Home /News /lifestyle /

இந்தியாவில் தயாரிக்கப்படும் கர்ப்பவாய் புற்றுநோய் தடுப்பூசி அறிமுகம் : அதன் பயன்பாடுகளும்... தேவைகளும்...

இந்தியாவில் தயாரிக்கப்படும் கர்ப்பவாய் புற்றுநோய் தடுப்பூசி அறிமுகம் : அதன் பயன்பாடுகளும்... தேவைகளும்...

இந்தியாவில் தயாரிக்கப்படும் கர்ப்பவாய் புற்றுநோய் தடுப்பூசி அறிமுகம்

இந்தியாவில் தயாரிக்கப்படும் கர்ப்பவாய் புற்றுநோய் தடுப்பூசி அறிமுகம்

சீரம் டெக்னாலஜி தலைவரான பூனாவாலா இதைப் பற்றி கூறுகையில் இந்த ஆண்டின் இறுதிக்குள் தடுப்பூசி பொதுமக்களுக்கு கிடைக்கும் என்று தெரிவித்திருந்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
தீவிரமான உடல் நலக் கோளாறுகள் மற்றும் உடல் கொல்லி நோய்களைப் பொறுத்தவரை, தடுப்பூசிகள் என்பது மிகவும் குறைவு. அதுவும், கேன்சருக்கு தடுப்பூசி என்பதே கிடையாது என்ற நிலை இருந்து வந்தது. தொடர்ச்சியான மருத்துவ ஆய்வுகள் மற்றும் கண்டுபிடிப்புகள், கேன்சருக்கு தடுப்பூசியை உருவாக்கியுள்ளது.

பெண்களை அதிகம் பாதிக்கும் கர்ப்பவாய் புற்றுநோய், அதாவது செர்விக்கல் கேன்சருக்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த தடுப்பூசி, இந்தியாவில், உள்நாட்டு தயாரிப்பாகவே ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. செர்விக்கல் கேன்சர் தடுப்பூசி இன்று, ஆகஸ்ட் 1, 2022 அன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டது. இதைப் பற்றிய முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

பெண்களை பாதிக்கும் செர்விக்கல் கேன்சர்

கர்ப்பவாய் புற்றுநோய் என்பது இந்தியாவில் பெண்களை பாதிக்கக்கூடிய இரண்டாவது புற்றுநோய் வகைகளில் இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இந்த புற்றுநோய் 15 வயது முதல் 44 வயது வரை உள்ள அனைத்து பெண்களையும் பாதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே உரிய நேரத்தில் இந்த புற்றுநோய் தடுப்பூசையை செலுத்திக்கொண்டால் கர்ப்பவாய் புற்று நோயை கிட்டத்தட்ட அகற்றிவிடமுடியும்.

சீரம் இன்ஸ்டியூட்டின் முயற்சி

பல வகையான புற்றுநோய்களில், பெண்களின் கர்ப்பப்பையை பாதிக்கும் புற்றுநோயை தடுக்கலாம். கர்ப்பவாய் புற்றைத் தடுக்கும் முயற்சியில் ஈடுபட்ட மருத்துவ ஆய்வாளர்கள் வெற்றி கண்டுள்ளனர். முதன்முதலாக உள்நாட்டிலேயே கேன்சரை தடுக்கும் குவாட்ரிவலன்ட் ஹியூமன் பாபிலோமா வைரஸ் (qHPV) தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, மருத்துவ வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாகும்.

qHPV தடுப்பூசி ஆயிரம் மடங்கு அதிக அளவுக்கு நோய் எதிர்ப்பு சக்தி ரெஸ்பான்சை உடலில் ஏற்படுத்துகிறது என்பதை அதிகாரிகள் கூறியதிலிருந்து தெரிந்து கொள்ள முடிகிறது.



qHPV அறிமுக நிகழ்வு

கர்ப்பவாய் புற்றுநோய் தடுப்பூசி அறிமுகம் செய்யப்பட்ட நிகழ்வில் பேசிய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறை யூனியன் மினிஸ்டர் ஆன ஜீத்தேந்திர சிங், இந்த தடுப்பூசி கண்டுபிடித்ததை அறிவித்து மிகவும் குறைந்த விலையில் இது மக்களுக்கு கிடைக்கும் என்பதை அரசாங்கம் உறுதி செய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.

ஆய்வகத்தில் தடுப்பூசி சார்ந்த அறிவியல் பூர்வமான அனைத்து செயல்பாடுகளும் முடிந்துவிட்ட நிலையில், அடுத்ததாக பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

பெண்களே உடல் நலத்தை பாதுகாக்க உதவும் இந்த 5 ஆப்ஸ் பற்றி தெரியுமா? 

வருமுன் காப்பது நல்லது என்பதை எப்போதும் பின்பற்ற வேண்டும் என்பதை, கோவிட் தொற்றுக்கு எதிராக எவ்வாறு விழிப்புணர்வு ஏற்பட்டு பின்பற்றினார்களோ, அதேபோல உயிர்கொல்லி நோய்களுக்கு எதிராகவும் விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார். ஆயுஷ்மான் பாரத் உள்ளிட்ட வருமுன் காக்கும் சுகாதாரத் திட்டங்கள் இதற்கு உதவியாக இருக்கிறது; பயோ டெக்னாலஜி துறை இதை சாத்தியப்படுத்துவதில் துணை நின்றுள்ளது என்றும் அவர் பாராட்டினார். மற்ற தடுப்பூசிகளுடன் ஒப்பிடும் பொழுது சர்விகல் கேன்சருக்கான தடுப்பூசி குறைந்த விலையிலேயே இருக்கும் என்பதும் உறுதி சஐயப்பட்டது.



பயோடெக்னாலஜி துறை செயலாளரான ராஜேஷ் கோகுலே இதைப் பற்றி கூறுகையில். ‘இந்த தடுப்பூசியை அறிமுகம் செய்வதற்கு உதவியாக பரிசோதனை முயற்சியில் 2000க்கும் மேற்பட்ட வாலன்டியர்கள் கலந்து கொண்டனர்’ என்று கூறினார்.

சிஎஸ்ஐஆர், டைரக்டர் ஜெனரலான மருத்துவர் என். கலைச்செல்வி ‘மருத்துவ ஆய்வு உலகில் இது மிகப்பெரிய மைல்கல்லாக இருக்கும்; மற்றும் இது இந்த முயற்சி மேலும் பல அளவுகளில் தொடரும்’ என்று நம்பிக்கையுடன் கூறினார்.

சீரம் டெக்னாலஜி தலைவரான பூனாவாலா இதைப் பற்றி கூறுகையில் இந்த ஆண்டின் இறுதிக்குள் தடுப்பூசி பொதுமக்களுக்கு கிடைக்கும் என்று தெரிவித்திருந்தார். இந்த தடுப்பூசிகள் அனைவருக்குமே பயனுள்ளதாக இருக்கும் என்ற நிலையில், தடுப்பூசி முதலில் அரசாங்கத்தின் சேனல்கள் வழியே அறிமுகம் செய்யப்படும் என்றும், அதற்கு பிறகு தனியார் நிறுவனங்கள் அல்லது மருத்துவமனைகள் வழியே வழங்கப்படலாம் என்பதையும் அவர் கூறினார்.

பெண்ணோயியல் புற்றுநோயால் அதிகரிக்கும் கருவுறுதல் பிரச்சனைகள் : சிகிச்சை முறை என்ன..?

இந்தியாவில் 20 கோடி டோஸ்களுடன் அறிமுகம் செய்ய இருப்பதாக அவர் உறுதியளித்தார். அது மட்டுமில்லாமல் இந்தியாவில் செர்விக்கல் புற்றுநோய் தடுப்பூசியின் தேவை தீர்ந்த பிறகு தான், வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய இருப்பதாகக் கூறினார்.

இந்த விலை, தோராயமாக, ரூ.200 முதல் ரூ.400 வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Cervical cancer, Vaccin

அடுத்த செய்தி