Home /News /lifestyle /

International Yoga Day 2022 : தினமும் சூரிய நமஸ்காரம் செய்தால் இவ்வளவு நன்மைகளா..? 

International Yoga Day 2022 : தினமும் சூரிய நமஸ்காரம் செய்தால் இவ்வளவு நன்மைகளா..? 

சூரிய நமஸ்காரம்

சூரிய நமஸ்காரம்

சூரியநமஸ்காரம் செய்ய வயது வரம்பு கிடையாது. 8 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் கூட இதைச் செய்யலாம்.

யோகா என்பது உடல் தகுதி உடையவர்கள், இளைஞர்கள், ஆரோக்கியமானவர்கள் அல்லது வயது முதிர்ந்தவர்களுக்கு மட்டும் அல்ல. உடல் ஆரோக்கியத்தையும், மன அமைதியையும் பெற நினைக்கும் பலரும் யோகாவை தினந்தோறும் செய்யலாம். யோகா மனித உடலுடன் தடையின்றி ஒத்திசைகிறது மற்றும் ஒருவரின் வசதிக்கேற்ப தீவிரத்தை மாற்றியமைக்க முடியும்.

நமது உடலின் ஒட்டுமொத்த இயக்கத்திற்கும், மனதின் ஆரோக்கியத்திற்கும் யோகா எவ்வளவு முக்கியமானது என்பது அனைவரும் அறிந்த விஷயம். யோகாவில் மிகவும் பொதுவான நடைமுறைகளில் ஒன்றாக சூரிய நமஸ்காரம் உள்ளது. இது பண்டைய காலத்தின் வேத கலாச்சாரத்தையும், ஆரோக்கியத்தையும் அடித்தளமாக கொண்டுள்ளது. ஆரோக்கியமான வாழ விரும்புவோர் ஒவ்வொரு நாளும் குறைந்தது 10 முதல் 12 சுழற்சிகள் சூரிய நமஸ்காரம் செய்வது நல்லது என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.

சூரியநமஸ்காரம் செய்ய வயது வரம்பு கிடையாது. 8 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் கூட இதைச் செய்யலாம்.

யோகாவில் மிகவும் பயனுள்ள மற்றும் பலராலும் செய்யக்கூடிய ஆசானங்களில் ஒன்றாக சூரிய நமஸ்காரம் உள்ளது. எந்த இயந்திர உபகரணங்களும் தேவையில்லாத மனிதர்களுக்கான மிகச் சில உடற்பயிற்சிகளில் இதுவும் ஒன்றாகும். சூரிய நமஸ்காரம் வாயிலாக நமது உடலிலுள்ள எல்லா முட்டுகளுக்கும் அசைவு ஏற்படுகிறது. சருமத்தில் வைட்டமின் டி உற்பத்தி செய்யும் திறன் காலை சூரிய ஒளிகதிர்களும் உண்டு. கால்சியம் உற்பத்தியை கட்டுபடுத்தும் திறனும் உண்டு. மேலும் தொடர்ச்சியாக சூரிய நமஸ்காரம் செய்வது முதுமையை கட்டுப்படுத்த உதவுகிறது.



பூமியின் உயிர் ஆதாரம் சூரியன். நாம் எதை உட்கொள்கிறோம், எப்படி சுவாசிக்கிறோம், எப்படி உயிர் வாழ்கிறது என அனைத்தும் சூரியனுடன் இணைக்கப்பட்டுள்ளது. சூரிய வணக்கம் என்று பிரபலமாக அறியப்படும் இந்த ஆசனம் சூரியனின் சுழற்சிக்கு ஏற்ப 12 ஆசனங்களால் ஆனது.

சர்வதேச யோகா தினம் 2022 : குடும்பத்தோடு சேர்ந்து இந்த எளிய யோகாசனங்களை செய்து பாருங்கள்...

சூரிய நமஸ்காரம் செய்வதால் கிடைக்கும் சில பலன்கள்:

1 எடையை குறைக்க உதவுகிறது.

2 உடல் மற்றும் மனதின் சமநிலையை பராமரிக்கிறது

3 இரத்த ஓட்ட செயல்முறையை மேம்படுத்துகிறது

4 செரிமானத்தை மேம்படுத்துகிறது

5. இதயத்தை பலப்படுத்துகிறது



6 சுவாச அமைப்பு, முதுகெலும்பு நரம்புகள் போன்ற முக்கிய உள் உறுப்புகளைத் தூண்டுகிறது.

7 முதுகுத்தண்டு, கழுத்து, தோள்கள், முழங்கால்கள், மணிக்கட்டுகள் மற்றும் மற்ற மூட்டுகள் அனைத்தையும் டோனிங் செய்வதன் மூலம் நெகிழ்வுத்தன்மையை வழங்குகிறது.

8. உடலுக்கும் மனதுக்கும் உள்ள தொடர்பை ஆழமாக்குகிறது

9 மனநிலையை உயர்த்தவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவுகிறது.

International Day Of Yoga 2022: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க, மன அழுத்தத்தை போக்க உதவும் யோகாசனங்கள்! 

உடலையும் மனதையும் பூரண ஆரோக்கியத்துடன் வைத்திருப்பதில் அதன் பங்கை எடுத்துரைக்கும் வகையில் யோகா தினம் உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. வெவ்வேறு ஆசனங்கள் மற்றும் பிராணயாமா பயிற்சிகள் ஒருவரின் பயம் மற்றும் கவலையைப் போக்குவதன் மூலம் மனதை அமைதிப்படுத்துகிறது. 2022 ஆம் ஆண்டு சர்வதேச யோகா தினத்தின் தீம் 'மனிதகுலத்திற்கான யோகா'. சிறப்பாக, மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு திட்டங்களை அமைச்சகம் இந்த ஆண்டு வடிவமைத்துள்ளது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: International Yoga Day, Yoga day

அடுத்த செய்தி