NetraSuraksha ஆன்லைன் சுய பரிசோதனையை இங்கே எடுத்துக் கொள்ளுங்கள்
இந்தியாவில் நீரிழிவு (சர்க்கரை) நோய் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி அதிகரித்து வருகிறது.சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பான அட்லஸ் 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி இந்தியாவின் வயது வந்தோரில் சுமார் 74 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயாளிகளாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.இந்த எண்ணிக்கை 2030ல் 93 மில்லியனாகவும், 2045ல் 124 மில்லியனாகவும் உயரும் என்றும் அந்த அமைப்பு கணித்துள்ளது.
நீரிழிவு நோயின் மிகவும் ஆபத்தான செயல்களில் ஒன்று நீரிழிவு ரெட்டினோபதி ஆகும். AIIMS, ஹைதராபாத் பல்கலைக்கழகம், பார்வையின்மை மற்றும் பார்வைக் குறைபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான தேசிய திட்ட அமைப்பு ஆகியவை சேர்ந்து இந்தியாவில் உள்ள 21மாவட்டங்களில் நடத்தப்பட்ட ஆய்வில், நீரிழிவு நோயாளிகளில் 17% பேர் ரெட்டினோபதியால் பாதிக்கப்படுகின்றனர். நீரிழிவு ரெட்டினோபதி என்பது ஒரு தந்திரமான நோய். ஆரம்பக்கட்டங்களில் கண்டறியக்கூடிய அறிகுறிகள் எதுவும் இருக்காது, சிலர் படிக்கும் போது சிக்கல் இருப்பதை கவனிக்கிறார்கள். ஆனால் அது வருவதும் போவதுமாக இருக்கிறது.பிந்தைய கட்டங்களில், விழித்திரையில் உள்ள இரத்த நாளங்களில் இரத்தம் வரத் தொடங்குகின்றன, பிறகு மிதக்கும் புள்ளிகளை உருவாக்குகின்றன, மேலும் சில தீவிர நிகழ்வுகளில், மொத்தமாக பார்வையும்2 போகிறது.
தேசிய கண் நிறுவனம் கூறியபடி (அமெரிக்க தேசிய சுகாதார நிறுவனங்களின் ஓன்று)2 நீரிழிவு நோயினால் உடல் முழுவதும் உள்ள இரத்த நாளங்களில் பாதிப்பு ஏற்படுகிறது. கண்களில் உள்ள இரத்த நாளங்கள் சேதமடையும் போது, அவை இரத்தப்போக்கு வழிவகுக்கும், அல்லது சில இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படும். நீரிழிவு ரெட்டினோபதி நீரிழிவு மாகுலர் எடிமாவுக்கும் (Diabetic Macular Edema) வழிவகுக்கும் - இது நீரிழிவு நோயாளிகளில் 15-யில் ஒருவருக்கு ஏற்படும், அதோடு மங்கலான பார்வைக்கு வழிவகுக்கும். நீரிழிவு ரெட்டினோபதியானது விழித்திரையிலிருந்து அசாதாரண இரத்த நாளங்கள் வளரவும், கண்ணிலிருந்து திரவம் வெளியேறுவதைத் தடுக்கவும் காரணமாக அமைகிறது. இது ஒரு வகையான கிளௌகோமாவை ஏற்படுத்துகிறது, இது பார்வை இழப்பு ஏற்பட வழிவகுக்கிறது.
நாம் இந்த எண்களை சுருக்கினால், 2021 இல் மட்டும் 12.5 மில்லியன் மக்கள் நீரிழிவு ரெட்டினோபதியால் பாதிக்கப்படலாம் என்று நங்கள் கணித்துள்ளோம்.
இந்த எண்ணிக்கை அச்சத்தை உண்டாக்கும் போது, இந்த நோய் தன்னை ஜெயிக்க முடியாது. நீரிழிவு ரெட்டினோபதியானது, வழக்கமான கண் பரிசோதனை மற்றும் சில வாழ்க்கைமுறை மாற்றங்களின் மூலம் முற்றிலும் தடுக்கக்கூடியது. இது பல நாடுகளில் முறையான ஸ்கிரீனிங் மூலம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. உழைக்கும் மக்களின் பார்வை இழப்புக்கு நீரிழிவு ரெட்டினோபதி முக்கிய காரணமாக இல்லை.உண்மையில், வேல்ஸில், வழக்கமான ஸ்கிரீனிங் செயல்படுத்தப்பட்டதிலிருந்து வெறும் 8 ஆண்டுகளில் பார்வைக் குறைபாட்டிற்கான புதிய சான்றிதழ் பெற்ற நிகழ்வுகள் 40-50% வரை குறைந்துள்ளன.
