தூங்குவதில் அக்கறை காட்டாத இந்தியர்கள்....

ஐடி நிறுவனங்களில் பணிபுரிவோர் ஷிஃப்ட் நேரங்களில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதும் அவர்களின் தூக்கத்தை அதிகமாக பாதிக்கும் முக்கிய காரணம்.

தூங்குவதில் அக்கறை காட்டாத இந்தியர்கள்....
தூக்கம்
  • News18
  • Last Updated: October 31, 2019, 10:10 PM IST
  • Share this:
ஃபிட்பிட் நடத்திய ஆய்வில் இந்தியர்கள் தூங்குவதில் இரண்டாம் இடமும் ஜப்பானியர் முதலிடத்திலும் இருப்பதாக ஆய்வில் கண்டு பிடித்துள்ளது.

18 நாடுகளில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் இந்தியர்கள் ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் ஒரு நிமிடம் மட்டுமே தூங்குவதாக தெரிவித்துள்ளது. இதனால் சராசரி தூக்க நேரத்தைக் காட்டிலும் 48 நிமிட தூக்கத்தை இழப்பதாக தெரிவித்துள்ளது. அப்படி சரியான நேரத்தை கடைப்பிடிக்கும் நாடுகளில் பிரிட்டிஷ் முதலிடத்திலும் அமெரிக்கா இரண்டாவது இடத்திலும் உள்ளன.

இந்தியர்களில் தூக்க நேரம் குறைவாக இருப்பதற்குக் திரை நேரம் அதிகரித்துள்ளதும் ஒரு காரணமாக குறிப்பிடுகிறது. அதாவது டிவி, செல்ஃபோன் பார்க்கும் நேரம் அதிகரித்துள்ளது தூக்கத்தை பாதிப்பதாக குறிப்பிட்டுள்ளது. அடுத்ததாக ஐடி நிறுவனங்களில் பணிபுரிவோர் ஷிஃப்ட் நேரங்களில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதும் அவர்களின் தூக்கத்தை அதிகமாக பாதிக்கும் முக்கிய காரணமாக குறிப்பிடுகிறது. அதேபோல் தூங்குவதற்கு முக்கியத்துவம் அளிப்பது மட்டும் போதாது, தூக்க நேரத்தையும் கவனத்தில் கொள்வது அவசியம் என்கிறது.
தூக்க நேரத்தை சரியாக கடைபிடிப்பதால் உடலளவில் ஏற்படும் நோய்களை தவிர்க்கலாம் என்கிறது. அதேபோல் உடல் வளர்ச்சிதை மாற்றத்தை நிகழ்த்தும் நேரமே தூக்க நேரம் என்பதால் இதை கவனத்தில் எடுத்துக்கொள்வது அவசியம் என அறிவுறுத்துகிறது இந்த ஆய்வு.

அதேபோல் ஒருநாளைக்கு 10,000 அடிகள் நடப்பதை கட்டாயம் என்கிறது. அதனடிப்படையில் பார்க்கும்போது ஒருநாளைக்கு 6,533 அடிகளே ஒரு நாளைக்கு நடப்பதாக தெரிவித்துள்ளது.இருப்பினும் இது கவலைப்படவேண்டிய எண் இல்லை என்றாலும் 10000 அடிகள் நடக்க முயற்சிப்பது நல்லது என்கிறது. இதனால் இந்தியர்கள் அதிக அளவில் பாதிக்கப்படும் நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்த பிரச்னைகளை தவிர்க்கலாம் என்கிறது.
லைஃப்ஸ்டைல் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிய இங்கே கிளிக் செய்க.  லைஃப்ஸ்டைல் செய்திகள், சுவாரஸ்யமான வீடியோக்கள் என அனைத்தையும் இங்கே கிளிக் செய்து காண்க.First published: October 31, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்