• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • International Yoga Day : கொரோனா நெருக்கடிகயில் யோகா பயிற்சியின் முக்கியத்துவத்தை தெரிந்துகொள்ளுங்கள்!

International Yoga Day : கொரோனா நெருக்கடிகயில் யோகா பயிற்சியின் முக்கியத்துவத்தை தெரிந்துகொள்ளுங்கள்!

யோகா தினம் 2021

யோகா தினம் 2021

யோகா என்பது சமஸ்கிருதத்திலிருந்து உருவான வார்த்தையாகும். இதன் பொருள் சேருதல் அல்லது ஒன்றுபடுவதாகும். யோகா என்பது உடல் மற்றும் மனதின் ஒன்றிணைவு என்று அர்த்தம்.

  • Share this:
கடந்த சில ஆண்டுகளாக யோகாவின் அவசியத்தை மக்களுக்கு எடுத்துக்காட்டும் வகையில், சர்வதேச யோகா தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம் தேதி அன்று உலகளவில் அனுசரிக்கப்படுகிறது. இந்தியாவில் பிரதமர் நரேந்திர மோடியால் இந்த தினம் தொடங்கப்பட்டது. ஜூன் 21ம் தேதி அன்று யோகா தினம் நடத்த ஒரு சிறப்பு காரணம் இருக்கிறது. ஏனெனில் இந்த தேதி வடக்கு அரைக்கோளத்தில் மிக நீண்ட நாள் என்பதால் இது ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவம் வாய்ந்த நாளாக இருக்கிறது.

இந்த தினத்தை கொண்டாடுவதற்காக 2014ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி அன்று, இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி அசோக் முகர்ஜி ஐக்கிய பொதுச் சபையில் வரைவுத் தீர்மானத்தை அறிமுகப்படுத்தினார். அதற்கு 177 உறுப்பு நாடுகளிடமிருந்து பெரும் ஆதரவு கிடைத்தது. அதில் யோகா தினத்தை ஒரு சிறப்பு நாளாக கொண்டாட ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து 2014ம் ஆண்டு டிசம்பர் 11ம் தேதி அன்று, ஐக்கிய நாடுகள் சபை 69/131 தீர்மானத்தின் மூலம் ஜூன் 21ம் தேதியை சர்வதேச யோகா தினமாக அறிவித்தது.



சர்வதேச யோகா தினத்தின் முக்கியத்துவம்:

யோகா என்பது சமஸ்கிருதத்திலிருந்து உருவான வார்த்தையாகும். இதன் பொருள் சேருதல் அல்லது ஒன்றுபடுவதாகும். யோகா என்பது உடல் மற்றும் மனதின் ஒன்றிணைவு என்று அர்த்தம். இது ஒருவரின் அன்றாட வாழ்க்கையில் ஒரு சீரான வாழ்க்கை முறையை பராமரிக்கிறது. முதன்முதலில் சர்வதேச யோகா தினம் 2015ம் ஆண்டு ஜூன் 21ம் தேதி அன்று உலகளவில் அனுசரிக்கப்பட்டது. அப்போது இந்தியாவின் ஆயுஷ் அமைச்சகம் ஒரு நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தியிருந்தது. இதில் பிரதமர் மோடியுடன் 84 நாடுகளின் பிரமுகர்கள் பங்கேற்றிருந்தனர். அந்த நிகழ்வின் போது டெல்லியின் ராஜ்காட்டில் மொத்தம் 35,985 பேர் 21 யோகா ஆசனங்களை நிகழ்த்தி காண்பித்தனர். உலக பிரமுகர்களின் இந்த சந்திப்பு மிகப்பெரிய யோகா வகுப்பாக இருந்தது.



2021ம் ஆண்டின் சர்வதேச யோகா தினத்திற்கான கருப்பொருள் என்ன?

2020 ஆம் ஆண்டிற்கான கருப்பொருளானது 'வீட்டில் யோகா மற்றும் குடும்பத்துடன் யோகா' என்பதாகும். கடந்த ஆண்டு உலகம் முழுவதுமே தொற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், யோகா ஆசனங்கள் மக்கள் மனதை நிதானமாக்கவும், ஆரோக்கியமாகவும் இருக்க வைக்க நம்பிக்கையின் கதிர்களைக் கொடுத்தது. அந்தவகையில் இந்த ஆண்டிற்கான சர்வதேச யோகா தினத்தின் கருப்பொருள் 'நல்வாழ்வுக்கான யோகா' என்பதாகும். தொற்றுநோய்களின் போது யோகாவில் மனோ-சமூக கவனிப்புக்கு முக்கிய பங்கு உண்டு. தனிமைப்படுத்தப்பட்ட COVID-19 நோயாளிகள் மனச்சோர்வு மற்றும் பிற உளவியல் சிக்கல்களைக் அனுபவிக்கிறார்கள்.

தியானம் செய்வதால் கிடைக்கும் அற்புத நன்மைகளைப் பற்றித் தெரியுமா..?

எனவே, நல்வாழ்வுக்கான யோகா என்பது ஒரு பொருத்தமான கருப்பொருளாகும். இது ஒவ்வொரு நபரின் முழுமையான ஆரோக்கியத்திற்காக உடல் செயல்பாடுகளின் பங்களிப்பை மையமாகக் கொண்டுள்ளது. மேலும், நல்ல நோய் எதிர்ப்பு சக்தியுடன் உள்ள ஒருவரது உடல் வைரஸுடன் சண்டையிட்டு நோயிலிருந்து பாதுகாக்கப்படலாம். நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வெவ்வேறு யோகா ஆசனங்கள் உதவுகின்றன. அவற்றை பின்பற்றுவதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது மிக அவசியம்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: