• HOME
  • »
  • NEWS
  • »
  • lifestyle
  • »
  • பெண்களுக்கு ’வைட்டமின் சி’ எவ்வளவு முக்கியம் தெரியுமா? இனியாவது இதில் கவனம் செலுத்துங்கள்..

பெண்களுக்கு ’வைட்டமின் சி’ எவ்வளவு முக்கியம் தெரியுமா? இனியாவது இதில் கவனம் செலுத்துங்கள்..

விட்டமின் சி

விட்டமின் சி

வைட்டமின் சி-யை எடுத்துக் கொள்ளுங்கள், இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்

  • Share this:
இன்றைய சமூகத்தில் நவீன வாழ்க்கை முறைக்கு ஏற்ப உலகெங்கிலும் உள்ள பெண்கள் பல பொறுப்புகளில் அங்கம் வகித்து வருகின்றனர். தனிப்பட்ட மற்றும் தொழில்முறை வாழ்க்கையில் தங்களால் முடிந்ததைச் செய்ய அவர்கள் தொடர்ந்து போராடி வரும் அதே சமயத்தில், அவர்கள் புறக்கணிக்கும் ஒரு முக்கியமான விஷயம் என்னவென்றால் அவர்களின் உடல்நலம். பெண்கள் தினசரி உணவு சாப்பிடும் போது, மிகவும் பயனுள்ள சில ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சேர்க்க மறந்துவிடுகிறார்கள். சில சமயங்களில் அவற்றின் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு இல்லாததால் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை ஒதுக்கி வைத்து விடுகின்றனர்.

உதாரணத்துற்கு வைட்டமின் சி-யை எடுத்துக் கொள்ளுங்கள், இவை நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். ஆனால் பெண்களை அதனை அதிகம் சாப்பிடுவதில்லை. மோசமான வாழ்க்கை முறை, பல்வேறு நோய்கள், புகைபிடித்தல், ஆல்கஹால் அல்லது போதைப்பொருள் காரணமாக வைட்டமின் சி-க்கான உணவு பரிந்துரைகள் பெரும்பாலும் பூர்த்தி செய்யப்படுவதில்லை. எனவே நீங்கள் ஒவ்வொரு நாளும் உணவு மற்றும் சிற்றுண்டியுடன் வைட்டமின் சி சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஏனெனில் இது உடலில் தேவையான விளைவை ஏற்படுத்தும்.

வைட்டமின் சி-யின் பெரும்பாலான பண்புகள் ஆண், பெண் என இரு பாலினங்களுக்கும் ஒரே மாதிரியாக உதவுகின்றன. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. வைட்டமின் சி பெண்களுக்கு நன்றாக வேலை செய்கின்றன. அன்றாடம் குடும்ப வேலை, அலுவலக வேலை என அதிக வேலைப்பளு காரணமாக பலர் நோய்களுக்கு ஆளாகிறார்கள். அந்த வகையில், பெண்களுக்கு வைட்டமின் சி-யால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றிக் காணலாம்.



கொலாஜன் உற்பத்திக்கு அவசியமான ஒரு ஆக்ஸிஜனேற்றியாக செயல்படும்:

வைட்டமின் சி-யில் உள்ள நீரில் கரையக்கூடிய ஊட்டச்சத்துக்கள், தமனிகள், வடு திசுக்கள் மற்றும் குருத்தெலும்பு ஆகியவற்றின் வளர்ச்சி மற்றும் பராமரிப்புக்கு சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றியாக செயல்படுகின்றன. கொலாஜன் என்பது உடலால் இயற்கையாக உற்பத்தி செய்யப்படும் ஒரு பொருள். இருப்பினும், மக்கள் வயதாகும்போது இந்த பொருளின் உற்பத்தி குறைகிறது. இருப்பினும் கொலாஜன் உற்பத்தியில் வைட்டமின் சி ஒரு ஒருங்கிணைந்த பங்கைக் கொண்டுள்ளது. எனவே சுருக்கங்கள் மற்றும் வயதான அறிகுறிகள் மற்றும் மார்க்ஸ் போன்றவற்றை குறைக்கிறது.

பேரிட்சம் பழத்தை எப்படி சாப்பிட வேண்டும்? வெறும் வயிற்றில் சாப்பிட்டால் என்னவாகும் தெரியுமா?

கர்ப்பம் மற்றும் பாலூட்டலின் போது வைட்டமின் சி அவசியம்:

வளரும் கரு மற்றும் வளர்ந்து வரும் குழந்தையின் தேவைகள் காரணமாக, கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் பெண்களுக்கு வைட்டமின் சி தேவைகள் அதிகம் இருக்கின்றன. கர்ப்பிணிப் பெண்களின் வைட்டமின் சி நிலை பெரும்பாலும் கர்ப்பிணி அல்லாத பெண்களை விட குறைவாக உள்ளது. இது வைட்டமின் சி தீவிரமாக கருவுக்கு மாற்றப்படுவதால் இருக்கலாம். கர்ப்ப சிக்கல்களைக் கொண்ட பெண்கள் மிகக் குறைந்த வைட்டமின் சி நிலையைக் கொண்டிருக்கலாம். கர்ப்பிணிப் பெண்களுக்கு வைட்டமின் சி கொண்ட உணவுகளை கூடுதலாக வழங்குவது கர்ப்பம் தொடர்பான சிக்கல்களின் அபாயத்தைக் குறைக்கும்.

மன அழுத்தம் மற்றும் உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும்:

மன அழுத்தம் ஹார்மோன் உற்பத்தி, மாதவிடாய் சுழற்சி, பெண்கள் மற்றும் ஆண்களில் கருவுறுதல், செரிமானம் மற்றும் நோயெதிர்ப்பு செயல்பாடு போன்ற உடலின் பல்வேறு செயல்முறைகளை பாதிக்கும். உங்கள் உடல் மன அழுத்த தூண்டுதல்களுக்கு ஆளாகும் போது, உடல் பல முக்கிய செயல்முறைகளுக்கு முன்னுரிமை அளிக்கிறது. வைட்டமின் சி உடல் மற்றும் உணர்ச்சி மன அழுத்தத்தின் பொதுவான குறிகாட்டிகளைக் கையாள உதவுகிறது. இது மன அழுத்த ஹார்மோன்களின் அளவையும் குறைக்கிறது. அதேபோல பெண்களில் உயர் இரத்த அழுத்தம் என்பது இருதய நோய்களுக்கு வழிவகுக்கும் ஒரு முக்கியமான ஆபத்து காரணி ஆகும். ஆனால் இது பெரும்பாலும் குறைத்து மதிப்பிடப்படுகிறது மற்றும் பெரிதாகக் கண்டறியப்படுவதில்லை. வைட்டமின் சி-யை வழக்கமாக உட்கொள்வதன் மூலம் அசாதாரணமாக உயர் இரத்த அழுத்தத்தின் நிகழ்வுகளை குறைக்க முடியும்.



இரும்பு சத்து அதிகரிக்கும்:

வைட்டமின் சி நிறைந்த சப்ளிமெண்ட்ஸ் உணவுகளை எடுத்துக்கொளவதன் மூலம் உடலில் இரும்புசத்து உறிஞ்சுதலை மேம்படுத்த முடியும். வைட்டமின் சி மோசமாக உறிஞ்சப்படும் இரும்பை மாற்ற உதவுகிறது. அதாவது தாவர அடிப்படையிலான கடினமாக இரும்பு மூலங்கள் போன்றவற்றை உறிஞ்சுவதற்கு எளிதான வடிவமாக மாற்றியமைக்க வைட்டமின் சி உதவுகின்றன. இதன் விளைவாக, இரும்புச்சத்து குறைபாடு உள்ளவர்களிடையே இரத்த சோகை அபாயத்தை குறைக்க இது உதவக்கூடும்.

இதய நோய் அபாயத்தை குறைக்கும்:

வைட்டமின் சி சப்ளிமெண்ட்ஸ் இதய நோய் அபாயத்துடன் குறைக்க உதவுகிறது. எல்.டி.எல் கொழுப்பு மற்றும் ட்ரைகிளிசரைடுகளின் உயர் இரத்த அளவு போன்ற இதய நோய்களுக்கான அறியப்பட்ட ஆபத்து காரணிகளின் தாக்கத்தை இந்த சப்ளிமெண்ட்ஸ் குறைக்கலாம்.

சீரான மாதவிடாய்:

வைட்டமின் சி உங்கள் ஈஸ்ட்ரோஜன் அளவையும் புரோஜெஸ்ட்டிரோன் அளவையும் உயர்த்தும். இது கருப்பை சுருங்குவதற்கும், கருப்பையின் புறணி உடைவதற்கும் காரணமாகிறது. இது சரியான மாதவிடாய் தொடங்குவதற்கு வழிவகுக்கிறது.



தினசரி உட்கொள்ளல்:

வைட்டமின் சி-யின் தினசரி உட்கொள்ளல் நீங்கள் வசிக்கும் நாட்டைப் பொறுத்தே அமைகிறது. இந்தியாவில், உங்கள் வயதைப் பொறுத்து உங்களுக்கு தினசரி 65 முதல்115 மி.கி வைட்டமின் சி தேவைப்படுகிறது.

* பெண்கள் 13 முதல் 15 வயது வரை உள்ளவர்கள் ஒரு நாளுக்கு 66 மி.கி அளவு வைட்டமின் சியை எடுத்துக்கொள்ளவேண்டும்.
* பெண்கள் 16 முதல் 18 வயது வரை உள்ளவர்கள் ஒரு நாளுக்கு 68 மி.கி எடுத்துக்கொள்ளவேண்டும்.
* இளம் பெண்கள் ஒரு நாளைக்கு 65 மி.கி அளவு வைட்டமின் சி சத்தினை எடுத்துக்கொள்ளவேண்டும்.
கர்ப்பிணி பெண்கள் நாளொன்றுக்கு - 80 மி.கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
* தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் ஒரு நாளுக்கு 115 மி.கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

வைட்டமின் சி நிறைந்த உணவுகள்:

சிட்ரஸ் பழங்கள், தக்காளி மற்றும் தக்காளி சாறு மற்றும் உருளைக்கிழங்கு ஆகியவை வைட்டமின் சி இன் முக்கிய ஆதாரமாக உள்ளது. இதுதவிர மற்ற நல்ல உணவு ஆதாரங்களான சிவப்பு மற்றும் பச்சை குடைமிளகாய், கிவிஃப்ரூட், ப்ரோக்கோலி, ஸ்ட்ராபெர்ரி, பிரஸ்ஸல்ஸ் முளைகள் மற்றும் கேண்டலூப் ஆகியவற்றிலும் வைட்டமின் சி சாது நிறைந்துள்ளது. எல்லா பழங்கள் மற்றும் காய்கறிகளிலும் வைட்டமின் சி அளவு சமமாக இருப்பதில்லை. உதாரணமாக, வாழைப்பழங்கள் மற்றும் ஆப்பிள்கள் வைட்டமின் சி யில் மிகவும் குறைவாக உள்ளன. அதே நேரத்தில் ஆரஞ்சு, ஸ்ட்ராபெர்ரி, தக்காளி, கிவி ஆகியவற்றில் அதிக வைட்டமின் சி-யின் உள்ளடக்கம் அதிகமாக உள்ளது. மேலும், பெண்கள் தேவைப்படும் பட்சத்தில் மருத்துவர்களின் பரிந்துரையுடன் வைட்டமின் சி சப்ளிமெண்ட் மாத்திரைகள், காப்ஸ்யூல்களை எடுத்துக்கொள்ளலாம்.

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Sivaranjani E
First published: