செல்போன் அதிகம் பயன்படுத்தினால் இதய துடிப்பு குறையுமாம்... கட்டுப்படுத்த புதிய கருவி அறிமுகம்..!

18 - 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களின் அளவு 60க்கு மேல் இருக்க வேண்டும். ஆனால் இளைஞர்களின் அதிகப்படியான செல்போன் பயன்பாட்டால் 44 வரை குறைந்துள்ளது

news18
Updated: November 7, 2019, 7:36 PM IST
செல்போன் அதிகம் பயன்படுத்தினால் இதய துடிப்பு குறையுமாம்...  கட்டுப்படுத்த புதிய கருவி அறிமுகம்..!
செல்போன் அடிக்‌ஷன்
news18
Updated: November 7, 2019, 7:36 PM IST
செல்போன் அடிக்‌ஷனால் இதயத்துடிப்பு அளவு குறைதல் மற்றும் இரத்தத்தில் ஆக்ஸிஜனேற்றம் குறைபாடு நிகழ்கிறது. இதை சரிசெய்யும் விதமாக ’நெட்டாக்ஸ்’(Nettox) என்ற கருவியைக் இந்தியோனேஷியாவில் பல்கலைக்கழக மாணவர் கண்டுபிடித்துள்ளார்.

டியாஸ் சிசியானந்திதா என்ற மாணவர் தான் அதிகமாக செல்போன் பயன்படுத்துவதை உணர்ந்து இந்தக் கருவியை கண்டுபிடித்துள்ளார்.

கையில் வாட்ச் போல் இந்த பேண்டை கட்டிக்கொள்ளலாம். நீங்கள் அதிக நேரம் செல்ஃபோன் பயன்படுத்தினால் அதை உணர்த்தும் விதமாக அலாரம் அடிக்கும்.


எப்படி கண்டுபிடிக்கும் ?

செல்போனை அதிக நேரம் பயன்படுத்தினால் ஹீமோகுளோபினின் ஆக்ஸிஜன் அளவு குறையும். அதோடு இதயத் துடிப்பும் குறையும். இவை இரண்டின் அளவு குறைவதை வைத்தே அந்த கருவி அலாரம் சத்தத்தை எழுப்பும்.Loading...

அமெரிக்க சைக்காலஜி சங்கத்தின்படி 18 - 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்களின் அளவு 60க்கு மேல் இருக்க வேண்டும். ஆனால் இளைஞர்களின் அதிகப்படியான செல்போன் பயன்பாட்டால் 44 வரை குறைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இதுமட்டுமன்றி இன்று அதிகமான இணையதளப் பயன்பாட்டால் சமூக அத்துமீறல்களும் அதிகரித்து வருகின்றன. எனவே குறைந்த அளவிலான செல்ஃபோன் பயன்பாடு இதுபோன்ற பிரச்னைகளுக்கும் தீர்வாக இருக்கும் என அந்த மாணவர் தெரிவித்துள்ளார்.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: November 7, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...