முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / இந்தியாவில் உள்ள டாப் 10 அரசு புற்றுநோய் மருத்துவமனைகளின் பட்டியல்..

இந்தியாவில் உள்ள டாப் 10 அரசு புற்றுநோய் மருத்துவமனைகளின் பட்டியல்..

புற்றுநோய் மருத்துவமனைகள்

புற்றுநோய் மருத்துவமனைகள்

நோய் கண்டறிதல் மிகவும் கடினமாக இருக்கும் நிலையில், அடுத்த கட்டமாக, சரியான சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையைத் தேர்வு செய்வது கடினம். புற்றுநோய் சிகிச்சைக்கும் அதிகம் பணம் செலவாகும். எனவே, பலருக்கும் பயனளிக்கும் வகையில் பல்வேறு அரசு மருத்துவமனைகள் புற்றுநோய்க்கு சிகிச்சைகள் வழங்குகின்றன.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 3-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

புற்று நோயை சரியான முறையில் கண்டறிதல் என்பது புற்றுநோயின் ஆரம்ப கட்ட சிகிச்சையை சரியாகப் பெற உதவும். நோய் கண்டறிதல் மிகவும் கடினமாக இருக்கும் நிலையில், அடுத்த கட்டமாக, சரியான சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையைத் தேர்வு செய்வது கடினம். புற்றுநோய் சிகிச்சைக்கும் அதிகம் பணம் செலவாகும்.

எனவே, பலருக்கும் பயனளிக்கும் வகையில் பல்வேறு அரசு மருத்துவமனைகள் புற்றுநோய்க்கு சிகிச்சைகள் வழங்குகின்றன. இந்தியாவில் புற்றுநோய்க்கு சிகிச்சை வழங்கும் டாப் 10 அரசு மருத்துவமனைகளின் பட்டியல் இங்கே.

குஜராத் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம்

குஜராத் கேன்சர் & ரிசெர்ச் இன்ஸ்டிட்யூட் என்பது அகமதாபாத்தில் உள்ள புற்றுநோய் மையம். அதிநவீன வசதிகளுடன், புற்றுநோய் நோயறிதல் மற்றும் சிகிச்சைகளை வழங்குகிறது. நாட்டின் மிகப்பெரிய புற்றுநோய் சிகிச்சை மையங்களில் இதுவும் ஒன்றாகும். புற்று நோய்க்கான ஆரம்பகால நோயறிதல், நோய் வளர்ச்சியைப் பற்றிய கண்காணிப்பு மற்றும் புற்றுநோய் நிர்வகிப்பது ஆகியவற்றில் உதவுவதற்காக, நோய்த்தடுப்பு அம்சங்கள் மற்றும் புற்றுநோய் உயிரியலின் பல்வேறு அம்சங்கள் ஆய்வு 6 ஆராய்ச்சி ஆய்வகங்களில் ஆராய்ச்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சிறப்புகள்:

அறுவைசிகிச்சை புற்றுநோயியல், மருத்துவ புற்றுநோயியல், கதிர்வீச்சு புற்றுநோயியல், தடுப்பு புற்றுநோயியல், குழந்தை புற்றுநோயியல், நியூரோ ஆன்காலஜி, மகளிர் நோய்-புற்றுநோய், ரேடியோ நோயறிதல் மற்றும் அணுசிகிச்சை மருத்துவம், நோய்த்தடுப்பு மருத்துவம்.

திருவனந்தபுரம் மண்டல புற்றுநோய் மையம்

கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தை அடிப்படையாகக் கொண்ட மண்டல புற்றுநோய் மையம் உலகளவில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. புற்றுநோய் சிகிச்சைக்கான நவீன வசதிகள் மற்றும் புற்றுநோயியல் துறையில் நிபுணர் பயிற்சி ஆகியவை இந்த மருத்துவ நிறுவனத்தின் தரங்களாகும். இந்த புற்று நோய் சிகிச்சை மையத்தில் ஆண்டுக்கு 11,000க்கும் மேற்பட்ட புற்றுநோயாளிகள் சிகிச்சை பெறுகின்றனர். இதில் அதிநவீன கருவிகள் மற்றும் சிறந்த புற்றுநோய் சிகிச்சை அளிக்கும் வசதிகள் உள்ளன.

சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சிறப்புகள்:

மயக்கவியல், புற்றுநோய் ஆராய்ச்சி, சமூகப் புற்றுநோயியல், பல் பராமரிப்பு, தொற்றுநோயியல், ஹீமாலஜி, மருத்துவ புற்றுநோயியல், நுண்ணுயிரியல், அணுசிகிச்சை மருத்துவம், நர்சிங் சேவைகள், நோய்த்தடுப்பு மருத்துவம்,

HCG புற்றுநோய் மையம்

HCG புற்றுநோய் மையம் என்பது புற்றுநோயியல் நிபுணர்களின் பிரத்யேக குழுவால் தொடங்கப்பட்ட மருத்துவமனையாகும். இது சிகிச்சை மையம் பெங்களூரில் அமைந்துள்ளது. HCG விரிவான பராமரிப்பு மற்றும் சிகிச்சையில் நிபுணத்துவம் பெற்றுள்ள சிகிச்சை மையமாகும்.

புற்றுநோய்க்கான சிகிச்சைகள் என்னென்ன..? யாருக்கு என்ன சிகிச்சை சிறந்தது..?

சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சிறப்புகள்:

கதிர்வீச்சு புற்றுநோயியல், ஹெச்பிபி மற்றும் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை, மருத்துவ புற்றுநோயியல், குழந்தை ஹீமாடோ-ஆன்காலஜி, அறுவைசிகிச்சை புற்றுநோயியல், அணுசிகிச்ச்ஹை மருத்துவம், ஹீமாடோ ஆன்காலஜி, எலும்பியல் புற்றுநோயியல், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, யூரோ ஆன்காலஜி

முதுகலை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், சண்டிகர்

மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான முதுகலை நிறுவனம் சண்டிகரில் அமைந்துள்ளது. இந்தியாவில் புற்றுநோய்க்கான பலதரப்பட்ட சிகிச்சைக்கான சிறந்த மருத்துவ மருத்துவமனைகளில் ஒன்றாக இது கருதப்படுகிறது. அரிதான புற்றுநோய் வகைகளான லிம்போமா, தலசீமியா மற்றும் மைலோமாவுக்கு சிகிச்சையளிக்கிறது. இந்தியாவின் வட மாவட்டங்களில் மிகச்சிறந்த புற்றுநோய் சிகிச்சை மருத்துவமனையாகக் கருதப்படுகிறது.

சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சிறப்புகள்:

நுரையீரல் மருத்துவம், உள் மருத்துவம், ஹெபடாலஜி, இரைப்பைக் குடலியல், இரத்தமாற்றம் சிகிச்சை, சமூக மருத்துவம், அணுசிகிச்சை மருத்துவம், சிறுநீரகவியல், குழந்தை மருத்துவம்

டெல்லி மாநில புற்றுநோய் நிறுவனம்

அனைத்து விதமான புற்று நோய்களுக்கும் ஒரே குடையின் கீழ் சிகிச்சை அளிக்கும் புற்றுநோய் மையமாகும். இதில் புற்றுநோய்க்கான அதிநவீன மருத்துவமனை.

சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சிறப்புகள்:

நியூக்ளியர் மெடிசின், கிளினிக்கல் ஆன்காலஜி (ரேடியோதெரபி), மயக்க மருந்து மற்றும் கிரிட்டிகல் கேர், குழந்தை மருத்துவம், உள் மருத்துவம், காஸ்ட்ரோஎன்டாலஜி, மார்பு & சுவாச மருத்துவம்.

இந்தியாவில் வழங்கப்படும் பல்வேறு வகையான புற்றுநோய் சிகிச்சைகள் என்னென்ன..?

கித்வாய் மெமோரியல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆன்காலஜி

கித்வாய் மெமோரியல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆன்காலஜி பெங்களூரில் உள்ளது. இந்தியாவில் இலவசமான மருத்துவ சேவையை வழங்கும் மருத்துவமனையாகும். கர்நாடக அரசின் கீழ் உள்ள இந்த தன்னாட்சி நிறுவனம் 1980 ஆம் ஆண்டு உள்ளூர் அரசு மருத்துவமனையாக மாற்றப்பட்டது. இந்த நிறுவனம் மிகக்குறைந்த விலையில் மருந்துகளை வழங்குகிறது மற்றும் சிகிச்சை அளிக்க முடியாத கட்டி, நோயாளிகளுக்கு பல்வேறு நிதி உதவிகளையும் வழங்குகிறது.

சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சிறப்புகள்:

புற்றுநோய் அறுவை சிகிச்சை, கதிர்வீச்சு சிகிச்சை, கீமோதெரபியுடன் கூடிய முறையான சிகிச்சை, இரத்தமாற்றம் மற்றும் நோயெதிர்ப்புத் தடுப்பு சிகிச்சை, நோய்த்தடுப்பு சிகிச்சை, மேம்பட்ட தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்கள்.

ராஜீவ் காந்தி புற்றுநோய் நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி மையம்

ராஜீவ் காந்தி புற்றுநோய் நிறுவனம் மற்றும் ஆராய்ச்சி மையம், ஆசியாவின் மிக முக்கியமான புற்றுநோய் மையங்களில் ஒன்றாகும். இந்த ஆய்வு மையம் 1996 இல் தொடங்கப்பட்டது. அதன்பின்னர் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட நோயாளிகள் இங்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நிறுவனம் NABH மற்றும் NABL உரிமம் பெற்றது.

சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தின் சிறப்புகள்:

அறுவைசிகிச்சை புற்றுநோயியல், கதிர்வீச்சு சிகிச்சை, கதிர்வீச்சு புற்றுநோயியல், மருத்துவ புற்றுநோயியல், மயக்கவியல், உள் மருத்துவம், குழந்தை ஹீமாட்டாலஜி மற்றும் புற்றுநோயியல் சேவைகள், அறுவை சிகிச்சை தீவிர சிகிச்சை பிரிவு (SICU), வலி ​​மேலாண்மை கிளினிக், ரேடியோ கிளினிக்

அடையார் புற்றுநோய் மையம்

இந்தியாவில் இலவச புற்றுநோய் சிகிச்சை அளிக்கும் மையம் சென்னையில் உள்ள அடையாறு புற்றுநோய் நிறுவனம் முக்கியமான மருத்துவமனை ஆகும். இந்த மருத்துவமனை 1954 இல் நிறுவப்பட்டது. இது அனைத்து புற்று நோயாளிகளுக்கும் இலவசமாக சிகிச்சை அளித்து வருகிறது.

சிகிச்சை மையத்தின் சிறப்புகள்:

ரேடியேஷன் ஆன்காலஜி, சர்ஜிகல் ஆன்காலஜி, மெடிக்கல் ஆன்காலஜி, பீடியாட்ரிக் ஆன்காலஜி, அனஸ்தீசியா, நியூக்ளியர் மெடிசின் ரேடியாலஜி, ஆன்கோபாதாலஜி, மைக்ரோபயாலஜி, கிளினிக்கல் பயோகெமிஸ்ட்ரி, நியூக்ளியர் ஆன்காலஜி, மாலிகுலர் டயக்னாஸ்டிக்ஸ் மற்றும் பல.

நல்ல கொலஸ்ட்ரால் நிறைந்த டாப் 10 உணவுகள்... இதில் தினம் ஒன்று சாப்பிடுங்கள்...

DR. B.R.A. இன்ஸ்டிடியூட் ரோட்டரி புற்றுநோய் மருத்துவமனை

இன்ஸ்டிடியூட் ரோட்டரி புற்றுநோய் மருத்துவமனை (DR. B.R.A. இன்ஸ்டிடியூட் ரோட்டரி புற்றுநோய் மருத்துவமனை) 1983-84 ஆண்டில் 35 படுக்கைகளுடன் தொடங்கப்பட்டது. தற்போது டெல்லி AIIMS இல் 200 படுக்கைகள் கொண்ட மருத்துவமனையாக உள்ளது. அதிநவீன சோதனை கருவிகள், நோயறிதல் மற்றும் கதிரியக்க சிகிச்சை இயந்திரங்கள் உள்ளன. பல புற்றுநோய் வகைகளை ஆரம்ப நிலையிலேயே பயாப்ஸி மூலம் கண்டறியலாம்.

சிகிச்சை மையத்தின் சிறப்புகள்:

ஆன்கா-அனஸ்தீசியா, ஆய்வக புற்றுநோயியல், மருத்துவ இயற்பியல், மருத்துவ புற்றுநோயியல், ரேடியோ நோயறிதல், ரேடியோதெரபி, அறுவை சிகிச்சை புற்றுநோயியல்.

டாடா மெமோரியல் மருத்துவமனை

டாடா மெமோரியல் மருத்துவமனை இந்தியாவின் பழமையான புற்றுநோய் மருத்துவமனைகளில் ஒன்றாகும். இது இப்போது புற்றுநோய் சிகிச்சை மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சியில் இந்தியாவில் முன்னணி மருத்துவமனையாக உள்ளது. இந்த மருத்துவமனையில் அதிநவீன வசதிகள் மற்றும் நன்கு பயிற்சி பெற்ற ஊழியர்கள் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 8,500 அறுவை சிகிச்சைகள் செய்யப்படுகின்றன, மேலும் சுமார் 5,000 நோயாளிகளுக்கு கதிரியக்க சிகிச்சை மற்றும் கீமோதெரபி மூலம் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சிகிச்சை மையத்தின் சிறப்புகள்:

வயது வந்தோருக்கான ஹீமாடோலிம்பாய்டு, இரைப்பை குடல், நியூரோ ஆன்காலஜி, குழந்தை ஹீமாடோலிம்பாய்டு, மார்பு, சிறுநீரகம்.

First published:

Tags: Cancer, Cancer Hospital, Cancer Treatments