இந்தியர்களுக்கு அலுவலகத்தில் தூக்க அறை அவசியமா ?

இந்தியர்களில் 20 சதவீதத்தினர் எல்லா நேரமும் தூங்கியபடியே இருக்கின்றனர்.

இந்தியர்களுக்கு அலுவலகத்தில் தூக்க அறை அவசியமா ?
அலுவலகம்
  • News18
  • Last Updated: August 22, 2019, 10:32 PM IST
  • Share this:
பெங்களூருவைச் சேர்ந்த வேக்ஃபிட் நிறுவனம் தூக்கத்திற்கான தீர்வை கண்டறியும் ஸ்டார்ட் அப் நிறுவனமாகும். சமீபத்தில் நடத்திய ஆய்வில் அலுவலகத்தில் தூக்க அறை என்பது ஊழியர்களின் தேவை என கூறியுள்ளது. 

ஆய்வில்  தங்கள் அலுவலகத்தில் தூக்க அறை இல்லை என்று தெரிவித்துள்ளனர். அதில் 86 சதவீதத்தினர் தூக்க அறை இருந்தால் வேலையில் நல்ல முன்னேற்றம் காணமுடியும் எனவும் கருத்து தெரிவித்துள்ளனர்.

அதாவது இந்த தூக்க அறை என்பது நீண்ட நேரம் தூங்கிக் கொள்வது அல்ல. சற்று தூக்கம் வருவதுபோல் இருந்தால் சில நிமிடங்கள் தூங்கி எழுவது அல்லது ஓய்வு எடுக்கவுமே இந்த அறை.


ஆனால் இந்திய நிறுவனங்களைப் பொருத்தவறை அலுவலகத்தில் தூங்குவது என்பதே அபத்தமான செயலாகப் பார்க்கட்டுகிறது எனக் கூறியுள்ளது. மேலும் இந்த சூழலை ஊக்குவிக்கும் விதமாகவும் நிறுவனங்கள் கடுமையாக செயல்படுவதாக தெரிவித்துள்ளது. மேலும் இவ்வாறு செய்வதால் உற்பத்தி திறன் அதிகரிக்கும் என்பது நிறுவனங்களின் எண்ணமாக இருக்கிறது.வேக்ஃபிட் ஆய்வில் 41 சதவீதம் பேர் பணி ரீதியான மன அழுத்தம், சரியான கால அளவில் தூக்கமின்மை போன்ற விஷயங்களால் பாதிக்கப்படுகின்றனர். 31 சதவீதத்தினர் பதட்ட நிலையில் இருக்கின்றனர். 20 சதவீதத்தினர் எல்லா நேரமும் தூங்கியபடியே இருக்கின்றனர். 51 சதவீதத்தினர் மந்தமான நிலையிலேயே சுற்றித் திரிகின்றனர் என்று கூறியுள்ளது.மேலும் அதில் 80 சதவீதம் ஊழியர்கள் அதிகபட்சமாக வாரத்தில் மூன்று நாட்கள் பணி இடையில் தூக்கத்தை உணர்வதாகத் தெரிவித்துள்ளனர்.

எனவே, ஊழியர்கள் பணிகளுக்கு இடையே தூக்கம் வருவதுபோல் உணர்ந்தால் 20-30 நிமிடங்கள் தூங்கி எழுவது மனித உடலுக்கு நல்ல அலாரமாக இருக்கும் என ஆய்வு பரிந்துரைக்கிறது. சத்தான உணவு, உடற்பயிற்சி என ஊக்குவிப்பதை தவிர்த்து தூக்கம் வந்தால் தூங்கிவிடுவதே ஊழியர்களின் உடல் நலத்திற்கு நல்லது என்கிறது. ஆக..கட்டாயம் அலுவலகங்கள் தூக்க அறை வைப்பது ஊழியர்களுக்கு அவசியம் என்கிறது ஆய்வு.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: August 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading