ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்புடையோர் உப்பை எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும்?

உப்பை அதிகம் சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் ஆபத்து பலருக்கும் தெரிவதில்லை என்கிறார் ஆய்வாளர்.

news18
Updated: August 10, 2019, 1:19 AM IST
ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்புடையோர் உப்பை எவ்வளவு எடுத்துக்கொள்ள வேண்டும்?
உப்பு
news18
Updated: August 10, 2019, 1:19 AM IST
இந்தியர்களில் பெரும்பாலானோர் உயர் இரத்த அழுத்தம் மற்றும் சிறுநீரக பாதிப்பு ஆகியவற்றிற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். இதற்கு இந்தியர்கள் அதிக உப்பு சேர்த்துக் கொள்வதே காரணம் என்கிறது மெடிக்கல் ஜர்னல் எல்செவியர் வெளியிட்டுள்ள ஆய்வு.

ஆய்வில் 200 பேரை தேர்வு செய்து நான்கு பிரிவுகளாகப் பிரித்துள்ளது. அவர்களில் டைப் 2 நீரிழிவு நோய், நீரிழிவு நோய் , சிறுநீரக பாதிப்பு, மற்றும் உயர் இரத்த அழுத்தம் என நான்கு நோய்களைக் கொண்டோரை பிரித்துள்ளது. அவர்களுக்கு மருத்துவ ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. அதில் அவர்கள் உணவில் சேர்த்துக் கொள்ளும் உப்பின் அளவை 24 மணி நேரத்திற்கு பிறகு வரும் சிறுநீர் மூலம் கணக்கிட்டுள்ளது.

அதில் 14 சதவீதத்தினர் மட்டுமே உலக சுகாதார அமைப்பு கூறிய அளவின்படி ஆறு கிராம் உப்பை சரியாக எடுத்துக்கொள்கின்றனர். மீதம் 19 சதவீதத்தினர் 18 கிராம் உப்பும், 33.4 % பேர் 12-18 கிராம் உப்பும் மற்றும் 33.5 சதவீதத்தினர் 6 - 12 கிராம் அளவில் ஒரு நாளைக்கு உப்பின் அளவை சேர்த்துக்கொள்வதாகக் கண்டறியப்பட்டுள்ளன.உயர் இரத்த அழுத்தம் கொண்டோர் மற்றும் சிறுநீரக பாதிப்புகளைக் கொண்டோர் உப்பின் அளவை கொஞ்சமும் குறைக்கவில்லை என ஆய்வாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த இரு நோய்களையும் கொண்ட 12 சதவீதத்தினர் 18 கிராம் உப்பை ஒரு நாளைக்கு எடுத்துக்கொள்வதாக ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

அவர்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 3-4 கிராம் உப்பு மட்டுமே உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும் என்கிறார் ஆய்வாளர் விஜய் விஷ்வநாதன். பலருக்கும் அதன் ஆபத்துக்குறித்துத் தெரிவதில்லை என்கிறார் அவர்.

உப்பு அதிகம் சேர்த்துக்கொள்வதால் இரத்த அழுத்தம், பக்கவாதம் , புற்றுநோய், இதயம் மற்றும் சிறுநீரக பாதிப்பு போன்ற ஆபத்தான நோய்களை வாழ்நாள் முழுவதும் அனுபவிக்க நேரிடும் என்றும் ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

பார்க்க:

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்தின் கதை

First published: August 10, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...