காதல் ஆண்களின் மூளையில் என்ன செய்யும் தெரியுமா? சுவாரஸ்யமான தகவல்களை வெயிட்ட ஆய்வு..!

காதல்

காதலிக்கும் போது, ஆண்கள் சமூகத்தை எதிர்கொள்வதில் தயக்கமே இல்லை. தன்னுடைய காதலை, காதலியை சமூகம் எப்படி பார்க்கும், என்ன சொல்லும் என்ற தன்னைச் சுற்றியிருக்கும் சமூகக் கண்ணோட்டம் என எதைப் பற்றியும் ஆண்களுக்கு பயமே இல்லை.

  • Share this:
காதலால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்? உடை, நடை, தோற்றம், பழக்க வழக்கம் என சில மாற்றங்களை வெளிப்படையாகக் காட்டும். உடலுக்குள்ளும் பல அதிரடியான மாற்றங்களை காதல் உண்டாக்குகிறது.

காதலில் விழுவது, உடலிலும் மனதிலும் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் என்பது மறுக்க முடியாத உண்மை. இந்நிலையில், காதலில் விழும் ஆண்களின் மூளையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகின்றன என்று, ஒரு ஆய்வு சுவையான மற்றும் சுவாரஸ்யமான தகவல்களை வெளிப்படுத்தியுள்ளன.

காதலில் விழுவதால் மூளையில் ஏற்படக்கூடிய சுவாரஸ்யமான மாறுதல்கள் :

காதலிப்பது மற்றும் காதலிக்கப்படுவது, இரண்டுமே அற்புதமான உணர்வுகள். காதல் வாழ்வின் உன்னதமான அனுபவம். கண்டதும் காதல் என்றாலும் சரி! ஒருவரை சந்தித்து, பழகி, நம்மை அவர் அறியாமலே காதல் மலர்ந்து, கொஞ்சம் கொஞ்சம் காதலிக்கத் தொடங்குவது என்பது அழகான அனுபவம்.

காதலுக்கு கண்ணில்லை. காதலில் உலகமே தலை கீழாக தெரியும்? இவற்றையெல்லாம் பெரும்பாலானோர் அறிந்திருப்பீர்கள்.

இதற்கான காரணங்கள் என்னவென்று உணர்ந்துள்ளீர்களா? காதலில் இருக்கும் போது உடல் மற்றும் மூளையின் வித்தியாசமாக செயல்படும். உற்சாகமான மற்றும் மகிழ்ச்சிக்கான மூளையில் இருந்து அருவியாகக் கொட்டும். இந்த ஹார்மோன்கள் காதலில் விழும் போது சுரந்து, ரகளையான அனுபவத்தைத் தரும். இதைப் பற்றி மேலும் பார்க்கலாம்.காதல் மெய் மறந்த நிலையை உணரச்செய்யும் ‘போதை’ :

பொதுவாக காதலில் ஆண்கள் மற்றும் பெண்கள் எப்படி உணர்வார்கள் என்பது பற்றி வெவ்வேறு கருத்துகள் உள்ளன. ஆண்கள் காதலிக்கும் போது அவர்கள் மூளையில் ஏற்படும் மாற்றங்கள் (ஹார்மோன் சுரப்புகள்) அவர்களுக்கு மிக மிக மகிழ்ச்சியான அனுபவத்தைத் தரும். பல நேரங்களில் மெய் மறந்த நிலையை உணர்வார்கள்.

தன் காதலியோடு இருக்கும் போது, புத்துணர்ச்சியை உணர்வார்கள். காதல் என்பது ‘போதை’ போன்ற அனுபவத்தை உணரச்செய்யும். இதற்கெல்லாம் காரணம், காதலிக்கும் போது சுரக்கும் ஒரு வேதிப்பொருள்.

ஆண்கள் மூளையில், ஃபீனைலெத்திலமீன் (PEA) என்ற வேதிப்பொருள் அதிகப்படியாக சுரந்து, அவர்களை காதல் உணர்வுக்கு அடிமையாக்கி, புதுமையான அனுபவத்தைத் தருகிறது.

ஏன் போதை போன்ற அடிமையாக்கும் உணர்வு என்ற கேள்வி எழும்பலாம்! காதலில் விழும் போது மூளையில் சில பகுதிகளில் நியூரோகெமிக்கல் விளைவுகள் உண்டாகிறது. போதைப்பொருள் பயன்படுத்தும்போதும் இதே பகுதிகளில், இதே போன்ற விளைவுகள் தோன்றுகின்றது. அதனால் தான், ஆண்கள் காதலிக்கும் போது, அதிகப்படியான மகிழ்ச்சியை, மெய் மறந்த ஒரு ‘எக்ஸ்டசிக்’ மனநிலையை உணர்கிறார்கள்.தவறான கண்ணோட்டம், தடுமாறும் முன்முடிவுகள் :

ஒவ்வொரு ஆணுக்கும் தான் நேசிக்கும் பெண் மிகவும் அற்புதமானவள், அழகானவள் மற்றும் தனித்துவமானவள் என்ற எண்ணம் தோன்றும்.

தன் காதலி எல்லா விதத்திலும் மிகச் சிறந்தாள், குறையில்லாதவள் என்றும் ஆண்கள் கருதிகின்றனர். தன்னுடைய காதலிக்கும் ஏதேனும் குறை இருக்கலாம் என்பதை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். , காதலி செய்வது எல்லாமே சிறப்பானதாகவே ஆண்களின் கண்களுக்குத் தெரியும். அதனாலேயே, ஆண்கள் சில தவறான முடிவுகளை எடுப்பார்கள்.

