விஞ்ஞானிகள் கண்டுபிடித்த பாக்டீரியாவால் கொசுக்கள் குறைந்தன : டெங்குவை ஒழித்திடலாம் என நம்பிக்கை..!

மாதிரி படம்

டெங்கு காய்ச்சல் வழக்குகள் 77% குறைக்கப்பட்டுள்ளன என்றும் கூறி உள்ளனர். 1970-ஆம் ஆண்டில் உலகில் 9 நாடுகள் மட்டுமே கடுமையான டெங்கு

  • Share this:
டெங்கு காய்ச்சலால் உலகம் முழுவதும் சராசரியாக ஆண்டுக்கு சுமார் 6 கோடி பேர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். ஏடிஸ் என்னும் கொசுவினால் பரவ கூடிய வைரஸால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. இந்நிலையில் குறிப்பிட்ட ஒரு பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட கொசுக்கள் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த உதவும் என்று விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

டெங்கு காய்ச்சல் வழக்குகள் 77% குறைக்கப்பட்டுள்ளன என்றும் கூறி உள்ளனர். 1970-ஆம் ஆண்டில் உலகில் 9 நாடுகள் மட்டுமே கடுமையான டெங்கு நோயை எதிர் கொண்ட நிலையில், இப்போது ஆண்டுக்கு 400 மில்லியன் வரை இந்த தொற்று நோயால் பாதிக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

டெங்கு பொதுவாக "எலும்பு முறிவு காய்ச்சல்" என்று அழைக்கப்படுகிறது. ஏனெனில் இது தசைகள் மற்றும் எலும்புகளில் கடும் வலியை ஏற்படுத்துகிறது. இது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகள் அதிசய பாக்டீரியா ஒன்றால் பாதிக்கப்பட்ட கொசுக்களை பயன்படுத்தினர். அவை டெங்கு வைரஸை பரப்பும் கொசுக்களின் திறனை குறைத்தன. இந்தோனேசியாவின் யோக்யாகர்தா நகரில் இது தொடர்பான சோதனை நடந்தது, மேலும் டெங்கு வைரஸை ஒழிக்கும் என்ற நம்பிக்கையில் இந்த பரிசோதனை மேலும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது.

உலகெங்கிலும் சென்றுள்ள ஒரு வைரஸுக்கு இது ஒரு தீர்வாக இருக்க கூடும் என்று உலக கொசு திட்ட குழு கூறுகிறது. சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் டெங்கு பாதிப்பு பற்றி அனைவரும் அறிந்திருக்கவில்லை.ஆனால் தற்போது இது இடைவிடாமல் மெதுவாக உலகம் முழுவதும் பரவி காணப்படும் தொற்று நோயாக இருக்கிறது.



இதனிடையே டெங்கு வைரஸை கட்டுப்படுத்துவது பற்றிய ஆராய்ச்சி ஒன்றில் வோல்பாசியா பிபியென்டிஸ் (wMel) என்ற பாக்டீரியாக்களால் பாதிக்கப்பட்ட கொசுக்களை வெளியிடுவதன் மூலம் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த ஆராய்ச்சியாளர்கள் ஒரு வழியைக் கண்டுபிடித்துள்ளனர்.இந்த சோதனையில் வோல்பாசியா பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட கொசுக்களைப் பயன்படுத்திய ஆராய்ச்சியாளர்கள் வைரஸ் தடுக்கும் பண்புகள் இந்த கொசுக்கள் "இயற்கை அதிசயம்" என்று விவரிக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இது தொடர்பாக பேசிய டாக்டர் கேட்டி ஆண்டர்ஸ், வோல்பாசியா பாக்டீரியா கொசுவிற்கு தீங்கு விளைவிப்பதில்லை, ஆனால் டெங்கு வைரஸ் வர வேண்டிய அதன் உடலின் அதே பாகங்களில் இந்த wMel பாக்டீரியா இருக்கிறது. இந்த பாக்டீரியா அது வாழ்வதற்காக போராடுவதால் டெங்கு வைரஸ் பெருகுவதை மிகவும் கடினமாக்குகிறது. எனவே கொசு மீண்டும் கடிக்கும் போது டெங்கு தொற்றை ஏற்படுத்தும் வாய்ப்பு குறைவு என்று குறிப்பிட்டார். தங்களது இந்த சோதனையின் போது வோல்பாசியா பாக்டீரியாவால் பாதிக்கப்பட்ட ஐந்து மில்லியன் கொசு முட்டைகள் பயன்படுத்தப்பட்டன.

Protein Deficiency : உடலில் புரதச்சத்து குறைந்துவிட்டால் என்னென்ன அறிகுறிகள் தெரியும்..? கவனமாக இருங்கள்..!

ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் ஒரு முறை வாளி தண்ணீரில் முட்டைகள் வைக்கப்பட்டன. மேலும் பாக்டீரியா பாதிக்கப்பட்ட கொசுக்களின் குழுவை உருவாக்க சுமார் ஒன்பது மாதங்கள் ஆனது. நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆஃப் மெடிசின் மருத்துவ இதழில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சி முடிவுகள் படி, பாக்டீரியா பாதிக்கப்பட்ட கொசுக்கள் விடுவிக்கப்பட்டபோது 77% டெங்கு பாதிப்பு குறைவு மற்றும் மருத்துவமனையில் பராமரிப்பு தேவைப்படும் நபர்களில் 86% குறைப்பு ஆகியவற்றை காட்டியது தெரிய வந்துள்ளதாக குறிப்பிடப்படுள்ளது. இந்த நுட்பம் மிகவும் வெற்றிகரமாக உள்ளது, கொசுக்கள் முழு நகரத்திலும் வெளியிடப்பட்டுள்ளன.



மேலும் இந்த திட்டம் பிராந்தியத்தில் டெங்குவை ஒழிக்கும் நோக்கத்துடன் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் கொண்டு செல்லப்பட உள்ளதாக டாக்டர் கேட்டி ஆண்டர்ஸ் கூறியுள்ளார். "இந்த முறையை யோககர்த்தாவின் அனைத்து பகுதிகளிலும் செயல்படுத்த முடியும் என்றும் இந்தோனேசியாவின் அனைத்து நகரங்களிலும் மேலும் விரிவாக்க முடியும் என்றும் நாங்கள் நம்புகிறோம்" என யோக்யாகர்தா நகரத்தின் நோய் தடுப்புத் தலைவர் டாக்டர் யூடிரியா அமெலியா கூறியுள்ளார். மொத்தத்தில் வோல்பாசியா பாக்டீரியா டெங்கு காய்ச்சலை முழுமையாக விரட்ட போதுமானதாக இருக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
Published by:Sivaranjani E
First published: