முகப்பு /செய்தி /லைஃப்ஸ்டைல் / PCOS பிரச்சனை உள்ளவரா நீங்க..? சாப்பிட வேண்டிய.. சாப்பிடக்கூடாத உணவுகள்

PCOS பிரச்சனை உள்ளவரா நீங்க..? சாப்பிட வேண்டிய.. சாப்பிடக்கூடாத உணவுகள்

PCOS Diet Plan

PCOS Diet Plan

PCOS ஏற்படுவதற்கான தெளிவான காரணங்கள் எதுவும் இல்லை என்றாலும், சிறு வயதிலேயே ஏற்படும் உடல் பருமன் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல், மாதவிடாய் பிரச்சனை, முடி உதிர்தல், முகத்தில் ரோமா வளர்ச்சி, முகப்பரு ஆகியவை பொதுவாக அறிகுறிகள்.

மேலும் படிக்கவும் ...
  • News18 Tamil
  • 2-MIN READ
  • Last Updated :
  • Tamil |

பிசிஓஎஸ் (PCOS) என்றும் அழைக்கப்படும் பாலிசிஸ்டிக் ஓவரி சிண்ட்ரோம் (Polycystic Ovary Syndrome ) என்பது பல பெண்கள் எதிர்கொள்ளும் பொதுவான உடல்நலப் பிரச்சினைகளில் ஒன்றாக மாறிவிட்டது. இது உடலில் ஹார்மோன் சமநிலையின்மை மற்றும் வளர்சிதை மாற்றத்தில் சிக்கல்களை ஏற்படுத்தும். இதனால், உங்கள் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.

PCOS -க்கு மருந்து இல்லை என்பது உண்மை தான் என்றாலும், அதன் விளைவுகளை ஆரோக்கியமான உணவு மற்றும் வாழ்க்கை முறையை பின்பற்றுவதன் மூலம் குறைக்க முடியும். PCOS ஏற்படுவதற்கான தெளிவான காரணங்கள் எதுவும் இல்லை என்றாலும், சிறு வயதிலேயே ஏற்படும் உடல் பருமன் இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அது மட்டுமில்லாமல், மாதவிடாய் பிரச்சனை, முடி உதிர்தல், முகத்தில் ரோமா வளர்ச்சி, முகப்பரு ஆகியவை பொதுவாக அறிகுறிகள்.

PCOS உள்ள பெண்கள் ஆரோக்கியத்தை கவனித்துக்கொள்ள வேண்டியது மிகவும் முக்கியம். ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கும் PCOS உள்ள பெண்களுக்கான சில உணவுக் குறிப்புகளை பற்றி இங்கே காணலாம். இவை, உங்கள் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதுடன், இதனால் ஏற்படும் பாதிப்பை குறைக்கும்.

PCOS பிரச்சனை உள்ள பெண்களுக்கான சில குறிப்புகள் :

லாக்டோஸை (lactose) தவிர்க்கவும்…

லாக்டோஸ் PCOS இன் எதிரி என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே, முடிந்தவரை அதைத் தவிர்க்க நீங்கள் முயற்சி செய்ய வேண்டும். மேலும், லாக்டோஸில் இன்சுலின் வளர்ச்சி ஹார்மோன் உள்ளது. எனவே, உங்களுக்கு PCOS இருந்தால் இதை தவிர்ப்பது நல்லது.

பசையத்தை (Gluten) தவிர்க்கவும்

PCOS அறிகுறி உள்ளவர்கள் க்ளுட்டன் எடுத்துக்கொள்வதை தவிர்க்கவும். ஏனெனில், இது உடலில் அதிக வீக்கத்தை ஏற்படுத்தி, PCOS அறிகுறிகளை மோசமாக்குகிறது. க்ளுட்டன் ( Gluten ) என்பது கோதுமை, பார்லி மற்றும் கம்பு உள்ளிட்ட சில தானியங்களில் இயற்கையாகக் காணப்படும் ஒரு புரதமாகும்.

Also Read : இந்த 8 பிரச்சனை இருக்கவங்க வேர்க்கடலையை அளவா சாப்பிடுங்க..!

உணவில் அழற்சி எதிர்ப்பு உணவுப் பொருட்களைச் சேர்க்கவும்

PCOS அறிகுறி இல்லாவிட்டாலும், பெண்கள் தங்களின் உணவில் அழற்சி எதிர்ப்பு உணவுப் பொருட்களை ( anti-inflammatory food ) எடுத்துக்கொள்வது நல்லது. இதற்கு நீங்கள் தினசரி உணவில் சிட்ரஸ் பழங்கள் மற்றும் இலவங்கப்பட்டை ஆகியவற்றை சேர்ப்பது நல்ல பலனை கொடுக்கும்.




 




View this post on Instagram





 

A post shared by Nmami (@nmamiagarwal)



புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவை உண்ணுங்கள்

இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவைப் பராமரிக்க நிறைய நார்ச்சத்து மற்றும் புரதம் இருப்பது மிகவும் முக்கியம். உங்கள் உணவில் அதிக பழங்கள் மற்றும் காய்கறிகளை சேர்க்க முயற்சிக்கவும். தினசரி புரதம் நிறைந்த உணவுப் பொருட்களை சாப்பிட மறக்காதீர்கள்.

உடல் செயல்பாடுகளை வழக்கமாக்குங்கள்

என்னதான் நாம் ஆரோக்கியமான உணவுகளை எடுத்துக்கொண்டாலும், உடல் செயல்பாடு என்பது முக்கியமாக கருதப்படுகிறது. எனவே, தினசரி வாக்கிங், ஜாக்கிங் அல்லது உடற்பயிற்சி செய்வது நல்லது. கார்டியோ அல்லது கடுமையான உடற்பயிற்சி செய்வதை தவிர்க்கவும்.

உங்களுக்கு பிசிஓடி ( PCOD ) அல்லது பிசிஓஎஸ் (PCOS) இருப்பது கண்டறியப்பட்டால், உங்கள் உடல்நலத்தில் கூடுதல் கவனிப்பை செலுத்துங்கள். நீங்கள் அதை சரிவர கவனிக்காவில்லால், உங்கள் நிலைமையை மோசமாக்கும்.

First published:

Tags: PCOD Diet, PCOS Diet, Weight loss