• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்களை முன்னெச்சரிக்கையுடன் தடுப்பது எப்படி?

குழந்தைகளுக்கு ஏற்படும் தொற்று நோய்களை முன்னெச்சரிக்கையுடன் தடுப்பது எப்படி?

குழந்தை பாதுகாப்பு

குழந்தை பாதுகாப்பு

ஒரு பெற்றோராக நீங்கள் உங்கள் குழந்தைகளை கவனிக்க வேண்டும். அதுமட்டும் இல்லாமல், பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளிடையே தான் அதிகளவில் நோய்கள் பரவுகிறது.

  • Share this:
குழந்தைகள் தற்போது தொற்று நோய்களால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக 10-12 வயதுடைய குழந்தைகளிடையே தொற்று நோய்கள் பரவுகிறது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். கொரோனா தொற்றுக்காலத்தில் இது சற்று அதிகரித்து காணப்படுகிறது.

ஒரு பெற்றோராக நீங்கள் உங்கள் குழந்தைகளை கவனிக்க வேண்டும். அதுமட்டும் இல்லாமல், பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளிடையே தான் அதிகளவில் நோய்கள் பரவுகிறது. நாம் நோய் வருவதற்கு முன்பே தற்காத்துக் கொள்வது அவசியம் ஆகும். குழந்தைகளில் காணப்படும் சில தொற்று நோய்களையும், அவற்றை தடுப்பது எப்படி என்றும் இங்கு பார்க்கலாம்.

சின்னம்மை (Chickenpox) :

‘சின்னம்மை’ ஒரு லேசான தொற்று நோயாகும். இது பெரும்பாலானவர்களுக்கு ஏற்படும். சின்னம்மை பொதுவாக உடல்நிலை சரியில்லாமல், சொறி, சிரங்கு மற்றும் காய்ச்சலுடன் தொடங்குகிறது. ஓரிரு நாட்களுக்குள், சிவப்பு புள்ளிகள் தோன்றி கொப்பளங்களாக உருவாகின்றது. அவை இறுதியில் சிரங்குகளாக மாறி காய்ந்து விழும். இந்த புள்ளிகள் ஆனது முதலில் மார்பு, முதுகு, தலை அல்லது கழுத்தில் தோன்றும். பிறகே இவை மற்ற இடங்களில் பரவுகின்றது. நோய்த்தொற்றுக்குப் பிறகு ஒன்று முதல் மூன்று வாரங்களுக்கு இடையில் அறிகுறிகள் தோன்றும்.

காய்ச்சல் அல்லது ஏற்படும் அசௌகரியத்தை போக்க, பாராசிட்டமால் சரியான அளவில் எடுத்துக்கொள்வது அவசியம் ஆகும். சின்னம்மை உள்ள குழந்தைகளுக்கு இப்யூபுரூஃபன் பரிந்துரைக்கப்படுவதில்லை. ஏனென்றால், இது சில சந்தர்ப்பங்களில் தோல் அலர்ச்சியை ஏற்படுத்துவதால் பரிந்துரைக்கப்படுவதில்லை. தினமும் குளிப்பது, தளர்வான ஆடைகளை அணிவது, கலமைன் லோஷன் தடவுவது ஆகியவை அரிப்பிலிருந்து விடுபட உதவும்.



காது வலி (Ear pain) :

குழந்தைகளுக்கு காது வலி ஏற்படுவது பொதுவானது ஆகும். காது தொற்று அல்லது காதில் உள்ள தோலின் தொற்று, பற்கள் வலி, தாடையில் இருந்து காது வரை பரவுதல், சளி அல்லது சைனஸ் தொற்றினால் ஏற்படும் அழுத்தம் மற்றும் பிற காரணிகளால் ஏற்படலாம். இதற்கு குழந்தை மருத்துவரை அணுகுவது அவசியம் ஆகும். முதலில் குழந்தையின் காதைப் பரிசோதிக்க வேண்டும்.

காது வலியைத் தொடர்ந்து அதிக காய்ச்சலும், இரண்டு காதுகளும் சம்பந்தப்பட்டிருந்தால் அல்லது நோயின் பிற அறிகுறிகளைக் கொண்டிருந்தால், ஆன்டிபயாட்டிக்ஸ் பயன்படுத்துவது சிறந்த சிகிச்சை ஆகும். பென்சிலின் ஒவ்வாமை அல்லது நோய்த்தொற்று தொடர்ச்சியாகவோ இருந்தாலே தவிர, காது நோய்த்தொற்றுகளுக்கு ‘அமோக்ஸிசிலின்’ சிறந்த ஆன்டிபயாடிக் ஆகும்.

