முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / கர்ப்பிணி பெண்களை தாக்கும் குடல் அழற்சி நோய் : குழந்தையையும் பாதிப்பதாக ஆய்வில் அதிர்ச்சி

கர்ப்பிணி பெண்களை தாக்கும் குடல் அழற்சி நோய் : குழந்தையையும் பாதிப்பதாக ஆய்வில் அதிர்ச்சி

கர்ப்பகால சிக்கல்கள்

கர்ப்பகால சிக்கல்கள்

குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்பகால நீரிழிவு, பிரசவத்திற்குப் பிறகான ரத்தக்கசிவு, உயர் இரத்த அழுத்த சிக்கல்கள், குறைப்பிரசவம், கரு வளர்ச்சிக் கட்டுப்பாடு மற்றும் கரு மரணம் ஆகியவை அதிகமாக இருப்பதாகவும் ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

குடல் அழற்சி நோய் என்பது இன்ஃப்ளேமட்டரி பவல் டிசீஸ் என்று அழைக்கப்படுகிறது. இந்நோய் ஆனது செரிமானம் மற்றும் இரைப்பை குடல் பாதையில் அழற்சி, வீக்கம் போன்ற பிரச்சனைகளை உருவாக்க கூடியது. வயிற்று வலி, எடையிழப்பு, சோர்வு, ரத்தத்துடன் மலம் வெளியேறுவது, மலச்சிக்கல் போன்றவை பொதுவான அறிகுறிகளாகும். மரபு வழி பிரச்சனைகள், ஆரோக்கியமற்ற உணவு முறை, உடல் திசுக்களுக்கு எதிரான பாக்டீரியா மற்றும் வைரஸ் தூண்டல் மூலமாக இந்நோய் உருவாகக்கூடும் என கூறப்படுகிறது.

இந்நிலையில் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலமாக குடல் அழற்சி நோயால் (IBD) பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களின் குழந்தைகளுக்கும் இந்நோய் வர வாய்ப்புள்ளது கண்டறியப்பட்டுள்ளது. 8 மில்லியனுக்கும் அதிகமான கர்ப்பிணி பெண்களை ஆய்வு செய்ததன் மூலமாக குடல் அழற்சி நோய் பற்றிய இந்த அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

மிசோரி பல்கலைக்கழக மருத்துவப் பள்ளி நடத்திய ஆய்வுகள் மற்றும் அதன் முடிவுகள் குறித்து, இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் கொலரெக்டல் டிசீஸில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், குடல் அழற்சி நோய் என்பது அல்சர் நிறைந்த கோலிடிஸ் மற்றும் க்ரோன்ஸ் டிசீஸ் என்ற இரண்டு நீண்டகால் நோய்களால் உருவாக கூடிய இது, முக்கியமாக இளம் வயதினரை பாதிப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதில் அதிக எண்ணிக்கையிலான கர்ப்பிணி பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த உதவிப் பேராசிரியரான MD மூத்த எழுத்தாளர் Yezaz Ghouri கூறுகையில், "IBD ஒரு குணப்படுத்த முடியாத நோயாகும். மேலும் இந்நோயால் பாதிக்கப்பட்டு மீண்ட 3 மில்லியன் அமெரிக்க ஆண்கள் மற்றும் பெண்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் இந்நோய் பெண்களை அவர்களது கர்ப்ப காலத்தில் அதிகமாக பாதிக்கும் என்பதால், கர்ப்பிணி பெண்கள் மற்றும் அவர்களது கரு மீதான தாக்கம் எவ்வாறு உள்ளது என்பது குறித்தும் ஆராய்ச்சி நடத்தினோம். இந்த ஆய்வு 48 மாநிலங்களில் உள்ள பல நிறுவனங்களின் தரவைப் பயன்படுத்தி மிகவும் விரிவாக மேற்கொள்ளப்பட்டது” எனத் தெரிவித்துள்ளார்.

உங்கள் குழந்தைக்கு உடனடி மருத்துவ கவனிப்பு அவசியம் என்பதை உணர்த்தும் முக்கிய அறிகுறிகள்..!

ஆராய்ச்சி குழு 2016 மற்றும் 2018 க்கு இடையில் 8 மில்லியனுக்கும் அதிகமான கர்ப்பிணிகளிடம் ஆய்வு நடத்தியதில், 14,129 தாய்மார்களுக்கு குடல் அழற்சி நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்களுக்கு கர்ப்பகால நீரிழிவு, பிரசவத்திற்குப் பிறகான ரத்தக்கசிவு, உயர் இரத்த அழுத்த சிக்கல்கள், குறைப்பிரசவம், கரு வளர்ச்சிக் கட்டுப்பாடு மற்றும் கரு மரணம் ஆகியவை அதிகமாக இருப்பதாகவும் ஆய்வு முடிவுகள் சுட்டிக்காட்டியுள்ளன.

குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிப் பெண்கள் பிரசவத்திற்கு பிறகு நீண்ட நாட்கள் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை எடுக்க வேண்டியுள்ளதாகவும், பிற கர்ப்பிணி பெண்களை விட மருத்துவச் செலவிற்காக சராசரியாக 2,500 டாலர்கள் வரை அதிகம் செலவழிக்க வேண்டி இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.

எனவே மிதமான மற்றும் கடுமையான குடல் அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ள பெண்கள் கர்ப்பம் தரிப்பதற்கு முன்னதாக மருத்துவர்களிடம் ஆலோசனை பெற வேண்டும் மற்றும் கர்ப்பம் தரிப்பதற்கு முன்னதாகவே IBD நோய்க்கு தீவிர சிகிச்சை மேற்கொண்டு குணமடைவது முக்கியமானது என ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

First published:

Tags: Gut Health, Pregnancy care