10-இல் 6 குழந்தைகள் தொற்று நோயால் பாதிக்கப்படுவதாக மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர். குறிப்பாக சளி, மூக்கு ஒழுகுதல், காய்ச்சல் போன்ற அறிகுறிகளுடனே அதிகம் வருவதாக தெரிவிக்கின்றனர். இப்படி இந்தியாவே பருவகால தொற்றால் அவதிப்பட்டு வருவதற்கு இன்ஃப்ளூயன்சா A அல்லது H3N2 தொற்றுதான் காரணம் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். அப்படி குழந்தைகள் நல மருத்துவர்கள் கடந்த இரண்டு மாதங்களில் அதிக அளவில் குழந்தைகள் அனுமதிக்கப்படுவதாகக் கூறுகின்றனர்.
சளி அறிகுறிகளுடன் வரும் குழந்தைகளின் எண்ணிக்கை 30-40 சதவீதம் அதிகரித்திருப்பதாக டெல்லியை சேர்ந்த குழந்தைகள் நல மருத்துவர் தினேஷ் ராஜ் கூறியுள்ளார். இப்படி குழந்தைகள் மட்டுமன்றி பெரியவர்களும் அதிகமாக இன்ஃப்ளூயன்சா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கிறார்.
இன்ஃப்ளூயன்சா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் எப்படி கண்டறிவது..?
மருத்துவர்களின் கூற்றுப்படி குழந்தைகள் அதிக காய்ச்சலுடன் உடல் வலிம் இருமல், சளி, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற அறிகுறிகளை அனுபவிக்கின்றனர். பொதுவான அறிகுறிகளாக அதிக காய்ச்சலுடன் உடல் வலி , தலை வலி மற்றும் மூக்கொழுகுதல் இருக்கின்றன.
காய்ச்சலுடன் தொடர் இருமல் இருப்பின் குணமாக 8 முதல் 10 நாட்கள் வரை ஆகிறது. அவ்வப்போது வாயு தொல்லை, செரிமானப்பிரச்சனை, வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி போன்ற கூடுதல் அறிகுறிகளையும் அனுபவிக்கின்றனர்.
யாருக்கெல்லாம் ஆபத்து அதிகம்..?
ஆஸ்துமா , இதய நோய், உடல் பருமன், நரம்பியல் பிரச்சனைகள் இருக்கும் குழந்தைகளை கவனமுடன் பார்த்துக்கொள்வது அவசியம் என்கிறார் மருத்துவர் தினேஷ்.
பெரும்பாலும் குழந்தைகள் மூச்சு விடுவதில் அதிகமாக சிரமம் கொள்வதாகவும் அப்படி மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் குழந்தைகளுக்கு குறைந்தது 5 நாட்களுக்கு கண்கானிப்பு தேவைப்படுகிறது என கூறுகிறார்.
இப்படி வைரல் தொற்று பாதிப்புகளான கொரோனா வைரஸ், அடினோவா வைரஸ், இன்ஃப்ளூயன்சா வைரஸ் போன்ற வைரஸ் தொற்றுகள் வந்தாலே ஆபத்துதான். எனவே அப்படி அறிகுறிகள் தெரிந்தால் உடனே மருத்துவரை அணுகுவது நல்லது என்கிறார் மருத்துவர்.
மேலும் அவர் “ 5 வயதுக்கு குறைவான குழந்தைகள் ஆஸ்துமா, நீரிழிவு நோய், இதய நோய், குறைந்த நோய் எதிர்ப்பு திறன் கொண்ட குழந்தைகள், நரம்பியல் பிரச்சனை போன்ற பாதிப்புகளை கொண்ட குழந்தைகளுக்கு கடுமையான பாதுகாப்பு அவசியம்” என்கிறார்.
மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவராக பர்விந்தர் சிங் நரங் “ பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பும் முன் மாஸ்க் அணிதல், கைகளை சுத்தமாக வைத்துக்கொள்ளுதல் போன்ற சுகாதார விஷயங்களை பின்பற்ற சொல்லித்தர வேண்டியது அவசியம் என்கிறார்.
பொதுவாக குழந்தைகளே தொற்று பரவலுக்கு முக்கிய ஆதரமாக விளங்குகின்றனர். சளி பிடித்திருந்தால் ஆரம்பத்தில் தேவையின்றி ஆன்டி பயாடிக்ஸ் கொடுக்க வேண்டாம். அதுவே தானாக சரியாகும். மூச்சுத்திணறல் பிரச்சனை சில நாட்கள் கழித்தே ஆரம்பமாகும்.
ஆன்டி வைரல் மருந்துகள் எடுத்துக்கொள்கிறீர்கள் எனில் முதல் இரண்டு நாட்களுக்கு அறிகுறிகளை கட்டுப்படுத்த உதவும். அதுவும் ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் மட்டுமே உதவும். அதற்காக வீட்டிலேயே வைத்து சுய மருத்துவம் செய்வதும் தவறு. இதை பெற்றோர் செய்யாதீர்கள் என எச்சரிக்கிறார் மருத்துவர் பர்விந்தர் சிங் நரங்.
Also Read : இன்ஃபுளுவன்சா தொற்றுக்கு சுயமாக மருந்து எடுத்துக்கொள்வது சரியா..? மருத்துவர்கள் சொல்வது என்ன..?
இந்தியன் அகாடமி ஆஃப் பீடியாட்ரிக்ஸ், 5 வயதிற்கு குறைவான குழ்ழந்தைகளுக்கே இன்ஃபுளூயன்ஸா தடுப்பூசி செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. 5 வயதை தாண்டிய குழந்தைகளுக்கு வேறு ஏதேனும் நோய் பாதிப்புகள் இருப்பின் தடுப்பூசி செலுத்தலாம் என்கிறது.
6 மாதம் முதல் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு பொதுவாகவே ஃபுளூ தடுப்பூசி செலுத்த பரிந்துரைக்கப்படும். அப்படி வருடத்திற்கு 2 டோஸ் எடுத்துக்கொள்ளவும், ஒவ்வொரு வருடமும் மழைக்காலத்திற்கு முன் ஃபுளூ தடுப்பூசி செலுத்துவதும் அவசியம் என்கிறார்.
இந்த ஃபுளூ தடுப்பூசி பருவகால தொற்று , பொதுவான தொற்று நோய்களிலிருந்து பாதுகாக்க உதவுகிறது. வீட்டில் உள்ளவர்கள் வைரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தால் தனிமைப்படுத்திக்கொள்ளுதல், சுகாதார விஷயங்களை பின்பற்றுதல் அவசியம் என்கிறார்.
எப்படி தற்காத்துக்கொள்வது..?
ஃபுளூ என்பது அதிவேகமாக ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் தன்மை கொண்டது. தும்மல், இருமல் மூலம் காற்றில் பரவக்கூடியது என்பதால் சுகாதாரமான விஷயங்களை கையாளுதல் அவசியம்.
குறிப்பாக மாஸ்க் அணிதல், தனிமைப்படுத்திக்கொள்ளுதல், கைகளை அடிக்கடி கழுவுதல், பொது இடங்களில் கை வைக்காமல் இருத்தல், மற்றவர்களின் உடமைகளை பகிர்வதை தவிர்த்தல் போன்ற விஷயங்களை பின்பற்றுதல அவசியம்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை உட்கொள்ளுதல், அதிகமாக நீர்ச்சத்து நிறைந்த பழங்களை உட்கொள்ளுதல் உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ளுதல் போன்றவை அவசியம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Avian influenza, Fever, Flue, Kids Health, Throat Infection