• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • முதுகுவலிக்கு உடனடி நிவாரணம் பெற உதவும் ஆயுர்வேத டிப்ஸ்..!

முதுகுவலிக்கு உடனடி நிவாரணம் பெற உதவும் ஆயுர்வேத டிப்ஸ்..!

முதுகுவலி

முதுகுவலி

முதுகுவலியை போக்க நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் ஒரே இடத்தில் அமராமல் உடலை அவ்வப்போது இயக்கத்தில் வைத்துக்கொள்வதாகும். அடுத்ததாக உடல் அமைப்பை நேராக வைப்பது..

  • Share this:
கொரோனா ஊரடங்கிற்குப் பின் அனைவரும் டிஜிட்டல் மயத்திற்கு முற்றிலும் மாறிவிட்டனர். ஒரு பட்டனில் அனைத்தும் கைவசம் ஆகும் இந்த வசதி நமக்கு வேலையை சுலபமாக்கினாலும் உடல் நலத்திற்கு முற்றிலும் மோசமானது. ஏனெனில் உடல் பயிற்சி தடைபடும்போய்து பல நோய்களையும் சந்திக்க வேண்டியுள்ளது. அந்த வகையில் கொரோனா லாக்டவுனிற்குப் பிறகு ஆன்லைன் வகுப்பில் அமரும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் அனுபவிப்பது முதுகுவலிதான்.

இந்த முதுகுவலியை போக்க நீங்கள் செய்ய வேண்டிய முதல் விஷயம் ஒரே இடத்தில் அமராமல் உடலை அவ்வப்போது இயக்கத்தில் வைத்துக்கொள்வதாகும். அடுத்ததாக உடல் அமைப்பை நேராக வைப்பது..

இருப்பினும் நீங்கள் முதுகுவலியால் மிகவும் அவதிப்படுகிறீர்கள் எனில் உங்களுக்கு உடனடி வலி நிவாரணம் தேவை. இதற்காகவே இன்ஸ்டாகிராமில் மருத்துவர் தீக்‌ஷா பவார் சில பயிற்சிகளை பகிர்ந்துள்ளார்.

"90% பெரியவர்களுக்கு முதுகுவலிக்கு முக்கிய காரணம் உட்கார்ந்திருப்பது (உட்கார்ந்த வாழ்க்கை முறை)" என்கிறார் டாக்டர் தீக்ஷா.



முதுகுவலிக்கு உடனடி நிவாரணம் அளிக்க சில டிப்ஸ்...

தூங்கும் போது தலையணையை பயன்படுத்த வேண்டாம்.

தினமும் மகராசனம், ஷலபாசனம், மார்கடாசனம், புஜங்கனம் பயிற்சி செய்யுங்கள்.

2 மணி நேரத்திற்கு மேல் ஒரே நிலையில் உட்கார வேண்டாம். 5 நிமிடங்கள் இடைவெளி எடுத்துக்கொள்ளுங்கள்.

அபியங்கா (உங்கள் முதுகில் மசாஜ் செய்வது) எண்ணெய்கள் உதவுகிறது.

கண்களை பாதுகாக்க தினமும் பின்பற்ற வேண்டிய உணவு முறைகள் மற்றும் உடற்பயிற்சிகள்..!

முதுகுவலியைப் போக்க ஆயுர்வேத எண்ணெய்கள்:

  • மகாநாராயண எண்ணெய்

  • அஸ்வகந்தா எண்ணெய்

  • தன்வந்தரம் எண்ணெய்


இந்த மூன்று எண்ணெய்களும் இல்லை எனில் கடுகு எண்ணெய் அல்லது நல்லெண்ணெய் பயன்படுத்தலாம். இந்த எண்ணெய் தடவி மசாஜ் செய்ய முதுகு வலி சரியாகும் என்கிறார் மருத்துவர்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: