முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இந்தியாவில் உள்ள டாப் 10 தனியார் புற்றுநோய் சிகிச்சை மையங்களின் பட்டியல்...

இந்தியாவில் உள்ள டாப் 10 தனியார் புற்றுநோய் சிகிச்சை மையங்களின் பட்டியல்...

டாப் 10 தனியார் புற்றுநோய் சிகிச்சை மையங்களின் பட்டியல்

டாப் 10 தனியார் புற்றுநோய் சிகிச்சை மையங்களின் பட்டியல்

NABH மற்றும் JCI போன்ற அங்கீகாரம் பெற்ற பல இந்திய மருத்துவமனைகள் சர்வதேச அளவில் சிறப்பான புற்றுநோய் சிகிச்சை அளிப்பதற்கான பாராட்டைப் பெற்றுள்ளன. எந்த வகையான புற்றுநோயையும் எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான தொழில்நுட்பமும், நவீன நோயறிதல் முறைகளும் உள்ளன.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

புற்றுநோய் என்பது உலகம் முழுவதும் உள்ள மக்களை தீவிரமாக பாதிக்கும் ஒரு நோய். புற்றுநோய் சிகிச்சைக்கான சிறந்த மருத்துவமனை மற்றும் ஆய்வு மையங்களைத் தேடும் நபர்கள் நிறைய உள்ளனர். உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான புற்றுநோயாளிகள் சிகிச்சைக்காக இந்தியாவுக்கு வருகைத் தருகின்றனர்.

பல்வேறு இலவச மற்றும் குறைந்த விலை புற்று நோய் சிகிச்சைகளை வழங்கும் மருத்துவமனைகள் இந்தியா முழுவதும் உள்ளன. அதே போல, புற்றுநோய்க்கான சிறந்த சிகிச்சைகளை தனியார் மருத்துவமனைகளும் வழங்குகின்றன.

NABH மற்றும் JCI போன்ற அங்கீகாரம் பெற்ற பல இந்திய மருத்துவமனைகள் சர்வதேச அளவில் சிறப்பான புற்றுநோய் சிகிச்சை அளிப்பதற்கான பாராட்டைப் பெற்றுள்ளன. எந்த வகையான புற்றுநோயையும் எதிர்த்துப் போராடுவதற்குத் தேவையான தொழில்நுட்பமும், நவீன நோயறிதல் முறைகளும் உள்ளன. மருத்துவமனைகள் வழங்கும் ஸ்கிரீனிங் மற்றும் சிகிச்சைகளும், பராமரிப்பும் சிறப்பாக உள்ளது.

இந்தியாவில் உள்ள டாப் 10 தனியார் புற்றுநோய் மருத்துவமனைகள் பட்டியல் இங்கே...

1. Medanta-The Medicity, குருகிராம், ஹரியானா

புற்றுநோயாளிகளுக்கு உலகத்தரம் வாய்ந்த சிகிச்சையை வழங்கும் இந்தியாவின் சிறந்த புற்றுநோய் மருத்துவமனைகளில் மெடாண்டாவும் ஒன்றாகும். டாக்டர். அசோக் வைத் மற்றும் டாக்டர். ராஜீவ் அகர்வால், ஆகிய இருவரும் மருத்துவமனையில் புற்றுநோயியல் பிரிவில் நிபுணராகவும் உள்ளார்.

புற்றுநோயாளிகளுக்கான சிகிச்சையில் அறுவை சிகிச்சை, கீமோதெரபி, கதிர்வீச்சு சிகிச்சை மற்றும் ஹார்மோன் சிகிச்சை ஆகியவை அடங்கும். Medanta டோமோதெரபி HD என்ற புதிய தொழில்நுட்பத்தையும் அறிமுகம் செய்துள்ளனர். ஹெலிகல் கதிர்வீச்சு தொழில்நுட்பம் மெடுலோபிளாஸ்டோமா மற்றும் கடுமையான நிணநீர் லுகேமியா போன்ற தீவிரமான புற்று கட்டிகளுக்கு குறுகிய காலத்தில் சிகிச்சை அளிப்பதில் நிபுணத்துவம் பெற்றது.

2. அப்பல்லோ புற்றுநோய் சிறப்பு மருத்துவமனை, சென்னை

அப்பல்லோ புற்றுநோய் மையம் இந்தியாவில் உள்ள முன்னணி புற்றுநோய் மருத்துவமனைகளில் ஒன்றாகும். இது NABH ஆல் அங்கீகாரம் பெற்ற புற்றுநோய் சிகிச்சை மையமாகும். 125 க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை மற்றும் கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர்கள் மற்றும் நோயறிதல் ஆலோசகர்கள் உள்ளனர். அனைத்து சமீபத்திய நோயறிதல் சாதனங்கள் மற்றும் கதிரியக்க சிகிச்சை உபகரணங்களையும் கொண்ட இந்தியாவின் முதல் மற்றும் சிறந்த புற்றுநோய் மருத்துவமனைகளில் இதுவும் ஒன்றாகும்.

3. மேக்ஸ் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, டெல்லி

மேக்ஸ் ஸ்பெஷாலிட்டி என்பது டெல்லி மற்றும் குர்கானில் உள்ள இந்தியாவின் சிறந்த புற்றுநோய் மருத்துவமனையாகும். டாக்டர். இந்தியாவில் புற்றுநோய் சிகிச்சையை வழங்கும் சிறந்த ஆலோசகர்களான டாக்டர் ஹரித் சதுர்வேதி மற்றும் டாக்டர் மீனு வாலியா மேக்ஸ் ஹெல்த்கேரில் பணியாற்றுகின்றனர். புற்றுநோய் சிகிச்சையில் கீமோதெரபி, கதிர்வீச்சு அல்லது அறுவை சிகிச்சை ஆகியவை சிகிச்சைகளை வழங்குகிறது.

இந்தியாவில் உள்ள டாப் 10 அரசு புற்றுநோய் மருத்துவமனைகளின் பட்டியல்..

4. கோகிலாபென் திருபாய் அம்பானி மருத்துவமனை & மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம்

1999 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட கோகிலாபென் மருத்துவமனை, புற்றுநோயாளிகளுக்கு பலவிதமான சிகிச்சைகள், பராமரிப்பு மற்றும் அறுவை சிகிச்சைகளை வழங்குகிறது. டாக்டர். ராஜேஷ் மிஸ்திரி, டாக்டர்.அர்ச்சனா ஷெட்டி போன்ற முழுநேர புற்றுநோயியல் நிபுணர்கள் தீவிரமான பாதிப்படைந்த நோயாளிகளுக்கும் சிகிச்சை அளிக்கின்றனர்.

இன்றுவரை, மருத்துவமனை 6,300 க்கும் மேற்பட்ட புற்றுநோய் அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளனர். மருத்துவமனையில் 24 மணி நேரமும் செயல்படும் வசதிகளுடன் கூடிய மருந்தகம், பூஜை அறை, பயண மேசை மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் தங்கும் வசதிகளும் உள்ளது.

5. ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை, சென்னை

ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை 1992 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. இது இந்தியாவின் சிறந்த புற்றுநோயியல் மருத்துவமனைகளில் ஒன்றாகும். இந்தியாவில் சிறந்த புற்றுநோய் சிகிச்சையை வழங்கும் அனுபவம் வாய்ந்த மருத்துவர்களின் குழு இங்கே உள்ளது. இது கீமோதெரபி, இலக்கு சிகிச்சை, ஹார்மோன் சிகிச்சை மற்றும் நோயெதிர்ப்பு சிகிச்சை ஆகியவற்றை வழங்குகிறது. டாக்டர்.பெல்லார்மைன் வின்சென்ட் லாரன்ஸ் மற்றும் டாக்டர் ரஜினி குப்தா ஆகியரோ ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனையில் மருத்துவ புற்றுநோயியல் துறையில் அனுபவம் வாய்ந்த மூத்த ஆலோசகர்களாக உள்ளனர்.

புற்றுநோய்க்கான சிகிச்சைகள் என்னென்ன..? யாருக்கு என்ன சிகிச்சை சிறந்தது..?

6. இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனை, டெல்லி

இந்திரபிரஸ்தா அப்பல்லோ மருத்துவமனை இந்தியாவின் முன்னணி சிறந்த புற்றுநோய் மருத்துவமனைகளில் ஒன்றாகும். அப்பல்லோ கேன்சர் இன்ஸ்டிடியூட் சிறந்த புற்றுநோயியல் நிபுணர்களின் பெரிய நெட்வொர்க்கைக் கொண்டுள்ளது. ரோபோடிக் அறுவை சிகிச்சை, புற்றுநோய் பரிசோதனை திட்டம், எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை ஆகிய நவீன சிகிச்சைகளை இந்த மருத்துவமனை வழங்குகிறது.

7. BLK சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை

BLK சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை டெல்லியின் மிகப்பெரிய தனியார் மருத்துவமனையாகும். மருத்துவமனையில் 650 படுக்கைகள் மற்றும் 150 க்கும் மேற்பட்ட சிறப்பு நிபுணர்கள் உள்ளனர். புற்றுநோய் சிகிச்சைக்கான சிறந்த உள்கட்டமைப்பு மற்றும் அதிநவீன தொழில்நுட்பத்தை BLK மருத்துவமனை கொண்டுள்ளது. மருத்துவமனை கீமோதெரபி, இலக்கு சிகிச்சைகள் மற்றும் ஹார்மோன் சிகிச்சையை வழங்குகிறது. மருத்துவமனையில் ஐஎம்ஆர்டி, ஐஜிஆர்டி மற்றும் டோமோ தெரபி உள்ளிட்ட அதிநவீன தொழில்நுட்பங்களும் உள்ளன. மருத்துவமனை PET CT ஸ்கேன் மற்றும் டோமோதெரபி வசதிகளையும் வழங்குகிறது.

8. குர்கான் ஆர்ட்டெமிஸ் மருத்துவமனை

ஆர்ட்டெமிஸ் மருத்துவமனை, உலகத் தரம் வாய்ந்த உபகரணங்கள் மற்றும் வசதிகளுடன் நன்கு பயிற்சி பெற்ற புற்றுநோயியல் நிபுணர்களின் அனுபவமிக்க குழுவுடன் இயங்குகிறது. நோயாளிகளுக்கான பல விரிவான புற்றுநோய் சிகிச்சை முறைகளை வழங்கும் ஆர்ட்டெமிஸ் புற்றுநோய் மையம் இந்தியாவின் முன்னணி புற்றுநோய் மருத்துவமனைகளில் ஒன்றாகும்.

9. Gleneagles குளோபல் மருத்துவமனை, சென்னை

Glennigles Global Hospital என்பது 1000 படுக்கைகள் மற்றும் சிறந்த புற்றுநோய் மருத்துவமனைகளில் ஒன்றாகும். மருத்துவ மையம் ஹார்மோன் சிகிச்சை மற்றும் இலக்கு / மூலக்கூறு சிகிச்சை உட்பட பல்வேறு புற்றுநோய் சிகிச்சைகளை வழங்குகிறது.

இந்தியாவில் வழங்கப்படும் பல்வேறு வகையான புற்றுநோய் சிகிச்சைகள் என்னென்ன..?

10. நானாவதி மருத்துவமனை, மும்பை

நானாவதி சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை இந்தியாவின் தலைசிறந்த புற்றுநோய் மருத்துவமனைகளில் ஒன்றாகும். இது நோயாளிகளுக்கு விரிவான புற்றுநோய் சிகிச்சையை வழங்குகிறது. இந்த மருத்துவமனை நவம்பர் மாதம் 1950 ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் பிரதம மந்திரி ஜவஹர்லால் நேருவால் திறக்கப்பட்டது. டாக்டர். சஞ்சய் தூதத் மற்றும் டாக்டர். ஆஷிஷ் ஜோஷி மருத்துவமனையின் சிறந்த அறுவை சிகிச்சை நிபுணர்களாக உள்ளனர்.

நுரையீரல் புற்றுநோய், மூளைப் புற்றுநோய், சிறுநீரகப் புற்றுநோய், கருப்பைப் புற்றுநோய் மற்றும் மார்பகப் புற்றுநோய் ஆகியவற்றுக்கு சிகிச்சையளிப்பதற்கு அதிக தகுதி வாய்ந்த அறுவை சிகிச்சை நிபுணர்கள் குழுவைக் கொண்டுள்ளது.இதில் பெரும்பாலான மருத்துவமனைகள், 24/7 அட்மிஷன் மற்றும் சிகிச்சையை வழங்குகின்றன.

First published:

Tags: Cancer, Cancer Hospital, Cancer Treatments