Home /News /lifestyle /

முகத்தில் முடி வளர்ச்சியை குறைக்க பெண்கள் உடனடியாக செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள்.!

முகத்தில் முடி வளர்ச்சியை குறைக்க பெண்கள் உடனடியாக செய்ய வேண்டிய முக்கிய விஷயங்கள்.!

Facial Hair

Facial Hair

Facial Hair Reduction Solutions | பெண்களின் உடல் பாகங்களில் அதிகப்படியான முடி வளர்ச்சியை ஏற்படுத்தும் ஹிர்சுட்டிசம், பொதுவாக ஆண்ட்ரோஜன்கள் எனப்படும் ஹார்மோன்களின் அதிகரிப்பால் ஏற்படுகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India
பெண்களை ஒப்பிடும் போது பொதுவாக ஆண்களுக்கு மட்டுமே முகத்தில் அதிகமாக முடி வளரும். ஆனால் சில நேரங்களில் ஒரு சில பெண்களின் முகத்தில் முடி வளர்ச்சி அதிகமாக இருக்கும். இது அவர்களின் அழகை பாதிக்க கூடிய விஷயமாக பார்க்கப்படுகிறது.

ஆனால் பெண்களின் முகத்தில் இயல்புக்கு மாறாக அதிகமாக வளரும் முடி உண்மையில் ஹிர்சுட்டிசம் (Hirsutism) போன்ற அடிப்படை உடல்நலப் பிரச்சினையின் அறிகுறியாக இருக்கலாம் என்கிறார்கள் நிபுணர்கள். பெண்களின் உடல் பாகங்களில் அதிகப்படியான முடி வளர்ச்சியை ஏற்படுத்தும் ஹிர்சுட்டிசம், பொதுவாக ஆண்ட்ரோஜன்கள் எனப்படும் ஹார்மோன்களின் அதிகரிப்பால் ஏற்படுகிறது.

இது மிகவும் பொதுவானது மற்றும் 5 முதல் 10 சதவீத பெண்களை பாதிக்கிறது. ஹிர்சுட்டிசம் நிலையில் பெண்களின் முகம், மார்பு மற்றும் முதுகில் கருமையான அல்லது கரடுமுரடான முடி அதிகமாக வளரும் என்று தனது இன்ஸ்டாவில் ஊட்டச்சத்து நிபுணர் ஷிகா குப்தா கூறி இருக்கிறார். நீரிழிவு நோய்க்கு பங்களிக்கும் நாள்பட்ட உயர் இன்சுலின் அளவுகள், ஆண்ட்ரோஜன் ஹார்மோன் உற்பத்தியை மாற்றுகிறது என்றும் அவர் இன்ஸ்டாவில் குறிப்பிட்டு உள்ளார். ஓவரிக்கள் கூடுதல் ஆண்ட்ரோஜன்/டெஸ்டோஸ்டிரோன் உற்பத்தி செய்வதால் முகத்தில் முடி வளர்ச்சி உண்டாக்குகிறது என்றும் ஷிகா குப்தா ஷேர் செய்துள்ளார்.

ஆனால் அடிப்படை காரணத்தில் வேலை செய்தால், இறுதியில் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சியை குறைக்கலாம் என்று கேப்ஷன் கொடுத்துள்ளார் ஷிகா குப்தா.
முகத்தில் வளரும் முடி வளர்ச்சியை குறைக்க உடனடியாக செய்ய வேண்டிய சில முக்கிய விஷயங்கள் இங்கே:

- சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட உணவுகள், பாக்கெட் உணவுகள், சுத்திகரிக்கப்பட்ட எண்ணெய்கள் உள்ளிட்டவற்றை எடுத்து கொள்வதை உடனடியாக குறைக்க வேண்டும். ஆர்கானிக் உணவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். ஆர்கானிக் அல்லாத பால் மற்றும் பால் பொருட்கள், அழகுசாதன பொருட்கள் மற்றும் வாசனை திரவியங்கள் பயன்படுத்துவதை தவிர்க்கவும். ரசாயனங்கள் மற்றும் ஆர்கானிக் அல்லாத உணவுகள் ஈஸ்ட்ரோஜனை அதிகரித்து அதிக முடி வளர்ச்சி அறிகுறிகளை அல்லது PCOS-ஐ கொடுக்கும் என்கிறார்.

சாப்பிடும் போது இடையில் தண்ணீர் குடிப்பது தவறு : ஏன் தெரியுமா..?

- ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்களை சரி செய்ய ஜிங்க், சாஸ்ட்பெர்ரி, சா பால்மெட்டோ (முகத்தில் முடி வளர்ச்சியை நிறுத்தும் இயற்கையான DHT ப்ளாக்கர்) உள்ளிட்ட உணவுகளை சரியான வழிகாட்டுதலின் கீழ் டயட்டில் சேர்த்து கொள்ளலாம்.

- அதிகப்படியான கார்போஹைட்ரேட்டுகளை எடுப்பதை குறைத்து கொள்வதன் மூலம் இன்சுலின் எதிர்ப்பில் கவனம் செலுத்த வேண்டும்.- ஒமேகா 3 சத்து அடங்கிய உணவுகளை உட்கொள்வதை அதிகரிக்கலாம். மீன், ஆளிவிதை, பாதாம், அக்ரூட் பருப்புகள் போன்றவற்றை முடிந்தவரை சாப்பிட அறிவுறுத்துகிறார் நிருபன் ஷிகா குப்தா.

- உடலில் இருந்து ஈஸ்ட்ரோஜனை அகற்ற 2 வழிகள் உள்ளன. முதலில் மலச்சிக்கல் இருக்க கூடாது. மலச்சிக்கல் இருந்தால் இரவு முழுவதும் ஊறவைத்த கொடிமுந்திரி 7-8 ஐ காலையில் வெறும் வயிற்றில் சாப்பிடலாம். மற்றொரு வழி வியர்வை வழிய உடற்பயிற்சி செய்ய வேண்டும்.

Also Read : உங்கள் சருமம் பளபளப்பாக இருக்க சூப்பரான 5 டிப்ஸ்கள் இதோ...

- நிறைய காய்கறிகள், குறிப்பாக முட்டைக்கோஸ், காலிஃபிளவர், ப்ரோக்கோலி, முள்ளங்கி போன்றவற்றை இலை காய்கறிகளுடன் சேர்த்து நிறைய சாப்பிடலாம்.

- இன்சுலின் எதிர்ப்புக்கும் மன அழுத்தத்திற்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது. அறிகுறிகளை குணப்படுத்த மன அழுத்தத்தை குறைப்பது முக்கியம். நீண்ட நடைப்பயணங்கள், வேலைகளுக்கு இடையில் ஓய்வு, நல்ல தூக்கம்,சுவாசப் பயிற்சிகள் மூலம் மன அழுத்தத்தை குறைக்க உதவும்.மேற்கண்ட எல்லாவற்றையும் சரியாக செய்தாலும், முகத்தில் வளரும் முடிகள் குறைவதற்கு அதிக நேரம் எடுக்கலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார் ஷிகா குப்தா
Published by:Selvi M
First published:

Tags: Beauty Tips, Facial hair, Health, Skin Care

அடுத்த செய்தி