Home /News /lifestyle /

2030-க்குள் உலகளவில் அதிக இதய நோய் இறப்புகளை இந்தியா சந்திக்கும் : எச்சரிக்கும் பிரபல இதய நோய் நிபுணர்!

2030-க்குள் உலகளவில் அதிக இதய நோய் இறப்புகளை இந்தியா சந்திக்கும் : எச்சரிக்கும் பிரபல இதய நோய் நிபுணர்!

இதய நோய்

இதய நோய்

இதய நோய் உருவாக ஆரோக்கியமற்ற உணவுகள், உடல் உழைப்பு இல்லாதது, பல ஆண்டுகளாக தூக்கத்தில் காணப்படும் சிக்கல் அதாவது தூக்கமின்மை, சிகரெட் மற்றும் மது பழக்கம் உள்ளிட்டவை முக்கிய காரணங்களாக இருக்கின்றன.

உலகளவில் இறப்புக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இதய நோய்கள் உள்ளதாக புள்ளிவிவரங்கள் மற்றும் ஆய்வுகள் வெளிப்படுத்தி உள்ளன. சர்வதேச அளவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 18 மில்லியன் மக்கள் இதய நோயால் மரணிப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இதய நோய் உருவாக ஆரோக்கியமற்ற உணவுகள், உடல் உழைப்பு இல்லாதது, பல ஆண்டுகளாக தூக்கத்தில் காணப்படும் சிக்கல் அதாவது தூக்கமின்மை, சிகரெட் மற்றும் மது பழக்கம் உள்ளிட்டவை முக்கிய காரணங்களாக இருக்கின்றன.இந்நிலையில் வரும் 2030-ஆம் ஆண்டுக்குள் உலகிலேயே அதிக இதய நோய் சார்ந்த இறப்புகளை பதிவு செய்யும் நாடாக இந்தியா இருக்க போகிறது என்று நாட்டின் பிரபல இதயநோய் நிபுணர் ஒருவர் எச்சரித்து உள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று இது தொடர்பாக பேசிய புகழ்பெற்ற இதய நோய் நிபுணர் டாக்டர் சி.என்.மஞ்சுநாத், இன்னும் 8 ஆண்டுகளில் உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான இதய நோய் இறப்புகள் என்ற வருத்தமான நிலையை இந்திய எட்டும். அப்போது நாட்டில் நிகழும் 4 மரணங்களில் ஒன்றுக்கு இதய நோய் (CVD - Cardiovascular Disease) காரணமாக இருக்கலாம் என்று மருத்துவர் மஞ்சுநாத் எச்சரித்து உள்ளார்.



'Ensuring Healthy Workforce' என்ற கருப்பொருளில் HAL மருத்துவர்களுக்கான தேசிய மாநாடான 'HAL Medicon 2022'ல்' உரையாற்றிய இதய நிபுணர் மருத்துவர் மஞ்சுநாத், வயதானோர் மட்டுமின்றி இளைஞர்கள் மற்றும் நடுத்தர வயதினரிடையே இதய பிரச்சினைகள் சமீப ஆண்டுகளாக மிகவும் அதிகரித்து கொண்டே வருகின்றன, இது மிகவும் ஆபத்தானது. அதிகரித்து கொண்டே செல்லும் இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள முழுமையான ஒருங்கிணைந்த அணுகுமுறை மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். இதில் மன அழுத்தத்தை நிர்வகித்தல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறை பழக்கங்களை ஏற்படுத்துதல் உள்ளிட்டவையும் அடங்கி இருக்க வேண்டும் என்று ஸ்ரீ ஜெயதேவா இன்ஸ்டிடியூட் ஆப் கார்டியோவாஸ்குலர் சயின்சஸ் அண்ட் ரிசர்ச் இயக்குநரான மஞ்சுநாத் அழைப்பு விடுத்துள்ளார்.

டிமென்ஷியா நோய் என்றால் என்ன..? எதனால் ஏற்படுகிறது..?

இந்தியன் ஹார்ட் அசோசியேஷனின் கூற்றுப்படி மற்ற நாட்டு மக்களை விட இந்தியர்களை இதய நோய்கள் சிறிய இளைய மற்றும் நடுத்தர வயதினரிடையே எச்சரிக்கை இல்லாமல் பெரும்பாலும் தாக்குகின்றன. மேற்கத்திய நாடுகளில் உள்ளவர்களை விட குறைந்தது 10 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியர்கள் இதய நோய்களால் பாதிக்கப்பட்டு வருவதாக சில ஆய்வுகள் கண்டறிந்துள்ளன. இதற்கு உடல் உழைப்பு இன்றி காணப்படும் உட்கார்ந்த வாழ்க்கை முறை, நீரிழிவு நோய், மது மற்றும் புகைபழக்கம் மற்றும் உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்டவை காரணமாக இருப்பதாக சுட்டி காட்டப்பட்டு உள்ளது.



இதய நோய்களில் கோவிட்டின் பங்கு :

கோவிட் நீடித்து காணப்படும் நிலையில் தொற்று துவங்கியது முதல் கடந்த 2 ஆண்டுகளில் இதய பாதிப்புகள் அதிகரித்து உள்ளன. தி லான்செட் ஜர்னலில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், கோவிட்-19 தொற்றுக்கு பிறகு முதல் இரண்டு வாரங்களில் மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் ஆபத்து மூன்று மடங்கு அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்டுள்ளது.

 
Published by:Sivaranjani E
First published:

Tags: Heart disease

அடுத்த செய்தி