• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • தூக்கமின்மை நீரிழிவு நோய்க்கு வழி வகுக்குமா..? மருத்துவர்களின் அதிர்ச்சித் தகவல்..!

தூக்கமின்மை நீரிழிவு நோய்க்கு வழி வகுக்குமா..? மருத்துவர்களின் அதிர்ச்சித் தகவல்..!

தூக்கமின்மை

தூக்கமின்மை

ஒவ்வொரு இரவையும் நீங்கள் தூக்கமின்மையால் கழிக்கிறீர்கள் எனில் உங்கள் சர்க்கரை அளவை கண்கானிப்பது நல்லது.

  • Share this:
தூக்கமின்மை பிரச்சனையால் பலர் பாதிக்கப்படுவது மட்டுமன்றி அதனால் பலர் பல வகை நோய்களையும் சந்திக்கின்றனர். அதில் முக்கியமாக தூக்கமின்மை வளர்ச்சிதை மாற்றத்தை தடுக்கும் என்பது பலரும் அறிந்ததுதான். ஆனால் அது நீரிழிவு நோயையும் உருவாக்கும் என்பது அதிர்ச்சியான தகவலாக இருக்கிறது.

அதாவது தூக்கமின்மை மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலை அதிகமாக வெளியிடுகிறது. இது இன்சுலின் உற்பத்தியை தடுக்கிறது. இதன் காரணமாக இரத்த சர்க்கரை நோய் உருவாகிறது. இந்த மன அழுத்த ஹார்மோன் உணவை அதிகமாக உட்கொள்ள தூண்டும். நிறைய கார்போஹைட்ரேட் பானங்களை குடிக்க தோன்றும். இது உடல் பருமன் டைப் 2 நீரிழிவு நோய்க்கு வழிவகுக்கும்.

மேலும் லெப்டின் என்னும் ஹார்மோனின் அளவும் குறைவதால் நமக்கு அந்த சமயத்தில் கார்போஹைட்ரேட் உணவுகளைதான் அதிகமாக சாப்பிடத் தூண்டும் என்கின்றனர். ஏனெனில் லெப்டின் தான் கார்போஹைட்ரேட் வளர்ச்சிதை மாற்றத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

எனவே ஒவ்வொரு இரவையும் நீங்கள் தூக்கமின்மையால் கழிக்கிறீர்கள் எனில் உங்கள் சர்க்கரை அளவை கண்கானிப்பது நல்லது. The American Academy of Sleep Medicine and the Sleep Research Society யின் கூற்றுப்படி குறைந்தது இரவு 7 மணி நேர தூக்கம் அவசியம் என்கின்றனர். அதுதான் உங்களை ஃபிட்டாகவும், ஆரோக்கியமாகவும் வைத்துக்கொள்ள உதவுகிறது. நீங்கள் நாள் முழுவதும் சோர்வாக உணர்கிறீர்கள் என்றாலும் முந்தய இரவு சரியாக தூங்கவில்லை என்றே அர்த்தம்.



சரியான தூக்கமின்மையை உணர்த்தும் அறிகுறிகள் :

செயல் திறன் குறையும், கவனமின்மை அதிகரிக்கும்

சோர்வு அதிகரிக்கும், உற்சாகம் , சுறுசுறுப்பு இருக்காது

ஞாபகத்திறன் குறையும் , அடிக்கடி அமைதி நிலை அல்லது சோர்வு நிலைக்கு தள்ளப்படுவீர்கள்.

மனப்பதட்டம், மன அழுத்தம் , எரிச்சல் மற்றும் கோப உணர்வு அதிகரிக்கும்.

மேலே குறிப்பிட்ட அறிகுறிகள் உங்களுடன் ஒத்துப்போனால் தினமும் சரியான நேரத்தில் தூங்கி எழுவதை உறுதிபடுத்திக்கொள்ளுங்கள். அதன் பிறகு உங்களுக்குள் நடக்கும் மாற்றத்தை உணர்வீர்கள்.



அப்படி படுத்ததும் தூக்கம் வர செய்ய வேண்டியவை :

உங்கள் படுக்கை அறையை எப்போதும் இருள் சூழந்து அமைதியான , நிம்மதி தரும் ஒரு இடமாக வைத்துக்கொள்ளுங்கள்.

தூங்கும் முன் செல்ஃபோன், டிவி, லாப்டாப் என எதையும் பார்க்கக் கூடாது. ஏனெனில் இது உங்கள் தூக்கத்தை தடுக்கும். எனவே, குறைந்தது தூங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பே இதை பின்பற்றுங்கள்.

நாள் முழுவதும் சுறுசுறுப்பாகவும், உற்சாகமாகவும் இருங்கள்.

குளிர்காலத்தில் அதிகரிக்கும் சைனஸ் பிரச்சனை : உங்கள் பிரச்சனைக்கு இதுதான் தீர்வு..!

படுக்கைக்கு செல்லும்முன் உங்கள் மன நிலையை அமைதியாக வைத்துக்கொள்ளுங்கள்.

ஆழ்ந்த தூக்கத்திற்கு படுப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன் நல்ல குளியல் அல்லது புத்தகம் வாசிக்கலாம்.

தூங்கும் முன் காஃபி, ஆல்கஹால், புகைப்பழக்கம் கூடாது.

பகலில் 3 மணிக்கு மேல் குட்டி தூக்கத்தை தவிர்ப்பது நல்லது. இது இரவு தூக்கத்தை தாமதப்படுத்தும்.

 

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: