International Nurses Day 2021 : செவிலியர்களின் சேவை மகத்தானது...ஏன் தெரியுமா..?

உலக செவிலியர் தினம்

கொரோனா நோயாளிகளைக் கண்டதும் அனைவரும் பயந்து ஓடும் நிலையில், நோயாளிகள் படும் வேதனையை உணர்ந்ததால் தான், அவர்களின் வேதனையைப் போக்க நேரம் காலம் பார்க்காமல் உழைக்கின்றோம் என்கிறார்கள் நம் செவிலியர்கள்.

  • Share this:
    உலகமே கொரோனாவின் பிடியில் உள்ள சூழலில், உலக செவிலியர் தினம் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. உலகையே முடக்கிப் போட்ட கொரோனாவால், இவர்களது சேவையை முடக்க முடியவில்லை. பெற்ற தாய், தந்தை, உற்றார், உறவினர் என அனைவரையும் நம்மிடம் இருந்து பிரித்த கொரோனாவால், பிரிக்க முடியாத ஒரே உறவு செவிலியர் தான். அப்படி தாயைப் போன்று நோயாளிகளை கவனித்துவரும் செவிலியர்களால் தான் உலகமே தற்போது புத்துயிர் பெற்றுவருகின்றது.

    கொரோனா நோயாளிகளைக் கண்டதும் அனைவரும் பயந்து ஓடும் நிலையில், நோயாளிகள் படும் வேதனையை உணர்ந்ததால் தான், அவர்களின் வேதனையைப் போக்க நேரம் காலம் பார்க்காமல் உழைக்கின்றோம் என்கிறார்கள் நம் செவிலியர்கள்.

    கொரோனா தொற்று வார்டில் பணி நேரம் முழுவதும் பாதுகாப்பு உடையுடனேயே இருப்பதால், இயற்கை உபாதைகளுக்கு கூட போகமுடியாமல் சிரமப்பட்டு பணியாற்றுவதாக கூறுகிறார்கள் செவிலியர்கள். வீட்டிற்கு சென்றால் அழும் குழந்தையை தூக்கமுடியாத நிலையில் இருப்பதாகவும், பணியின் காரணமாக தனிப்பட்ட குடும்ப உறவுகளை இழந்து நிர்கதியாக நிற்பதாகவும் கண்ணீருடன் தங்களது வேதனையை பதிவு செய்கின்றனர்.



    முதல் தடுப்பூசி போட்டுக்கொண்ட பின் கொரோனாவால் பாதிக்கப்பட்டால் இரண்டாம் தடுப்பூசி எப்போது போட வேண்டும்..?

    இந்த ஆண்டு உலக செவிலியர் தினம், உலக ஆரோக்கியத்திற்கான சேவை ஆண்டாக கடைபிடிக்கப்படுகின்றது. எத்தனையோ இன்னல்களை சந்தித்தாலும், ஒரு தாய் தன் பிள்ளைகளை காப்பது போல செவிலியர்கள் தங்கள் பணியை தொடர்ந்து வருகின்றனர். செவிலியர்களின் தினமான இன்று அவர்களின் சேவையைப் போற்றுவோம்.

     
    Published by:Sivaranjani E
    First published: