International yoga day மனதிற்கும் உடலுக்கும் சிறந்த மருத்துவம் யோகா: ஆய்வில் தகவல்

முதுகுவலிப் பிரச்னை கொண்டவர்கள் தொடர்ந்து ஆறு மாதங்கள் யோகா பயிற்சி மேற்கொண்டால் முதுகு வலி என்பதே இருக்காது.

news18
Updated: June 20, 2019, 8:29 PM IST
International yoga day மனதிற்கும் உடலுக்கும் சிறந்த மருத்துவம் யோகா: ஆய்வில் தகவல்
மனதிற்கும் உடலுக்கும் சிறந்த மருத்துவம் யோகா
news18
Updated: June 20, 2019, 8:29 PM IST
யோகா பயிற்சி செய்வது மருந்துகளைக் காட்டிலும் சிறந்தது என்கிறது சமீபத்தில் வெளியாகியுள்ள ஆய்வு.

ஒருங்கிணைந்த மருத்துவத்திற்கான தேசிய மையம் (National Center for Complementary and Integrative Medicine (NCCIM)) வெளியிட்டுள்ள ஆய்வு படி ஒருவருக்கு நாள்பட்ட முதுகு வலி, மனஅழுத்தம், இயலாமை , மனத் தடுமாற்றம் போன்ற பிரச்னைகள் இருப்போருக்கு யோகா சிறந்த பயிற்சி என்று ஆய்வு மூலம் நிரூபித்துள்ளது.

யோகாவைப் பாரம்பரியம் எனக் குறிப்பிடும் அந்த ஆய்வானது, அதில் பின்பற்றப்படும் ஆசனங்கள், பயிற்றுவிக்கப்படும் ஸ்ட்ரெட்சுகள், இலகுவான உடல் அமைப்பு போன்றவை உடல் அசதி, உடல் வலி, முதுகு வலி போன்றவை நீங்குவதாகக் கூறுகிறது. இதை முதுகுவலிப் பிரச்னை உள்ளவர்கள் தொடர்ந்து ஆறு மாதங்கள் செய்தால் முதுகு வலி என்பதே இருக்காது என்று கூறியுள்ளனர்.




உடல் மட்டுமன்றி மன ரீதியான பதட்டம், மனஅழுத்தம், தனிமை, மனச்சிதைவு, ஒருங்கிணைந்த சிந்தனையின்மை போன்ற பிரச்னைகளுக்கும் யோகா சிறந்த தீர்வு என்கிறது. ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்களுக்கும் யோகாவின் மூச்சுப் பயிற்சி சரி செய்கிறது. மேலும், இரத்தக் கொதிப்பு, இதயப் பிரச்னைகளுக்கும் யோகா நல்லது எனப் பரிந்துரைக்கிறது.

இதனாலேயே பல நாடுகளில் உள்ள மருத்துவமனைகளில் யோகாவை தெரப்பியாக பயிற்சியளிக்கிறார்கள். இதை ஆங்கிலத்தில் தெரப்பிட்டிக் யோகா என்றும் கூறுகின்றனர். இதற்காக யோகாவில் பயிற்சி பெற்ற சிறந்த பயிற்சியாளர்களையும் அமர்த்தியுள்ளனர்.

Loading...




லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.



First published: June 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...