பிளாஸ்மா சிகிச்சை முறை இனி இந்தியாவில் இல்லை : என்ன காரணம்..?

பிளாஸ்மா தானம்

எய்ம்ஸ்-ஐ.சி.எம்.ஆர் கோவிட் -19 தேசிய பணிக்குழு மற்றும் சுகாதார அமைச்சகம் ஆகியவை இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளது.

 • Share this:
  கோவிட் தொற்றால் பதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று குணமடைந்தவர்களிட்மிருந்து பெறப்படும் இரத்த பிளாஸ்மாவை பாதிக்கப்பட்ட கொரோனா நோயாளிக்கு செலுத்துவதுதான் இந்த சிகிச்சை. இதனால் தொற்று விரைவில் குணமடையும் எனக் கூறப்பட்டு வந்த நிலையில் அதனால் எந்த பலனும் இல்லை எனக் கூறி இந்த சிகிச்சையை இந்தியா நிறுத்திவிட்டது.

  எய்ம்ஸ்-ஐ.சி.எம்.ஆர் கோவிட் -19 தேசிய பணிக்குழு மற்றும் சுகாதார அமைச்சகம் ஆகியவை இணைந்து இந்த முடிவை எடுத்துள்ளது.

  பிளாஸ்மா என்பது ரத்தத்தின் தெளிவான திரவப் பகுதி. இது, சிவப்பு மற்றும் வெள்ளை ரத்த அணுக்கள், பிளேட்லெட்டுகள் மற்றும் பிற செல்லுலார் கூறுகள் எடுக்கப்பட்ட பின்னரும் இருக்கும். நோய்த்தொற்றிலிருந்து மீண்டு வரும் நோயாளிகளின் ரத்தத்திலிருந்து எடுக்கப்படும் பிளாஸ்மா, நோய்த்தொற்றுக்கு எதிரான ஆன்டிபாடிகளின் மூலமாகும்.  MK Stalin : மாஸ்க் எப்படி போடனும்..? சொல்லிக்கொடுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..

  முதன் முதலில் தி லான்செட் மருத்துவ இதழ் வெளியிட்ட இந்த பிளாஸ்மா சிகிச்சையானது மருத்துவ உலகில் பெரும் வரமாகக் கருதப்பட்டது. இதனால் கொரோனாவை வென்றுவிடலாம் என்று எண்ணியது. ஆனால் எதிர்பார்த்த அளவில் அதன் செயல்பாடுகள் இல்லை. அதோடு இறப்பு விகிதத்தையும் குறைக்கவில்லை என கண்டுபிடித்துள்ளனர். அதோடு பாதிக்கப்பட்ட நோயாளிக்கு குறைந்த நன்மையையே அளிப்பதாக தெரிவிக்கிறது.எனவேதான் இந்த பிளாஸ்மா சிகிச்சை எந்த பலனையும் அளிக்காததால் இந்த சிகிச்சை முறை இந்தியாவில் பலனளிக்கவில்லை என்று கூறி நிறுத்திவிட்டதாகக் கூறியுள்ளது.

   

   
  Published by:Sivaranjani E
  First published: