் விற்பனைக்கு கிடைக்கின்றன.
குறிப்பாக, அந்தரங்க பகுதியை கழுவுவதற்கான சோப், லிகியூட், ஸ்பிரே போன்றவை அதிக அளவில் விற்பனை ஆகின்றன. இவற்றை பயன்படுத்துவதன் மூலமாக பெண்ணுறுப்பின் நாற்றத்தை குறைக்க முடியும் என்றும், வறண்ட தன்மையை மாற்ற முடியும் என்று விளம்பரம் செய்யப்படுகிறது. மேலும், பெண்ணுறுப்பு மற்றும் அதன் உட்புற பகுதிகளை சுத்தம் செய்ய உதவியாக இருக்கும் என்றும் கூறப்படுவதால் மிக அதிகமான பெண்கள் இவற்றை உபயோகம் செய்கின்றனர்.
ஆனால், இந்தப் பொருட்கள் எல்லாம் எந்த அளவுக்கு பாதுகாப்பானவை? இவற்றை பயன்படுத்துவதன் மூலமாக தொற்றுகள் ஏற்படக் கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
சிறுநீர் பாதை தொற்று ஏற்படலாம்
கனடா நாட்டின் ஓண்டாரியோ பகுதியில் கடந்த 2018ஆம் ஆண்டில், சுகாதார பொருட்களை பயன்படுத்தும் பெண்கள் மற்றும் பயன்படுத்தாத பெண்களை தனித்தனியாக கொண்டு ஆய்வு நடத்தப்பட்டது. இதில், சுகாதாரப் பொருட்களை பயனடுத்தும் பெண்களுக்கு பாக்டீரியா தொற்று ஏற்படும் வாய்ப்பு மூன்றரை மடங்கு அதிகமாகவும், சிறுநீர் பாதை தொற்று ஏற்படும் அபாயம் இரண்டரை மடங்கு அதிகமாகவும் இருப்பது தெரியவந்தது.
இந்த உணவுகளை சாப்பிட்டால் பொடுகுத் தொல்லையே இருக்காது : தினசரி உணவில் சேத்துக்கோங்க...
பெண்ணுறுப்பை சுத்தம் செய்ய வேண்டுமா?
பெண்ணுறுப்பில் நன்மை செய்யும் பாக்டீரியா ஏராளமாக உள்ளன. இவை பெண்ணுறுப்பில் உள்ள பிஹெச் தன்மையை சீராக வைத்திருக்க உதவும். இது லேசாக அமிலத்தன்மை கொண்டது. இந்த அமிலத்தன்மை கொண்ட பிஹெச் தான், கெட்ட பாக்டீரியாக்களில் இருந்து பாதுகாப்பு தருகிறது.
இந்நிலையில், செயற்கையான பொருட்களை பயன்படுத்துவதால், சுயமாக சுத்தம் செய்வதற்கான தன்மையை பெண்ணுறுப்பு இழக்க தொடங்கும். ஆகவே, இயற்கையின் போக்கில் விட்டுவிடுங்கள். பெண்ணுறுப்பின் உட்புற பகுதியை நீங்கள் சுத்தம் செய்ய தேவையில்லை என்றாலும் கூட, கிளைடோரிசிஸ் மற்றும் வெளிப்புற இதழ்கள் அடங்கிய வெளிப்பகுதியை நீங்கள் சுத்தம் செய்ய வேண்டும்.
செயற்கை பொருட்களால் கெடும் ஆரோக்கியம்
நீங்கள் சோப், லிகியூட், ஸ்பிரே போன்றவற்றை பயன்படுத்தி பெண்ணுறுப்பை சுத்தம் செய்வதால், அதில் உள்ள பிஹெச் தன்மை மாறுபடும். இதனால், கெட்ட பாக்டீரியாக்களை தடுக்கும் பாதுகாப்பு ஆதிக்கப்பட்கிறது. மேலும், நல்ல பாக்டீரியாக்களை அழித்து பெண்ணுறுப்பில் கெட்ட பாக்டீரியாக்கள் வளரத் தொடங்கும்.
உங்க முகம் டல்லா இருக்குனு ஃபீல் பண்றீங்களா..? ஒரே இரவில் பொலிவு தரும் இந்த டிப்ஸை டிரை பண்ணுங்க..
இதனால் எரிச்சல், சிறுநீர் பாதை தொற்று, அரிப்பு போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம். ஒருவேளை, குறிப்பிட்ட சில சுகாதார பொருட்களை பயன்படுத்துபவர் என்றால், அதை தினசரி உபயோகிக்க கூடாது.
பெண்ணுறுப்பு சுகாதாரத்தை கடைப்பிடிப்பது எப்படி?
காட்டன் துணியால் ஆன உள்ளாடைகளை அணியவும். சிந்தடிக் மெட்டீரியல்களை தவிர்க்கவும்.
தினசரி உள்ளாடைகளை மாற்ற வேண்டும். உள்ளாடைகளை துவைத்த பிறகு வெயிலில் காய வைக்க வேண்டும். இதனால், அதில் உள்ள பூஞ்சை தொற்றுகள் கொல்லப்படும்.
பெண்ணுறுப்பை எப்படி சுத்தம் செய்யலாம்?
வெது வெதுப்பான தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யலாம். எரிச்சல் தராத சோப் கொண்டு கழுவலாம். ஒவ்வொரு முறையும் சிறுநீர் கழித்த பிறகு, தண்ணீர் வைத்து பெண்ணுறுப்பை சுத்தம் செய்யவும்.
பெண்ணுறுப்பில் அசௌகரியம், எரிச்சல், மிக மோசமான துர்நாற்றம், வழக்கத்திற்கு மாறான கசிவு போன்றவை இருந்தால் மகப்பேறு மருத்துவரை அணுகி ஆலோசனை பெறவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Intimate Hygiene, Vaginal Hygiene