பெண்கள் பிறப்புறுப்பை சுத்தமாக வைத்துக்கொள்ள பின்பற்ற வேண்டியவை.. முழுமையான தகவல்..!
Healthy Vagina Care
பிறப்புறுப்பை சுத்தமாக பராமரிக்கவும், இனப்பெருக்க அமைப்பை நல்ல நிலையில் வைத்திருக்கவும், பிறப்புறுப்பு சுகாதாரத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதும் மிக அவசியம்.
இந்தியாவில், பிறப்புறுப்பு சுகாதாரத்தைப் பற்றி விவாதிப்பது என்பது இன்னமும் மறைத்து பேச கூடிய ஒன்றாக இருந்து வருகிறது. இதன் காரணமாக பல பெண்களுக்கு தனக்கான பிறப்புறுப்பு சுகாதாரத்தை பற்றி கூட தெரிந்திருக்காமல் உள்ளனர். மேலும், இதை பற்றி விவாதிப்பதையோ அல்லது ஆலோசனை வழங்குவதையோ பல பெண்கள் தவிர்க்கின்றனர்.
பிறப்புறுப்பை சுத்தமாக பராமரிக்கவும், இனப்பெருக்க அமைப்பை நல்ல நிலையில் வைத்திருக்கவும், பிறப்புறுப்பு சுகாதாரத்தின் முக்கியத்துவத்தைப் புரிந்துகொள்வதும் மிக அவசியம். ஒவ்வொரு பெண்ணும், வயதைப் பொருட்படுத்தாமல், தெரிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படை பிறப்புறுப்பு சுகாதார வழிகாட்டுதல்களை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தினமும் சுத்தம் செய்யுங்கள் : தனது உடலை சுத்தமாக வைத்திருப்பது என்பது சுகாதார விஷயத்தில் கடைப்பிடிக்க வேண்டிய முக்கியமான ஒன்றாகும். குறிப்பாக பருவமடையும் போது, மாதவிடாய், தினசரி பிறப்புறுப்பு வெளியேற்றம் மற்றும் வியர்வை சுரப்பிகளில் இருந்து வியர்வை அதிகரிப்பு போன்ற மாற்றங்கள் ஏற்படும் போது தனிப்பட்ட சுகாதாரம் பற்றி கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.
மூத்த ஆலோசகர் மகப்பேறு மருத்துவர் டாக்டர் தேஜி தவானே கூறுகையில், "பெண்ணின் பிறப்புறுப்பின் உள் அடுக்கு அதன் சுய-சுத்தப்படுத்தும் தன்மையை கொண்டிருப்பதால், பிறப்புறுப்பின் வெளிப்புறப் பகுதியை அல்லது சினைப்பையை மட்டுமே கழுவ வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். கழுவுதல், துடைத்தல், சுத்தம் செய்தல் அல்லது டோச்சிங் செய்தலும் இதில் அடங்கும். இந்த பகுதியைக் கழுவும் போது, உங்கள் பிறப்புறுப்புக்குள் நேரடியாக நீரை செலுத்துவதற்கு பதிலாக, உங்கள் அந்தரங்கப் பகுதியின் உச்சியில் இருந்து உங்கள் பிறப்புறுப்பின் மேல் தண்ணீர் ஓடும்படியாக கழுவ வேண்டும்.
pH அளவு : பிறப்புறுப்பின் pH அளவை பராமரிக்க நம் உடலுக்கு அதன் சொந்த பாதுகாப்பு தன்மை உள்ளது. எனவே இதை சீராக வைக்க எந்த வெளிப்புற காரணிகளும் தேவையில்லை. நமது இயல்பான பிறப்புறுப்பு வெளியேற்றத்தில் லாக்டோபாகிலஸ் எனப்படும் நல்ல பாக்டீரியாக்கள் உள்ளன, இது நோய் எதிர்ப்பு சக்தியை அளிக்கிறது மற்றும் pH அளவை சரியாக பராமரிக்கிறது. எனவே அந்த பகுதியை வெளிப்புற கெமிக்கல்களை கொண்டு சுத்தம் செய்ய வேண்டியதில்லை.
சுத்தமான டவல் பயன்படுத்தவும் : ஒரு நல்ல குளியலுக்குப் பிறகு, மென்மையான, உலர்ந்த சுத்தமான துண்டைப் பிறப்புறுப்பு பகுதியில் பயன்படுத்தலாம். மேலும், இதை இரண்டு அல்லது மூன்று நாட்களுக்குப் பிறகு மாற்ற வேண்டும். இந்த பகுதியை சிறிது உலர்வாக இருக்கும்படி பார்த்து கொள்ளுங்கள். நீங்கள் பயன்படுத்திய துண்டுகளை மாற்றவுடன் பகிர்வதை தவிர்த்து விடுங்கள்.
எப்போதும் முன்னும் பின்னும் துடைக்கவும் : இந்த பழக்கத்தின் முக்கியத்துவத்தை ஒருவர் உணராமல் இருக்கலாம், ஆனால் இதை உங்கள் வழக்கத்தில் ஒரு பகுதியாக செயல்படுத்துவது அவசியம். நீங்கள் மலம் கழிக்கும் போது, சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகளுடன் சேர்ந்து பிறப்புறுப்புக்குள் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள் நுழைவதைத் தவிர்க்க, முன்னும் பின்னும் நன்றாக கழுவ வேண்டும்.
பருத்தி உள்ளாடைகளை அணியுங்கள் : பிறப்புறுப்பின் தன்மையை சீராக வைக்க பருத்தி உள்ளாடைகளை அணிய வேண்டும், ஏனெனில் பருத்தியானது மிகவும் சுவாசிக்கக்கூடிய துணியாகும், இது வியர்வை அல்லது பிறப்புறுப்பின் வெளியேற்றத்திலிருந்து அதிகப்படியான ஈரப்பதத்தை ஆவியாக்க அனுமதிக்கிறது. மேலும், இது இனப்பெருக்கம் செய்யும் பாக்டீரியாவால் விரும்பத்தகாத வாசனையை உருவாக்குகிறது.
நீரேற்றமாக இருங்கள் : பிறப்புறுப்பு மற்றும் உடலை பாதிக்கக்கூடிய நச்சுகளை வெளியேற்றுவதற்கு நிறைய தண்ணீர் குடிக்க வேண்டியது அவசியம். உங்கள் பிறப்புறுப்பை ஆரோக்கியமாக வைத்திருக்க இந்த சுகாதாரப் பழக்கங்களைச் சேர்ப்பது முக்கியம். ஒருவேளை இவற்றை தவிர்த்தால், எதிர்காலத்தில் உங்களுக்கு சிக்கல்கள் ஏற்படலாம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
First published:
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.