தங்கள் அந்தரங்க சுகாதாரம் பற்றி விழிப்புடன் பெண்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்பது ஒரு கட்டுக்கதை ஆகும். ஏனென்றால் ஆண்களும் தங்கள் அந்தரங்க சுகாதாரத்தில் கவனம் செலுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது. உடலின் மற்ற பாகங்களை விட பிறப்புறுப்பு பகுதி அதிக சென்சிட்டிவானது. எனவே மென்மையான மற்றும் பயனுள்ள ஒரு தனி சுகாதார நடைமுறை இருபாலருக்கும் தேவை. பாலியல் ஆரோக்கியம் மற்றும் பாலியல் உடற்தகுதிக்கு அந்தரங்க சுகாதாரம் அவசியம்.
மோசமான அந்தரங்க சுகாதாரம் துர்நாற்றம், அரிப்பு, சொறி, பருக்கள் மற்றும் வியர்வையை உள்ளிட்ட சிக்கல்களை ஏற்படுத்த கூடும். எனவே பிறப்புறுப்பு பகுதியை வழக்கமாக கழுவுவது மட்டுமே நல்ல தீர்வாக இருக்காது.
அந்தரங்க சுகாதாரத்தை பராமரிக்க கழுவுவதை தவிர ஆண்கள் மேலும் சில வழக்கத்தை கடைபிடிக்க வேண்டும். ஆண்கள் தங்கள் அந்தரங்க சுகாதாரத்தை பராமரிக்க வேறு என்ன பயன்படுத்த வேண்டும் என்ற கேள்விக்கு பதில் இன்டிமேட் வாஷ் (intimate wash). இன்டிமேட் வாஷ் என்பது அந்தரங்க பகுதிகளை சுத்தம் செய்ய வடிவமைக்கப்பட்ட ஒருசொல்யூஷன் ஆகும். அந்தரங்க பகுதிகளின் வறட்சி, அரிப்பு மற்றும் எரிச்சல் உள்ளிட்ட பிரச்சனைக்ளுக்கு இன்டிமேட் வாஷ் பயன்படுகிறது.
கடும் சிக்கல்களுக்கு வழிவகுக்கும் தொற்றுகளை தடுக்க ஆண்கள் ஒரு இன்டிமேட் வாஷ் பயன்படுத்த வேண்டும். அந்தரங்க பகுதியை அவ்வப்போது சுத்தம் செய்யாமல் விடுவது அழுக்கு மற்றும் வியர்வை அதிகரித்து துர்நாற்றம் மற்றும் ஆண்குறி நோய் தொற்றுகளுக்கு வழிவகுக்கிறது. சோப்புகள் ஹார்ஷானவை அந்தரங்க பகுதிகளின் சருமம் மென்மையானது மற்றும் சென்சிட்டிவானது என்பதால் சோப்பு கொண்டு அந்தரங்க பகுதிகளை சுத்தம் செய்வது நல்லது அல்ல. எனவே ஆண்கள் மென்மையான மற்றும் பயனுள்ள ஒரு இன்டிமேட் வாஷை பயன்படுத்த வேண்டும்.
Low Blood Pressure ஆகிடுச்சா... உடனே கிட்சனில் இருக்கும் இந்த பொருட்களை சாப்பிடுங்க..!
ஆண்கள் இன்டிமேட் வாஷ் பயன்படுத்துவதன் நன்மைகள்:
* அந்தரங்க பகுதியின் முழுமையான பராமரிப்பை இன்டிமேட் வாஷ் உறுதி செய்கிறது
* எந்தவொரு தொற்று அரிப்புக்கும் சிகிச்சையாக இன்டிமேட் வாஷ் பயன்படுகிறது. மீண்டும் தொற்று ஏற்படாமல் தடுக்கிறது
* அந்தரங்க பகுதியில் வீசும் தேவையற்ற துர்நாற்றத்தைத் தடுக்கிறது
* அந்தரங்க பகுதியில் ஏற்படும் எரிச்சல் மற்றும் வீக்கத்தைக் குறைக்கிறது மற்றும் பாதுகாப்பாக வைத்திருக்கிறது
* இன்டிமேட் வாஷை தேர்ந்தெடுக்கு ம்போது லேசான, தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் இல்லாத மற்றும் செயற்கை வண்ணங்கள் மற்றும் செயற்கை சேர்க்கைகள் இல்லாதது என்பதை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும்.
* அந்தரங்கப் பகுதிகளில் சுகாதாரத்தை பேண இன்டிமேட் வாஷ் தவிர டிரிம்மிங், ஷேவிங் மற்றும் க்ளென்சிங் போன்றவையும் தேவை. உடலின் மற்ற பகுதிகளைப் போலவே, அந்தரங்க உறுப்புகளுக்கும் சமமான கவனமும் கவனிப்பும் தேவை என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Intimate Hygiene, Men Health