கூடுதலாக, காதலியின் அடிப்படை குணங்கள் மற்றும் ஆளுமை ஆகியவற்றை கவனிக்கத் தவறலாம். இது, பின்னாளில், உறவுகளில் விரிசல் ஏற்பட செய்ய வாய்ப்புள்ளது.

துணைக்கு உங்கள் மீது காதல் குறைந்துகொண்டே வருகிறதா..? சந்தேகம் இருந்தால் இந்த நடவடிக்கைகளை செக் பண்ணுங்க..!

பரவச மனநிலையை உணர்தல் :

Euphoric எனப்படும் பரவசமான, தன்னையே மறக்கச் செய்யும் அதிகபட்ச மகிழ்ச்சியான மனநிலையை காதல் உணரச் செய்யும்.

மூளைக்கு நன்றி! காதலில் ஏற்படும் இத்தகைய அனுபவங்கள் எல்லாவற்றுக்கும் மூளையில் சுரக்கக் கூடிய ஹார்மோன்கள் காரணமாக இருக்கிறது.

மூளையில் அதிகப்படியான டோப்பமைன் ஹார்மோன் மற்றும் ஹேப்பி ஹார்மோன்ஸ் எனப்படும் ஒருவரை மகிழ்ச்சியாக உணர வைக்கும் ஹார்மோன்கள் உற்பத்தியாகி, இந்த பரசவமான மன நிலையை உணர வைக்கிறது. இந்த ஹார்மோன்கள், இதயத்துடிப்பை அதிகரிகத்து, ஆண்களின் உள்ளங்கைகளை வியர்க்க வைக்கும். ஒருவரின் மீது ஈர்ப்பட்டால், இதயத்துடிப்பு அதிகரிக்கும் அல்லவா.

தொலைவில் காதலியைப் பார்க்கும் போதே, இதயம் வேகமாக துடிப்பதற்குக் காரணம், இந்த ஹார்மோன்களே.அழகான ஞாபகங்கள் :

காதலில் அழகு, அதில் உருவாகும் அழகான ஞாபகங்கள். காதலர்கள் பிரிந்து சென்றாலும், அவர்களிடையே இருந்த உறவுக்கு சாட்சியாக அழகான ஞாபகங்கள் எப்போதும் மாறாமல் இருக்கும்.

தலை முதல் கால் வரை, உள்ளும் புறமும் அற்புதமாக உணரும் போது, இயல்பாகவே நேர்மறை சிந்தனைகளும், அழகான உணர்வுகளும் தோன்றும். எனவே, ஆண்கள் இவற்றோடு தன்னை இணைத்துக் கொள்வார்கள்.

காதலில் விழும் போது, எதிர்மறை ஆற்றலே இல்லை. முழுமையான காதல் உணர்வு மற்றும் நேர்மறை சிந்தனைகள், ஆண்களை தங்கள் காதலியோடு அழகான தருணங்களை, நினைவுகளை ஏற்படுத்தச் செய்யும். அது மட்டுமின்றி, காதலியின் கடந்த காலத்தில் ஏற்பட்ட வலியை நீக்கவும், அவருடைய கஷ்டங்களுக்கு ஆறுதலாக இருக்கவும் உதவும்.

இதனால் தான், காதலில் விழுந்த ஆண்களால் காதலி கண் கலங்குவதைப் பார்க்க முடியாது. காதலிக்கு சிறிய கஷ்டம் என்றாலும் துடித்து விடுகிறார்கள்.சமூகம் என்ன சொல்லும் என்ற தயக்கம் இல்லை :

ஆண்கள் எவ்வளவு தான் தைரியசாலியாக வெளியே காட்டிக் கொண்டாலும், உண்மையிலேயே தைரியமாக இருந்தாலும், காதலில் இன்னும் கூடுதலான தைரியம் வந்துவிடுகிறது. அதாவது, வெளிப்படையாக தைரியமாக இல்லாதவர்கள் கூட, மிகவும் தைரியமானவர்களாக மாறி விடுகிறார்கள்.

காதலிக்கும் போது, ஆண்கள் சமூகத்தை எதிர்கொள்வதில் தயக்கமே இல்லை. தன்னுடைய காதலை, காதலியை சமூகம் எப்படி பார்க்கும், என்ன சொல்லும் என்ற தன்னைச் சுற்றியிருக்கும் சமூகக் கண்ணோட்டம் என எதைப் பற்றியும் ஆண்களுக்கு பயமே இல்லை.

நெருக்கமாக இருப்பது, கைகள் பற்றிக் கொள்வது, லேசாக அணைப்பது போன்ற, PDA எனப்படும் பொதுவெளியில் நெருக்கத்தை அன்பை வெளிப்படுத்தும் செயல்பாடுகளில் ஆண்களுக்கு தயக்கமே இருக்காது. அதற்கு மாறாக, தயக்கமே இன்றி காதலியின் கைகள் பற்றிக்கொண்டு ‘இவள் என்னுடையவள்’ என்று சுற்றியுள்ளவர்களுக்கு பெருமையாக தெரிவிப்பார்கள். சமூகமோ, சுற்றியுள்ளவர்களோ என்ன சொல்வார்கள் என்ற தயக்கம் இல்லை.

 
Published by:Sivaranjani E
First published: