• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • கெட்ட கொழுப்புகளை நீக்க உதவும் பூண்டு : மேலும் பல நன்மைகளை வெளியிட்ட ஆய்வு..

கெட்ட கொழுப்புகளை நீக்க உதவும் பூண்டு : மேலும் பல நன்மைகளை வெளியிட்ட ஆய்வு..

பூண்டு

பூண்டு

பூண்டில் உள்ள ஆர்கானிக் சல்பர் கலவையான அல்லிசின் எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவுவதாக கூறப்படுகிறது.

  • Share this:
நம் உடலில் LDL மற்றும் HDL ஆகிய 2 வகையான கொலஸ்ட்ரால் இருக்கிறது. அடர்த்தி குறைந்த கொழுப்பு புரதமான் LDL கெட்ட கொலஸ்ட்ரால் என்றும், உயர் அடர்த்தி கொழுப்புப்புரதமான HDL நல்ல கொலஸ்ட்ரால் என்றும் குறிப்பிடப்படுகிறது. கொலஸ்ட்ரால் அளவுகள் எப்போதும் கட்டுப்பாட்டில் இருப்பதை உறுதி செய்வது மிகவும் முக்கியமான ஒன்று. ஏனென்றால் ரத்தத்தில் அதிக அளவு கெட்ட கொழுப்பு (LDL) இருப்பது இதய நோய் வருவதற்கான அபாயத்தை அதிகரிக்கும்.

கொலஸ்ட்ரால் அளவை குறைக்க அல்லது கட்டுப்படுத்த பல உணவுகள் உள்ளன. இவற்றில் பல நிபுணர்களலால் பரிந்துரைக்கப்படும் முக்கிய மூலிகை பூண்டு ஆகும். ஈரானில் நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றில் பூண்டு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து எடுத்து கொள்வதால், ஹைப்பர்லிபிடெமியா நோயாளிகளின் கொழுப்பு அளவுகள், ஃபைப்ரினோஜென் மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது கண்டறியப்பட்டது.

முக்கியமாக பூண்டில் உள்ள ஆர்கானிக் சல்பர் கலவையான அல்லிசின் எனப்படும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைக்க உதவுவதாக கூறப்படுகிறது. பூண்டு கொண்டுள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் பிளட் தின்னிங் (blood thinning) பண்புகள் இதய நோய்களைக் கட்டுப்படுத்துவதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். அதே போல பூண்டு சாறு கொலஸ்ட்ரால் அளவை 7% வரை குறைக்கும். ஹைப்பர் கொலஸ்டிரோலீமியா உள்ளவர்கள் தொடர்ந்து பூண்டு சாறு குடித்து வந்ததில் அவர்களின் LDL கொழுப்பு சுமார் 10% வரை குறைந்துள்ளதாக ஆய்வு ஒன்று கூறுகிறது.



HDL கொலஸ்ட்ரால் :

LDL மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் அளவை பூண்டு குறைக்க உதவும் அதே நேரத்தில், HDL அளவும் இதனால் கணிசமாக உயர்வதை காண முடிவதாக ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு ஆய்வில் சுமார் 6 வாரங்களுக்கு பூண்டு சப்ளிமெண்ட்ஸ் (garlic supplements) எடுத்து கொண்ட சிலருக்கு அவர்களது HDL அளவு 15% வரை உயர்ந்ததை கண்டதாக ஆய்வாளர்கள் கூறி இருக்கின்றனர்.

முகச்சுருக்கம் மற்றும் வயதான தோற்றத்தை போக்க உதவும் மேஜிக் ஆயில் : எப்போது , எப்படி தடவ வேண்டும்..?

பரிந்துரைக்கப்பட்ட அளவில் தொடர்ந்து 4 மாதங்கள் பூண்டு சாறை எடுத்து வந்தவர்களின் பிளட் லிப்பிட் ப்ரொஃபைல் ஒட்டுமொத்தமாக மேம்படுத்தப்பட்டதாகவும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். கொலஸ்ட்ரால் மீது பூண்டு ஏற்படுத்தும் நல்ல விளைவுகளை பெற வேண்டும் என்றால் உணவில் தொடர்ந்து பூண்டை சேர்த்து வர வேண்டும். ஏனென்றால் பூண்டு எடுப்பதை நிறுத்திய 6 மாதங்களுக்கு பிறகு சோதனை செய்யப்பட்ட பலருக்கு கொலஸ்ட்ரால் அளவுகள் கட்டுப்பாட்டில் இல்லாதது கண்டறியப்பட்டதாகவும் ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.



கொலஸ்ட்ரால் அளவுகளை பராமரிக்க உதவுவதோடு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க செய்கிறது. அழற்சி எதிர்ப்பு மருந்தாக வேலை செய்கிறது மற்றும் ஆரோக்கியமான முடி மற்றும் சரும பராமரிப்பிற்கு உதவுகிறது. வெறும் வயிற்றில் பச்சை பூண்டை சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும் LDLகொழுப்பின் அளவைக் குறைக்கவும், உயர் இரத்த அழுத்தம் மற்றும் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தவும் உதவி செய்கிறது.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: