ஹோம் /நியூஸ் /லைஃப்ஸ்டைல் /

பெண்களுக்கான காண்டம் பற்றி தெரியுமா..? முழுமையான கைட்லைன் உங்களுக்காக...

பெண்களுக்கான காண்டம் பற்றி தெரியுமா..? முழுமையான கைட்லைன் உங்களுக்காக...

பெண்ணுறை

பெண்ணுறை

பெண்ணுறை பொருத்துவதற்கு சௌகரியமாக இருக்காது மற்றும் அது கடினமாக இருக்கும் என்று பலரும் கருதுகின்றனர். ஆனால், ஆணுறையை போலவே இதனை எளிதில் பொருத்த முடியும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

பாலியல் ரீதியாக பரவக் கூடிய நோய்கள் மற்றும் தேவையற்ற கர்ப்பத்தை தவிர்க்க வேண்டும் என்றால், வெகுஜன மக்கள் தேர்வு செய்யக் கூடியது ஆணுறைகள் தான். ஏனென்றால், ஆணுறைகள் குறித்து மிகுதியான விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது. இதேபோன்ற பாதுகாப்பு நிறைந்த பெண்ணுறை குறித்து பலருக்கு தெரியும் என்றாலும், அதனை பயன்படுத்த முன்வருவதில்லை. இதற்கு ஏற்றாற்போல, சில நிறுவனங்கள் மட்டுமே பெண்ணுறைகளை தயாரித்து, விற்பனைக்கு கொண்டு வருகின்றன.

பொதுவாக ஆணுறைகளை ஒப்பிடும்போது பெண்ணுறைகளின் விலை கொஞ்சம் அதிகம் என்பதும் இதை பலர் தவிர்ப்பதற்கான காரணமாக இருக்கிறது. உதாரணத்திற்கு நல்ல தரம் வாய்ந்த ஆணுறை ஒன்றை நீங்கள் ரூ.10 முதல் ரூ.30க்குள் வாங்கிவிட முடியும். ஆனால், 3 பெண்ணுறைகளை கொண்ட ஒரு பேக்கின் விலை ரூ.199 ஆகும். அதே சமயம், பெண்ணுறையில் பயன்படுத்துவதால் உங்களுக்கு என்னென்ன பலன் கிடைக்கும் என்பதை இந்தச் செய்தியில் பார்க்கலாம்.

மேம்பட்ட இன்பம் :

பாலியல் உறவின்போது உங்களுக்கு இன்பம் கிடைப்பதை தடுக்கும் கருவியாக பெண்ணுறை இருக்கும் என்று இதுநாள் வரையில் நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் என்றால், அது முற்றிலும் தவறானது. ஆண், பெண் இருவருக்குமே இது இன்பம் தரக் கூடியதாகும்.

பொதுவாக பெண்ணுறுப்பின் மேல் பகுதியில் உள்ள கிளைடோரிசிஸ் மிகுந்த உணர்ச்சி வாய்ந்த இடமாகும். இந்த கிளைடோரிசிஸ் தூண்டப்படும்போது, பெண்கள் மிகுந்த உணர்ச்சியுடையவராக மாறுவதுடன், பேரின்பம் அடைகிறார்கள்.

பெண்ணுறை பயன்படுத்தும்போது, அதன் வெளிவட்டம் இந்த கிளைடோரிசிஸ் பகுதியில் பொருந்திக் கொள்ளும். ஆகவே உறவின் போது, கிளைடோரிசிஸ் பகுதியில் இது உராய்வை ஏற்படுத்தும். அதேபோல, பெண்ணுறை உள்ளே இருக்கும் உள்வட்டமானது ஆணுக்கும் பேரின்பம் தரக் கூடியதாக அமையும்.

பொருத்துவதற்கு கடினமானதா?

பெண்ணுறை பொருத்துவதற்கு சௌகரியமாக இருக்காது மற்றும் அது கடினமாக இருக்கும் என்று பலரும் கருதுகின்றனர். ஆனால், ஆணுறையை போலவே இதனை எளிதில் பொருத்த முடியும். கீழே படுத்திருப்பது, அமர்ந்திருப்பது அல்லது நிற்பது என எந்த பொசிஷனிலும் பெண்ணுறையை பொருத்த முடியும்.

இரட்டை பாதுகாப்பு :

பாலியல் ரீதியாக பரவக் கூடிய நோய்களுக்கு தடுப்பு அரணாக பெண்ணுறை இருக்கிறது மற்றும் தேவையற்ற கர்ப்பங்களை தடுக்க உதவுகிறது. இது மட்டுமல்லாமல், பாலியல் உறவின்போது இது பெண்களுக்கு சௌகரியத்தை கொடுக்கும். இதில், முக்கிய அம்சம் என்னவென்றால் பாலியல் உறவுக்கு 8 மணி நேரம் முன்பாகக் கூட இதை பெண்கள் பொருத்திக் கொள்ளலாம். கடைசி நிமிடத்தில் தடுமாற வேண்டியதில்லை.

முன்விளையாட்டு அதிகரிக்கும் :

பெண்ணுறையில் உள்ள வெளிவட்டம் காரணமாக பாலியல் உறவின்போது பெண்ணுக்கு அது முன்விளையாட்டு போல அமையும். இது மட்டுமல்லாமல் பெண்ணுறை லேடக்ஸ் பொருளால் தயாரிக்கப்படுவதன் காரணமாக இது அலர்ஜியை ஏற்படுத்தாது.

Also Read : காலை நேரத்தில் தாம்பத்யம் வைத்து கொண்டால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக மாறும்!

வேறு வகையிலும் பயன்படும் :

பெண்ணுறுப்பு வழி புணர்ச்சி மட்டும்தான் பெண்ணுறைகளை பயன்படுத்த வேண்டும் என்பதில்லை. இன்றைய சூழலில் பலரும் ஆசனவாய் வழி புணர்ச்சியில் ஈடுபட விரும்புகின்றனர். அதற்கும் இதனை பயன்படுத்திக் கொள்ளலாம். பாலியல் உறவில் உங்கள் தேர்வு எப்படி இருந்தாலும், ஆணுறை மற்றும் பெண்ணுறை ஆகிய இரண்டையும் ஒரே சமயத்தில் பயன்படுத்தக் கூடாது என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

Published by:Josephine Aarthy
First published:

Tags: Condom, Female Condom, Sexual Wellness