• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • சர்வதேச சைகை மொழிகள் தினம் 2021 : இந்நாளின் வரலாறு மற்றும் முக்கியத்துவம்!

சர்வதேச சைகை மொழிகள் தினம் 2021 : இந்நாளின் வரலாறு மற்றும் முக்கியத்துவம்!

சைகை மொழி

சைகை மொழி

உலக காது கேளாதோர் கூட்டமைப்பின் கூற்றுப்படி உலகளவில் 70 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் காது கேளாதவர்கள் மற்றும் அவர்களில் 80%க்கும் அதிகமானோர் வளரும் நாடுகளில் தங்கியுள்ளனர்.

  • Share this:
    மனிதன் தன் தேவைகளை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த பயன்படுத்திய முதல் மொழி சைகை மொழி. சைகை மொழி என்பது பலவித கை வடிவங்கள், கை அசைவுகள் மற்றும் முக பாவனைகள் மூலம் பேசப்படுகிறது. உலகில் பல்வேறு மொழிகள் உள்ளன. இதை போன்றே, சைகை மொழிகளிலும் இந்திய சைகை மொழி, அமெரிக்க சைகை மொழி, பிரிட்டிஷ் சைகை மொழி என பல உள்ளன.

    இந்திய சைகை மொழியை கொண்டு, இந்தியாவில் பல மாநிலங்களில் உள்ள காது கேளாத மற்றும் பேசும் திறனற்ற மக்களும், எளிமையாக தங்களது தேவைகளை வெளிப்படுத்த முடிவதாக, ஆய்வின் மூலம் கண்டறிந்துள்ளனசர்வதேச சைகை மொழிகளின் தினமானது, உலகெங்கிலும் ஒவ்வொரு ஆண்டும், செப்., 23 அன்று, சர்வதேச காது கேளாதோர் வாரத்துடன் இணைந்து கொண்டாடப்படுகிறது. சைகை மொழியின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.

    வரலாறு :

    சைகை மொழி அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்டால், காது கேளாதோர் மற்றும் பேசும் திறனற்றோரின் வாழ்வியல் முன்னேற்றத்திற்கு துணை புரியும் என்பது இந்நாளில் வலியுறுத்தப்படுகிறது. 1951ம் ஆண்டில், உலக காது கேளாதோர் கூட்டமைப்பு நிறுவப்பட்ட நிலையில் முதன்முதலில் 2018ல் சர்வதேச சைகை மொழிகள் தினம் அதிகாரப்பூர்வமாக கொண்டாடப்பட்டது. 2021ம் ஆண்டிற்கான சர்வதேச சைகை மொழி தினத்தின் கருப்பொருள் "நாங்கள் மனித உரிமைகளுக்காக கையெழுத்திடுகிறோம்" என்பதாகும்.



    உலக காது கேளாதோர் கூட்டமைப்பின் கூற்றுப்படி உலகளவில் 70 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் காது கேளாதவர்கள் மற்றும் அவர்களில் 80%க்கும் அதிகமானோர் வளரும் நாடுகளில் தங்கியுள்ளனர். இவர்கள் 300க்கும் மேற்பட்ட வெவ்வேறு சைகை மொழிகளைப் பயன்படுத்துகின்றனர். சைகை மொழிகள் மக்கள் பேசும் மொழிகளிலிருந்து கட்டமைப்பு ரீதியாக வேறுபடுகின்றன. எனினும் உலகளாவிய சந்திப்புகள் மற்றும் நிகழ்வுகளின் போது மக்கள் பயன்படுத்தும் ஒரு சர்வதேச சைகை மொழியும் உள்ளது. இந்த சைகை மொழி உலகெங்கிலும் உள்ள சிறப்பு திறன்களைக் கொண்ட மக்களை ஒன்றாக இணைக்க உதவுவதால் இது மிகவும் முக்கியமானது.

    உங்கள் குழந்தை உயரமாக வளர வேண்டுமா..? 5 எளிமையான உடற்பயிற்சிகளை செய்ய வையுங்கள்..!

    இந்த ஆண்டு , தொற்றுநோய் பரவல் காரணமாக எண்ணற்ற கருத்தரங்குகள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இருப்பினும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு பல்வேறு சுவாரஸ்யமான ஆன்லைன் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடைபெற்று வருகிறது. சைகை மொழியின் முக்கியத்துவத்தை பலர் அறிந்து கொள்வதை உறுதி செய்வதே இந்நிகழ்ச்சிகள் நடத்துவதன் முக்கிய நோக்கமாகும்.



    நீங்கள் ஏன் சைகை மொழியை கற்றுக்கொள்ள வேண்டும்?

    சைகை மொழிகள் பற்றிய விழிப்புணர்வு இந்தியாவில் பொதுவாக இல்லை. பல பெற்றோர்கள் தங்கள் காது கேளாத குழந்தைகளுடன் எவ்வாறு தொடர்புகொள்வது என்று தெரியவில்லை. பெரும்பாலான காது கேளாத குழந்தைகளை மற்றவர்கள் கேலி செய்கிறார்கள் அல்லது புறக்கணிக்கப்படுகிறார்கள். இந்த பிரச்சனையை தீர்க்க ஐஎஸ்எல் கற்றல் காது கேளாதோருக்கு கற்பிக்க சுமார் 300 சிறப்பு ஆசிரியர்களை நியமித்துள்ளது. சைகை மொழியை கற்றுக்கொள்வதால் காது கேளாத குழந்தைகளுடன் தொடர்பு கொள்வது எளிமையாக இருக்கும், மேலும் அவர்கள் கூற வருவதையும் நாம் எளிதாக புரிந்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sivaranjani E
    First published: