கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்த அல்லது தொற்று ஏற்பட்டாலும் அதன் அறிகுறிகள் தீவிரமாகாமல் இருப்பதற்காக பல்வேறு நாடுகள் தடுப்பூசிகளை கண்டுபிடித்தன. இந்தியாவிலும் முன்னணி மருந்து நிறுவனங்கள் கோவிட் தடுப்பூசியை கண்டுபிடித்தன. இதுவரை இந்தியாவில் கோவிட் 19 தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக மொத்தம் ஒன்பது தடுப்பூசிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவற்றில் மூன்று தடுப்பூசிகள் இந்தியா முழுவதும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. உலகம் முழுவதும் கோவிட் தொற்று தீவிரமாக பாதிக்கப்பட்டிருந்த நிலையில், வெளிநாடுகளுக்கும் அனுப்பப்பட்டது.
* சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியா தயாரித்த கோவி-ஷீல்டு (Covishield)
* பாரத் பயோடெக் ஆய்வு நிறுவனத்தின் கோவக்சின் (Covaxin)
* ரஷிய தடுப்பூசியான ஸ்புட்நிக் வி (Sputnik V)
அக்டோபர் 2021 நிலவரப்படி இந்தியாவில் 100 கோடிக்கும் மேற்பட்ட கோவிட் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது மிகப்பெரிய வெற்றியாக கருதப்பட்டது. 18 வயதுக்கு மேற்பட்டவர்களில் 99 சதவிகித்தினருக்கு கோவிட் முதல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டது. அதேபோல 76 சதவிகித்தினருக்கு இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுள்ளன.
கோவிட் வைரஸ் மாறுபாட்டின் தீவிரத்தை குறைக்க பூஸ்டர் டோஸ் இப்பொழுது வழங்கப்பட்டு வருகின்றது. முன் களப் பணியாளர்கள் மற்றும் 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நாடுமுழுவதும் பூஸ்டர் டோஸ் செலுத்தப்படுகின்றது.
உலக நாடுகள் ஒவ்வொன்றும் தங்களால் இயன்ற அளவுக்கு கோவிட் தொற்றிலிருந்து பாதுகாப்பதற்காக சக்தி வாய்ந்த தடுப்பூசிகளைத் தயாரித்து வந்த நிலையில், தற்போது இந்தியாவும் தனது முதல் mRNA தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது. mRNA தடுப்பூசி என்றால் என்ன இது மற்ற கோவிட் தடுப்பூசிகளில் இருந்து எப்படி வேறுபடுகிறது என்பதைப் பற்றி இங்கே பார்க்கலாம்.
Also Read : சத்தமின்றி கல்லீரலைக் குறிவைக்கும் இந்த வைரஸ் குறித்து தெரியுமா? எச்சரிக்கை பதிவு
mRNA தடுப்பூசி என்றால் என்ன, அது எவ்வாறு செயல்படும்?
mRNA என்பது Messenger Ribonucleic Acid ஆகும். மற்ற தடுப்பூசிகள் வேலை செய்வது போலவே mRNA தடுப்பூசியும் நோய் எதிர்ப்பு சக்தியை தூண்டிவிட்டு உடலை வைரஸில் இருந்து இயற்கையாக எதிர்க்கும் ஆற்றலை பலப்படுத்தும். பொதுவாகவே தடுப்பூசிகளில் இறந்த அல்லது பலவீனமான வைரஸ் சேர்க்கப்பட்டு அதன் வழியாக நோய் எதிர்ப்பு சக்தி தூண்டப்படும். ஆனால் mRNA தடுப்பூசி வேறு விதமாக செயல்படும்.
Also Read : அடிக்கடி தொற்று நோய்களுக்கு ஆளாக்கும் பலவீனமான நோய் எதிர்ப்பு மண்டலம் : இதற்கு நீங்கள் செய்ய வேண்டியது என்ன..?
mRNA தடுப்பூசி உடலில் செலுத்தப்பட்ட பிறகு, புரத செல்லை உருவாக்க மற்ற இம்யூன் செல்களுக்கு அல்லது கொரோனா வைரஸ் ஸ்பைக் புரதத்தில் உருவாக்குவதற்காகத் தூண்டப்படும். இந்த புரத செல், உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கும் ஆக்டிவ் ஆக இருக்கும் செல்களுக்கு தகவல் அனுப்பும். நோய் எதிர்ப்பு சக்தி செல்கள் இந்த ஸ்பைக் புரோட்டீனை அடையாளம் கண்டு வைரசுக்கு எதிராக ஆன்டிபாடிகளை உருவாக்கும். mRNA தடுப்பூசியில், DNA செல்கள் RNA செல்களாக மாறி, வைரசை எதிர்க்கும்.
இந்தியாவின் முதல் mRNA வைரஸ்
பூனாவில் இருக்கும் ஜெனோவா பயோஃபார்மா, இந்தியாவின் முதல் mRNA தடுப்பூசியை உருவாக்கி, தற்போது டிரையல் நடத்தி வருகிறது. தற்போதைய நிலவரப்படி, மனிதர்கள் மீது டிரையல் 2 கட்டங்களைக் கடந்துள்ளது. அதைத் தொடர்ந்து, இந்த சோதனை முயற்சியின் தரவுகளை உரிய அதிகாரத்திடம் சமர்ப்பிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளது.
Also Read : மருந்துகளால் அழிக்க முடியாமல் பலம்பெறும் பாக்டீரியாக்கள்..
ஜெனோவ பயோஃபார்மாகியூட்டிக்கல்ஸ் நிறுவனத்தின் தலைவரான மருத்துவர் சஞ்சய் சிங், “தற்போது II மற்றும் III கட்டங்களுக்கான சோதனைகள் முடிந்துவிட்டன. II ஆம் கட்ட சோதனைகளின் முடிவை சமர்ப்பித்துவிட்டோம். மூன்றாம் கட்ட சோதனை 4000 நபர்களிடம் மேற்கொள்ளப்பட்டது. அதை சமர்ப்பிக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளோம்” என்று கூறினார்.
Also Read : கொரோனா பாதிப்பில் இருந்து மீண்டவர்களுக்கு மனநல பாதிப்புகள் ஏற்படலாம் - ஆய்வில் தகவல்
இந்த தடுப்பூசியில் லிபிட்ஸ் மற்றும் என்சைம்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். மேலும், இந்த தடுப்பூசிக்கான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இந்த தடுப்பூசி கிடைக்கிறதா இல்லையா என்பது இதன் மூலப்பொருட்கள் இறக்குமதி சார்ந்தே இருக்கும் என்பதையும் வலியுறுத்தினார். இந்தியாவில் உற்பத்தியாகும் இந்த mRNA தடுப்பூசி, மற்ற நிறுவனங்களில் mRNA தடுப்பூசிகளை விட விலை மலிவாக இருக்கும் என்றும் தெரிவித்தார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.