இதன் காரணமாக தான் Network18 -யானது , நோவார்டிஸ் நிறுவனத்துடன் இணைந்து 'நேத்ரா சுரக்ஷா'(Netra Suraksha) என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது, இது இந்த நோய்க்கு எதிரான விழிப்புணர்வை அதிகரிக்கவும், மேலும் இந்த நோயை சிறப்பாக எதிர்த்துப் போராடுவதற்காக இந்திய மருத்துவ சமூகம், அதன் சிந்தனையாளர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்களுடன் இணைந்து பயனுள்ள திட்டத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இது நவம்பர் 27, 2021 அன்று தொடங்கப்பட்டது. இந்த முயற்சியானது நீரிழிவு ரெட்டினோபதி நோய் குறித்து தொடர் வட்டமேசை விவாதத்துடன் இந்த முயற்சி தொடங்கியது.அதில் முதலாவது விவாத நிகழ்ச்சி. அதே நாள் மாலை 6 மணிக்கு CNN news18 இல் ஒளிபரப்பப்பட்டது. இதை நீங்கள் YouTube, News18.com மற்றும் Facebook- யில் பார்க்கலாம்.இந்த உரையாடலின் நோக்கம்,சரியான நேரத்தில் தடுத்தல் மற்றும் சிகிச்சைகள் கிடைப்பது குறித்தும் கவனம் செலுத்தும்.இதைத் தொடர்ந்து வரும் வாரங்களில் மேலும் இரண்டு வட்டமேசை விவாதங்கள் நடைபெறும்.நோயின் பல்வேறு அம்சங்களை விளக்குவதற்கு விளக்கமான வீடியோக்கள் மற்றும் கட்டுரைகளைப் பயன்படுத்துவோம், மேலும் நீரிழிவு நோயாளிகள் தங்களுக்கு சாதகமான முறையில் நோயை கட்டுப்படுத்துவதற்கு ஊக்குவிப்போம்.
அங்கு இருந்து பெறப்படும் வார்த்தைகள் மூலமும், இந்த நோயை எளிதாகக் கட்டுப்படுத்துவது பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதன் மூலமும், இந்த பயங்கரமான அச்சமூட்டும் எண்களைக் கட்டுப்படுத்த எங்களால் முடிந்ததைச் செய்வோம்.
நீங்கள் இங்குதான் வருகிறீர்கள் என்றால். இன்று, நீங்கள் இந்தியாவில் நகர்ப்புறத்தில் வசிப்பவராக இருந்தால், உங்கள் நண்பர்கள், சக ஊழியர்கள் மற்றும் அன்புக்குரியவர்களின் வட்டத்தில் உள்ள ஒருவர் நீரிழிவு நோயாளியாக இருப்பார்.இந்த முன்முயற்சியைப் பற்றி அவர்களிடம் பேசுங்கள் (அல்லது இந்தக் கட்டுரையைப் பகிரவும்!), கடைசியாக அவர்களின் கண்கள் எப்போது பரிசோதிக்கப்பட்டது என்று அவர்களிடம் கேளுங்கள்.சில மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டது என்றால், நீரிழிவு ரெட்டினோபதியின் சுய பரிசோதனையை இங்கே (ஹைப்பர்லிங்க்) செய்துகொள்ளவும், மேலும் தங்கள் மருத்துவரைச் சந்தித்து ஒரு எளிய, வலியற்ற கண் பரிசோதனையை செய்ய அவர்களைக் கேட்டுக் கொள்ளுங்கள்.
நீங்கள் அங்கு இருக்கும்போது, உங்களையும் சோதித்து கொள்ளுங்கள். சர்வதேச நீரிழிவு கூட்டமைப்பு அட்லஸ் 2021-கூற்றின் படி, இந்தியாவில் 39.3 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு அதை கண்டறியாத நோயாளிகளாக உள்ளனர். உங்களை நீங்கள் இன்னொரு புள்ளிவிவரமாக ஆக்கிவிடாதீர்கள்.NetraSuraksha -முன்முயற்சி பற்றிய கூடுதல் அறிவிப்புகளுக்கு News18.com-மை பின்தொடரவும், மேலும் நீரிழிவு ரெட்டினோபதிக்கு எதிரான இந்தியாவின் போராட்டத்தில் உங்களை ஈடுபடுத்திக்கொள்ள தயாராகுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Diabetics, Health, Healthy Lifestyle