உண்ட களைப்பு தொண்டனுக்கும் உண்டு என்பது நாம் அனைவரும் அறிந்ததே. பொதுவாக மத்தியம் சாப்பிட்டப்பின் குட்டி தூக்கம் போட வேண்டும் என பலரும் தோன்றுவது இயல்பே. ஆனால், கம்பேனியில் வேலை செய்யும் நபர்கள் மத்திய உணவு சாப்பிட்டப் பின் உடனே வேலையை தொடங்கத்தானே வேண்டும்.
ஊழியர்களின் இந்த மனக்குறையை போக்கும் விதமாக, பெங்களூரைச் சேர்ந்த ஸ்டார்ட் அப் நிறுவனம் தனது ஊழியர்கள் தினமும் மத்தியம் 2 மணி முதல் 2.30 குட்டித் தூக்கம் எனப்படும் Nap எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கியுள்ளது. பெங்களூரைச் சேர்ந்த வேக்பிட்(Wakefit)என்ற அந்த நிறுவனம் தினசரி 30 நிமிட தூக்கத்தை அனுமதித்ததுடன் இந்த பிரேக் டைம்மில் நிறுவனம் எந்த வேலைத் தொல்லையும் தர மாட்டோம் என உத்தரவாதம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, நிறுவனத்தின் துணை நிறுவனர் சைத்தன்யா ராமலிங்க கௌடா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "ஆறு ஆண்டுகளாக இந்த பிஸ்னஸ்சில் இருக்கும் நாங்கள், மிக முக்கியம் வாய்ந்த விஷயமான மத்திய நேர குட்டித் தூக்கத்தை கண்டுக்கொள்லாமல் விட்டுவிட்டோம். இன்றிலிருந்து இது சரி செய்யப்படுகிறது. நாசா வெளியிட்டுள்ள ஆய்வின்படி, 26 நிமிட குட்டி தூக்கம் என்பது, அந்நபரின் செயல்திறனை 33 சதவீதம் மேம்படுத்தும். இன்றைய காலத்தில் தூக்கத்திற்கு முக்கியத்துவம் தராததால் உடல் நலன் மிக மோசமான பாதிப்பை சந்திக்கிறது. இந்த மோசமான சூழலை எங்கள் நிறுவனத்தில் அனுமதிக்க விரும்பவில்லை " தெரிவித்தார்.
இதையும் படிங்க:
ஒரே நாளில் ‘ஓஹோ’ என மாறிய வாழ்க்கை... ஏழை விவசாயிக்கு சுரங்கத்தில் அடித்த ஜாக்பாட்!
இந்தியாவின் பல்வேறு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊழியர்களின் உடல் மற்றும் மன நலன் மீது அக்கறை காட்டி வருகிறது.அன்மையில், சிரோதா நிறுவனத்தின் சிஇஓ, நிறுவனத்தின் வேலை தொடர்பான குறுஞ்செய்திகளை மாலை 6 மணிக்கு மேல் அனுப்பக் கூடாது என உத்தரவிட்டார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.