குழந்தையின் பார்வை திறனை மேம்படுத்த உதவும் ’சூப்பர்-ஃபுட்ஸ்’- செக்லிஸ்ட் இதோ!

கை, கால் மற்றும் வாய் நோய் (Hand, Foot, and Mouth disease) :

பொதுவாக, இந்த தொற்று வைரஸ் நோய் தீவிரமானது அல்ல. குழந்தைகள் பெரும்பாலும் உமிழ்நீர், கொப்பளம் திரவம் மற்றும் மலம் வழியாக வைரஸ் வர வாய்ப்பு உள்ளது. காய்ச்சல், தொண்டை வலி, பசியின்மை போன்றவை இதன் அறிகுறிகளாகும். தொண்டையின் பின்புறத்தில் வலிமிகுந்த புண்கள் உருவாகலாம். தோல் சொறியானது பொதுவாக உள்ளங்கைகள் மற்றும் உள்ளங்காலில் தோன்றும். இவை எந்தவித சிகிச்சையின்றி பொதுவாக 7 முதல் 10 நாட்களில் சரியாகிவிடும்.



தொண்டை வலி (Sore throat) :

‘தொண்டை வலி’ குழந்தைகளில் பொதுவாக ஏற்படக்கூடியது தான். தொண்டை புண்களுக்கு ‘ஆன்டிபயாட்டிக்ஸ்’ தேவையில்லை.ஏழு முதல் பத்து நாட்களுக்குள் உங்கள் குழந்தை இயல்பு நிலைக்குத் திரும்ப முடியும். எந்தவித மருந்தும் தேவைப்படாது. ஒருவேளை அவை தொடர்ந்தால் ‘ஆன்டிபயாட்டிக்ஸ்’ எடுத்துக் கொள்ள வேண்டும். பெரும்பாலான தொண்டை புண்களுக்கு ‘ஸ்டீராய்டு’ மருந்துகள் பரிந்துரைக்கப்படுவதில்லை.

தட்டம்மை (Measles) :

தட்டம்மை தொற்று ஏற்பட்ட 7 முதல் 12 நாட்களுக்குப் பிறகு தோன்றும். சளி, இருமல் மற்றும் புண், கண்களில் நீர் வடிதல் ஆகியவை இதன் அறிகுறிகளாகும். சின்னம்மையை விட இந்த தட்டம்மை மிகவும் ஆபத்தானது ஆகும். எம்எம்ஆர் (MMR) தடுப்பூசி பயன்படுத்தி இதனை தடுக்கலாம். காய்ச்சல் மற்றும் உடல் அசௌகரியத்தை போக்க, பாராசிட்டமால் அல்லது இப்யூபுரூஃபன் எடுத்துக்கொள்ள வேண்டும்.



சளி (Mumps) :

சளி நோய்த்தொற்று ஏற்பட்ட 14 முதல் 25 நாட்களுக்குப் பிறகு இதன் அறிகுறிகள் தோன்றும். உடல்நிலை சரியில்லாமல் இருப்பது, மிக அதிக வெப்பநிலை, வீக்கம் மற்றும் முகத்தின் பக்கத்திலும் கன்னத்தின் அடியிலும் வலி ஆகியவை இதன் அறிகுறிகள் ஆகும். இந்த நோயினால் ஏற்படும் வலியினை போக்க, பாராசிட்டமால் அல்லது இப்யூபுரூஃபனைக் கொடுக்கலாம்.

மருந்து கொடுப்பது எவ்வளவு முக்கியமோ, அதனைப்போலவே அதை சரியான அளவில் கொடுப்பதும் முக்கியம் ஆகும். இந்த நோய் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு திரவ உணவுகளை கொடுக்க வேண்டும். பழச்சாறுகளை கொடுப்பதை தவிர்க்க வேண்டும். ஏனெனில் அவை உமிழ்நீர் ஓட்டத்தை அதிகரிக்கின்றது. இது குழந்தையின் உடல் நலத்தை மோசமாக்கலாம்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: