நமது மூக்கு வழியாக காற்றை உள்ளிழுத்து சுவாசிக்கிறோம். ஆனால் நாம் மிக உன்னிப்பாக கவனித்தால் நம்முடைய வலது அல்லது இடது நாசியில் எதாவது ஒன்று மற்றொன்றை விட சுறுசுறுப்பாக அதாவது அதிகமாக சுவாசிக்கலாம்.
ஒரு சில மக்கள் 75% சுவாசத்தை ஒரு நாசியிலிருந்தும் 25% மற்றொன்றிலிருந்தும் செய்வதாக நிபுணர்கள் கூறுகிறார்கள். ஒருவேளை நாமும் ஒரு குறிப்பிட்ட நாசி துவாரம் வழியே அதிகம் சுவாசித்தோம் என்றால் அதை எப்படி கண்டுபிடிப்பது.? மற்றும் காற்றை உள்ளிழுக்கும் மற்றும் வெளியே விடுவதில் இருக்கும் எளிமை ஆகியவை நம் நாசியில் எந்த பக்க துவாரம் அதிகம் சுவாசிக்கிறது என்பதை தீர்மானிக்க உதவும்.
இரட்டையாக இருக்கும் உறுப்புகளில் சமநிலையின்மை ஒரு நல்ல அறிகுறி அல்ல என்றாலும் யோகா சுகாதார நிபுணர் ஒருவர் நாசியின் ஆதிக்கம் மற்றும் அடக்குதலின் அடிப்படையில் நமது ஆளுமைகளை பிரதிபலிக்கும் என்று சில பாயிண்ட்ஸ்களை அளித்துள்ளார். மேலும் இரு நாசி துவாரங்களும் ஒரே மாதிரி சுவாசிக்க யோகாவை பயிற்சி செய்ய பரிந்துரைத்துள்ளார். satvic.yoga என்ற இன்ஸ்டா யூஸர் பதிவிட்டுள்ள போஸ்ட்டில், மூக்கின் சுவாசிக்கும் தன்மை மற்றும் சுறுசுறுப்பானது ஒரு தனிநபரிடம் எந்தெந்த குணாதிசயங்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன என்பதை தீர்மானிக்க உதவும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இடது நாசியைப் பற்றி என்ன சொல்கிறது?
இந்த இன்ஸ்டா போஸ்ட் இடது நாசியை பெண்ணின் இயல்பு, படைப்பாற்றல், உள்ளுணர்வு, அமைதியான, உள்முக சிந்தனை, வளர்ப்பு, ஏற்றுக்கொள்ளும், உணர்திறன், கலை மற்றும் சிந்தனையுடன் இணைக்கிறது. தவிர சமநிலையற்ற இடது நாசியானது செயலற்ற தன்மை, சுய சந்தேகம் மற்றும் மோசமான சுய கட்டுப்பாடு ஆகியவற்றிற்கு வழிவகுக்கும் என்றும் கூறப்பட்டு உள்ளது.
வலது நாசியைப் பற்றி என்ன சொல்கிறது?
இந்த போஸ்ட்டில் வலது நாசியானது ஆண்பால் இயல்பு, செயலாற்றல், அறிவாற்றல், உணர்ச்சி, தர்க்கரீதியான சிந்தனை, உறுதி தன்மை, மறைமுகாமில்லா தன்மை, அதிக ஆற்றல் மற்றும் நல்ல செரிமானம் ஆகியவற்றுடன் தொடர்புடையதாக குறிப்பிடப்படுகிறது. எனவே வலது நாசியில் காணப்படும் ஏற்றத்தாழ்வு அதிவேகத்தன்மை, மன அழுத்தம் மற்றும் முரட்டுத்தனத்திற்கு வழிவகுக்கும் என்று எச்சரிக்கிறது.
Also Read : நாள்பட்ட முதுகுவலியிலிருந்து நிவாரணம் பெற உதவும் யோகாசனங்கள்...
அப்படி என்றால் "சமச்சீரற்ற" என்றால் உண்மையில் இங்கே என்ன அர்த்தம்..? சமநிலையற்ற இடது நாசி என்றால் இந்த நாசியிலிருந்துக்கு சுவாசம் தடுக்கப்படுவது அல்லது மிக குறைவாக சுவாசிப்பது என்று அர்த்தமாகிறது. இருபக்க நாசியில் ஏதேனும் ஒன்றில் அடைப்பு ஏற்பட்டால் கூட அது ஒரு தனிநபரின் மன அமைதியைப் பாதிக்கிறது. ஒரு நபரின் சுவாசம் தொந்தரவு செய்யப்படும் போது வழக்கமான செயல்பாடுகளை மேற்கொள்வது அவருக்கு கடினமாக இருக்கும். எனவே சுவாச பிரச்சனைகளுக்கு விரைவில் சிகிச்சையளிப்பது மிகவும் அவசியமாகிறது.அனுலோம் விலோம் என்றும் அழைக்கப்படும் நாடி ஷோதன் பிராணயாமாவை தினமும் 10 நிமிடங்கள் பயிற்சி செய்து மந்திரத்தைப் பாருங்கள்.
Also Read : யோகா பயிற்சியில் ஆர்வம் உள்ளவர்கள் இந்தியாவில் உள்ள இந்த இடங்களுக்கு கட்டாயம் சென்று வாருங்கள்...
எனவே நிபுணர்களின் கூற்றுப்படி நிறைவான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கையை நாம் வாழ, வலது மற்றும் இடது ஆகிய 2 நாசி துவாரங்களும் சமநிலையில் இருக்க வேண்டும். இது நமது உயிர் சக்தியை தூண்டி சுறுசுறுப்பாக மற்றும் விவேகமாக இயங்க அனுமதிக்கிறது. உங்கள் நாசியின் 2 பக்கத்தையும் சமச்சீராக இயங்க வைக்க அனுலோம் விலோம் (Anulom Vilom) என்று குறிப்பிடப்படும் நாடி ஷோதன் பிராணயாமாவை (Nadi Shodhan Pranayama) தினமும் 10 நிமிடங்கள் பயிற்சி செய்ய இந்த இன்ஸ்டா போஸ்ட்டில் கூறப்பட்டு உள்ளது. இதை செய்வதன் மூலம் நிகழும் மேஜிக்கை பாருங்கள் என்றும் அந்த போஸ்ட் பரிந்துரைக்கிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.